திரிகள்...
நீ இல்லை என்ற நினைவிலேயே
தீர்ந்து போகுதடி என் காலம்...
தெரிந்தே எரிந்து இறந்து போகும்
திரிகளைப் போல...
நினைவுகள்...
உன் நினைவுகள்
அத்தனை சுகமானது...
கடுமையாய் உழைத்த ஒரு நாளின்
இரவின் உறக்கம் போல...
கவிதை...
நீ கேட்காமல் போனாய்...
நான் எழுதாமல் போனேன்...
இல்லாமல் போனது ஒரு கவிதை...
பொம்மை...
தூக்கி எறிவதை பற்றிக்
குழந்தை கவலைபடாது...
விழுவதை பற்றியோ,
உடைவதை பற்றியோ
பொம்மை வருத்தபடாது...
குழந்தை நீ...
பொம்மை நான்...
{}
இவை நண்பர் திருமுருகன் கவிதைகள். நானெல்லாம் கவிதையெழுதினால் நாடு தாங்காது என்பதாலும், என் வலைப்பூவில் கவிதை இல்லையென்றால் வரலாறு தப்பாக பேசும் என்பதாலும் அவர் கவிதைகளை இங்கே பதிகிறேன். பார்த்து போட்டு கொடுங்க சாமியோவ...