
முதன் முதலில் Maze எனக்கு அறிமுகமானது ஏதோ ஒரு வார இதழ் மூலம். கேரட்டை அடைய முயலுக்கு வழிகாட்டுங்கள் அல்லது திருடனைப் பிடிக்கக் காவலருக்கு உதவுங்கள் என்ற ரீதியில் தான் இருக்கும் அவை. எனக்கும் இந்த அளவிலான அறிமுகம் தான் இருந்தது ஒரு நாவலைப் படிக்கும் வரை.
புத்தகங்களில் இருக்கும் புதிர்களில், மொத்தப் புதிரின் ஏரியல் வியூ இருக்கும். எத்தனை முறை வேண்டுமானாலும் தவறு செய்யலாம். திருத்தலாம். மாறாக, பத்தடி உயரம் கொண்ட சுவர்களால் சூழப்பட்ட, குறுகலானஒரு பாதையைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். கொஞ்ச தூரம் பயணம் செய்தவுடன் ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகள் நேர்ப்படும். சரியான வழியைத் தேர்வு செய்ய வேண்டும். கொஞ்ச தூரத்தில் மேலும் சில சாய்ஸ்கள். சாதாரண...