
"நைட் ஃபுல்லா கனவுல நீதாண்டா குட்டி" - காதலனைக் கொஞ்சும் காதலி."செத்துப்போன உன்ற அப்பா கெனாவுல வந்து கூப்டுறாரு" - மகனிடம் புலம்பும் மூதாட்டி"மச்சி, 2 பேப்பர் புட்டுக்குற மாதிரி கனவு வந்துச்சுடா" - நண்பனுக்கும் சேர்த்து பீதியைக் கிளப்பும் மாணவன்"கனவு காணுங்கள்" - அப்துல் கலாம்"அது ஒரு கொடுங்கனவு" - காமம் பற்றி ஒரு எழுத்தாளர். இப்படி எப்போதாவது கனவுகளைப் பற்றி நாம் பேசுவதுண்டு. ஆனால் என் தோழி சதா சர்வ காலமும் கனவைப் பற்றித் தான் பேசிக்கொண்டிருக்கிறாள். சைக்காலஜி படிக்கிறாள். "கனவுகள் பற்றிய ப்ராஜக்ட் செய்யலாம் என்று இருக்கிறேன்" என்கிறாள். கனவுகள் பற்றி அவள் சொன்ன தகவல்கள் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தன. துரித கண்ணசைவு (Rapid Eye Movement - REM)...