December 17, 2010

புகைப்படம் - 18-12-2010

மாமல்லபுரம்  திவ்யா  தோட்டத்தில்...

December 07, 2010

புகைப்படம் - 08-12-2010

உங்கள் விமர்சனங்களைக் குத்துங்க எசமான் குத்துங்க... நன்றி...

November 19, 2010

புகைப்படம் - 19-11-2010

வீட்டு மாடியில். ...

November 13, 2010

புகைப்படம் - 14-11-2010

குழந்தைகள் தினமாம்!!!!வருங்கால இந்தியாவுக்கு, பாதுகாப்பான எதிர்காலமும் முறையான கல்வியும் கிடைக்கட்டும். ...

October 18, 2010

புகைப்படம் - 19-10-2010

எங்கள் வயலில் எடுத்தப் புகைப்படங்கள்.  ...

October 14, 2010

காமன்வெல்த் விளையாட்டு 2010 - பூங்கொத்துகளும் ஒரு சவுக்கடியும்!

பத்தொன்பதாவது காமன்வெல்த் போட்டிகள் மிகக் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கின்றன. மிக மோசமான நிகழ்வுகளுடன் ஆரம்பித்த இந்த விளையாட்டுத் திருவிழா நல்லவிதமாக நடந்து முடிந்திருப்பது நிறைவைத் தருகிறது. விருந்தோம்பலுக்குப் பெயர் போன நாடு இந்தியா எனபதுடன், ஊழல், அலட்சியம் மலிந்த தேசம் என்பதையும் இன்னும் ஒரு முறை உலகுக்குச் சொல்லிப் பெருமைப் பட்டுக்கொண்டோம். பிற்பாடு மிகப் பிரம்மாண்டமாக ஆரம்பித்த போட்டிகள் முன்பு நடந்திருந்த நிகழ்வுகளை மறக்கடித்தன. தடைகளை மீறி சாதனை படைக்கும் நாடு இந்தியா என்ற குரல் உலக அரங்கில் ஓங்கி ஒலித்தது. வெற்றியின் பின்னாலிருக்கும் ஒவ்வொருவருக்கும் நன்றிகள்.  அடுத்தது விளையாட்டு வீரர்கள். 100 பதக்கங்கள் என்ற லட்சியத்துடன் களமிறங்கிய வீரர்கள் சொன்னதை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். இறுதிப் போட்டியில் இந்திய ஹாக்கி அணியின் படு தோல்வி தனிப்பட்ட முறையில் வருத்தத்தைத்...

October 10, 2010

கிராஸ் ப்ராஸஸிங்க் - ஃபோட்டோஷாப்.

ஃபோட்டோகிராஃபியில் கிராஸ் ப்ராஸஸிங் என்றொரு டெக்னிக் இருக்கிறது. ஒவ்வொரு ஃபிலிமுக்கும் ஒவ்வொரு கெமிக்கலை வைத்துப் ப்ராஸஸ் செய்வார்களாம். அவ்வாறில்லாமல் ஒரு ஃபிலிமுக்கு வேறு விதமான கெமிக்கலை பயன்படுத்திப் ப்ராஸஸ் செய்யும் போது வித்தியாசமான எஃபெக்ட் கிடைக்கிறது.  தற்செயலாகக் கண்டறியப்பட்ட இந்த எஃபெக்ட் இன்று நிறைய தீம்களில் பயன்படுத்தப்படுகிறது. ஃபிலிம் ஃபோட்டோக்கள் சரி.. டிஜிட்டலில் எப்படி இந்த எஃபெக்டைப் பெறுவது? இருக்கவே இருக்கிறது வளைவுகள்.. அதாவது Curves!!!!! 1) படத்தை PS ல் திறவுங்கள் 2) Layer > New Adjustment Layer > Curves மூலம் ஒரு adjustment Layer ஐத் திறக்கவும். 3) இனி சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறங்களின் Curves ஐ பின்வருமாறு...

October 09, 2010

ச்சும்மா...

...

October 01, 2010

எந்திரன் மேனியா

முதலில் அமரர் சுஜாதா அவர்களைப் பற்றி... கதையின் அடிநாதம் அவரின் என் இனிய இயந்திராவை ஒட்டியே இருக்கிறது. ”செயற்கை அறிவுடன் கூடிய இயந்திரன், மனிதன் போல் சிந்திக்க ஆரம்பித்தால்?” என்ற கேள்வியை வைத்து அவர் எழுதிய கதை என்று பிரம்மாண்டமாக, எந்திரனாக வளர்ந்திருக்கிறது. அஞ்சலிகள்!!! அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.  இனி படம்...  இந்திய ராணுவத்துக்கு அர்ப்பணிப்பதற்காக ஒரு மனித ரோபோவை (சிட்டி - ரஜினி)உருவாக்குகிறார் டாக்டர் வசீகரன் (ரஜினி). அந்த ரோபோவுக்கு மனித உணர்வுகள் கற்பிக்கப்படுகின்றன. பிறகு சிட்டி, டாக்டரின் காதலி சனா (ஐஸ்) மீது காதல் கொள்கிறது. இடையில் வில்லன்(டேனி), சிட்டியை தீய நோக்கத்துக்குப் பயன்படுத்த நினைக்கிறார். அதன் பிறகு...

September 29, 2010

முகங்கள்

”மச்சி, போர்ட்ராய்ட் உனக்கு நல்லா வருது” என்றான் நண்பன்.. மற்ற படங்கள் எல்லாம் சகிக்கவில்லை போல....  அதனால் இந்த பதிவில் நான் எடுத்ததில் எனக்குப் பிடித்த முகங்கள்...  1) திவ்யாக்குட்டி..  2) திவ்யா அம்மாவுடன். 3) நண்பன் விமல் 4) சித்தார்த் (எ) வசந்த். 5) மாடல்(!) வெங்கி... 6) கடைசியாக எனக்குப் பிடித்த கருப்பு வெள்ளையில், மாமல்லபுரத்திலிருந்து ஒரு ஆயா... வழக்கம்போல் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்ற...

September 06, 2010

Maze மற்றும் உங்களுக்கு ஒரு புதிர்

முதன் முதலில் Maze எனக்கு அறிமுகமானது ஏதோ ஒரு வார இதழ் மூலம்.  கேரட்டை அடைய முயலுக்கு வழிகாட்டுங்கள் அல்லது திருடனைப் பிடிக்கக் காவலருக்கு உதவுங்கள் என்ற ரீதியில் தான் இருக்கும் அவை. எனக்கும் இந்த அளவிலான அறிமுகம் தான் இருந்தது ஒரு நாவலைப் படிக்கும் வரை.  புத்தகங்களில் இருக்கும் புதிர்களில், மொத்தப் புதிரின் ஏரியல் வியூ இருக்கும். எத்தனை முறை வேண்டுமானாலும் தவறு செய்யலாம். திருத்தலாம். மாறாக, பத்தடி உயரம் கொண்ட சுவர்களால் சூழப்பட்ட, குறுகலானஒரு பாதையைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். கொஞ்ச தூரம் பயணம் செய்தவுடன் ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகள் நேர்ப்படும். சரியான வழியைத் தேர்வு செய்ய வேண்டும். கொஞ்ச தூரத்தில் மேலும் சில சாய்ஸ்கள். சாதாரண...

September 03, 2010

ஃபோட்டோஷாப் - கலர் கரெக்‌ஷன்.

சில புகைப்படங்கள் ஆர்ப்பாட்டமான வண்ணங்களில் அழகு. சில கருப்பு வெள்ளையில்... மூன்றாவதாக, ப்ரைட் கலர்களும் இல்லாமல் முழுக்க கருப்பு வெள்ளையாகவும் இல்லாமல் வெளிறிப் போனது போல ஒரு எஃபெக்டில் இருக்கும் படங்களுக்கும் தனி அழகு இருக்கத்தான் செய்கிறது. தனிமையான கட்டிடங்கள் ம்ற்றும் எல்லாவிதமான போர்ட்ராய்ட்களுக்கு ஏற்றது இந்த எஃபெக்ட். இந்த எஃபெக்ட் கொண்டுவர வழக்கம் போல நிறைய முறைகள் இருக்கின்றன. Saturation ஐக் குறைக்கலாம். இன்னும் Gradiant Map இருக்கிறது. ஆனால் நாம் செய்யப் போகும் இந்த முறையில் ஒரு நல்ல விஷயம் இருக்கிறது. படத்தின் Contrast அப்படியே மெய்ண்டெய்ன் செய்யப்படுகிறது. இனி வழிமுறை: 1) படத்தை PS ல் திறவுங்கள். 2) Channels pallet இல் RGB லேயர்...

August 24, 2010

புகைப்படம் - 25-08-2010

தமிழ்நாடு தான். எந்த ஊர் என்று தெரிகிறதல்லவா? கடைசி படத்தில் க்ளூவும் இருக்கிறது. நன்றி ஹ...

August 23, 2010

எம்.பிக்கள் சம்பளம் - ஒரு அனல் மூச்சு.

ஒரு வழியாக குட்டிக்கரணம் அடித்து 500 சதவீத சம்பள உயர்வை வாங்கியே விட்டனர் எம்.பிக்கள். இப்போது மாதச் சம்பளம் 1.6 லட்சம். சம்பள உயர்வு வேண்டும் என கோஷம் எழுப்பி, அவையை முடக்கி வாங்கிய உயர்வு இது.  இன்று லஞ்ச்சில் இதைப்பற்றி தான் பேச்சு. அந்த 500 சதவீத உயர்வு எல்லோரிடமும் ஒரு அனல் மூச்சைக் கிளப்பிவிட்டிருந்தது. :)  சாதாரண கம்ப்யூட்டர் ப்ரோக்ராமர் வேலையில், 6%, 8% உயர்வு வாங்கவே நிர்ணயிக்கப்பட்ட Goals எல்லாம் முடித்திருக்க வேண்டும், சர்டிஃபிகேஷன் ஏதாவது எழுதியிருக்க வேண்டும், Value-Add ஏதாவது காட்ட வேண்டும், இப்படி ஏகப்பட்ட ஏகப்பட்ட மதிப்பீட்டு முறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு துறையிலும் அதற்குத் தகுந்தவாறு வழிமுறைகள் கட்டாயம் இருக்கும். ஒரு தொகுதியின் பிரதிநிதி என்பவர் ஒரு பெரிய நிறுவனத்தின் ஒரு துறையின் தலைவர் போலக் கொள்ளலாமா? கொண்டால் அந்தப் பதவிக்கு ஏன் மதிப்பீட்டு முறையில் சம்பள...

August 18, 2010

அரட்டை - 19-08-2010

நண்பர்களுடனான எனது சனிக்கிழமைகள் விசேஷமானவை. மறுநாள் காலை நான்கு மணி வரை நீளும் இரவுகளை, பேசியேத் தீர்ப்போம். அரிதாக உருப்படியான விஷயங்கள் விவாதிக்கப்படுவதுண்டு. சமீபத்தில் விவாதிக்கப்பட்ட விஷயம் G.D.P (Gross Domestic Product). மொத்த உள்நாட்டு உற்பத்தி. இந்தியாவின் ஜி.டி.பி விகிதம் சரியான முறையில் கணக்கிடப்படுவதில்லை என்று பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கு ஜி.டி.பி பற்றி ஒரு இழவும் தெரியாத்ததால் புரிந்தும் புரியாமலும் கேட்டுக்கொண்டிருந்தேன். அன்று மழை பெய்து ஓய்ந்திருந்தது. சிட்டி சென்டரிலிருந்து அறைக்கு வந்து கொண்டிருந்தோம். ஜி.டி.பி யில் ஆரம்பித்த விவாதம் பிளாட்ஃபார்ம் வாசிகள் பக்கம் திரும்பி, அரசின் மெத்தனத்தைச் சாடி, இறுதியாக "அரசாங்கம் இருக்கட்டும்,...

August 17, 2010

நான் மகான் அல்ல!

1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்? மகேஷ் : ரசிகன். 2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?   மகேஷ் என் பெயர். ரசிகன் நான் படித்து வாங்கிய பட்டம்.  :)  3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.. அது ஒரு சோக தருணம். (உங்களுக்குத் தான்) 4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?  எப்பயாச்சும் எழுதுவதே கஷ்டமாயிருக்கிறது. இதில் பிரபலம் வேறா? நெக்ஸ்ட்...  5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்? அவ்வப்போது. பகிர்ந்துகொள்ளும் போது சந்தோஷம் இரட்டிப்பாகுமாம். ஆகிறதா என்று பார்க்க! 6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா? நண்பர்களைச்...

August 10, 2010

லைட் ரூம்

(ஜில்லு, தலைப்பைப் பார்த்துட்டு தப்பா நினைக்கக் கூடாது.) ஃபிலிம் நெகட்டிவ்களை ப்ராசஸ் (சரியாகச் சொன்னால் டெவலப்) செய்யும் இடம் டார்க்ரூம் என்று தெரியும். அதன் அடிப்படையில், டிஜிட்டல் படங்களைப் ப்ராசஸ் செய்ய லைட்ரூம் என்றொரு மென்பொருள் இருக்கிறது. இப்பொழுது தான் உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறேன். Exposure, Clarity, brightness, Contrast என ஏறக்குறைய அனைத்து பண்புகளையும் சுலபமாக மாற்றிக்கொள்ள் முடிகிறது. இதன் முக்கிய அம்சமே Clarity தான். வழக்கமாக படத்திலுள்ள ஒளி இரைச்சலை (Noise) நீக்க முயன்றால், “ஙே” என்றிருக்கும். ஆனால் இங்கு படத்தின் தரத்துக்கு எந்தப் பங்கமுமின்றி Clarity ஐ அதிகப்படுத்த முடிகிறது. இன்னொரு முக்கிய அம்சம் Presets. ஃபோட்டோஷாப்பில் முக்கி...

August 05, 2010

எந்திரன் - முன்னோட்டம்.

சுஜாதாவின் "என் இனிய இயந்திரா" படித்திருக்கிறீர்களா? அழகான அறிவியல் கதை. நிலா என்ற அழகியும் ஜீனோ என்ற இயந்திர நாயும் சேர்ந்து கொண்டு செய்யும் சாகசங்கள் தான் கதை. ஜீனோ அநியாயத்துக்குப் புத்திசாலி. புத்தகம் படிக்கும், கவிதை நெய்யும், லாஜிக்கல் ரீசனிங்கில் வித்தை காட்டும். எல்லாவற்றிற்கும் மேலாக உணர்வுகள் என்ற உன்னதத்தைப் பெற்று படைப்பின் உச்சத்தை அடையும். தானாகவே சிந்திப்பது, நிலாவின் மேல் மையல் கொள்வது, தடவிக்கொடுத்தலில் இருக்கும் அன்பை உணர்வது, பயம் கொள்வது என்று அட்டகாசம் செய்யும். இயந்திரன் என்ற பெய்ரைக் கேட்டவுடன் அப்படிப்பட்ட செயற்கை அறிவுடன் கூடிய இயந்திரம் செய்யும் சாகசங்கள் தான் படம் என்று தெரிந்தது. பாடல்களும் ட்ரெய்லரும் அதை உறுதிப்படுத்துகின்றன. பார்க்கலாம் அறிவியலும் மசாலாவும் ஒன்று சேரப் போகின்றன. 160 கோடி பட்ஜெட் என்கிறார்கள். சன் பிக்சர்ஸ் செய்யலாம். ரஜினியின் முகத்தை விதவிதமான...

July 25, 2010

அசின், இலங்கை, நடிகர் சங்கம்,மீனவர்கள்....

அசின் சர்வதேசத் திரைப்பட விழாவுக்காக இலங்கை சென்று வந்தாலும் வந்தார், அந்த விஷயத்தை வைத்து ஏகப்பட்ட பேர் தமிழ்ப்பற்றை வெளிக்காட்டிக்கொண்டிருந்தார்கள். அசினை தமிழ் சினிமாவை விட்டே ஒதுக்கி வைக்க வேண்டும், தடை செய்ய வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். மீனவ நண்பர்கள் கூட விவேக் ஓப்ராய் மற்றும் அசினுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருக்கிறார்கள். இந்நிலையில் இன்று கூடிய நடிகர் சங்கத்தில் இலங்கை செல்ல நடிகர் நடிகைகளுக்குத் தடை விதிக்கக் கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகப் படிக்கக் கிடைத்தது. Do I miss something? என்னவாயிற்று தமிழுணர்வு? அடப்போங்கப்பா.... நாமும் நம் தமிழுணர்வும். கேட்க வேண்டியவர்களைக் கேட்க முடியவில்லை, அசினுக்கும் விவேக் ஓப்ராய்க்கும் தடை விதிக்கிறார்களாம். சாவிலும் அரசியல் ஆதாயம் தேடும் நம்மவர்கள் போக்கு, அருவருப்பாயிருக்கிறது. What say...

July 19, 2010

பார்டர் கட்டலாம் வாங்க - ஃபோட்டோஷாப்

பார்டர் என்றாலே பிரச்சனை தான். ஆனால் புகைப்படங்களைப் பொறுத்தவரை பார்டர் ஒரு படத்தை எடுப்பாக்கிக் காட்டும். உதாரணத்துக்கு ஒரு ஆறு அல்லது கடலின் புகைப்படம்.... பார்டர் இல்லாமல் தண்ணீர் படத்தைவிட்டு வழிந்தோடும் உணர்வைத் தரும். (என்னது அப்படியெல்லாம் இல்லையா? எனக்கு அப்படித் தான் தோன்றித் தொலைகிறது). போகட்டும்! பார்டருடன் கூடிய புகைப்படம் தனி அழகு தான். ஃபோட்டோஷாப்பில் மிக எளிய டெக்னிக் மூலம் இந்த பார்டரைக் கொண்டு வரலாம். 1) தேவையான படத்தை PS இல் திறக்கவும். படத்தின் சைஸ் தெரிந்திருக்க வேண்டும். 2) கேன்வாஸ் சைசை தெரிவு செய்து கொள்ளுங்கள். Image > Canvas Size 3) கீழ்கண்ட உரையாடல் பெட்டி திறக்கும். பார்டரின் நீள அகலங்களை Width மற்றும் Height...

Pages 311234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More