January 17, 2010

ஆயிரத்தில் ஒருவன்

ஸ்டில்ஸ், பாடல்கள், ட்ரெய்லர் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளைக் கிளப்பிய படம். அந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்திருக்கிறதா என்றால் சொல்லத் தெரியவில்லை. என்னைக் கேட்டால் "Maybe yes!". நாடுகடந்து போன சோழர் பரம்பரை, பாண்டியர்களின் வன்மம், தொல்பொருள் ஆராய்ச்சி எனத் தமிழ் சினிமா அதிகம் கண்டிராத கதைக்களம். பிரம்மிப்பாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால் சில இடங்களில் சொதப்பலாக.
800 வருடங்களுக்கு முன் நாடுகடந்து தலைமறைவாகும் சோழர்கள் வியட்னாம் அருகில் ஒரு தீவில் தஞ்சமடைகிறார்கள். போகும்போது பாண்டியர்களின் சிலை ஒன்றைத் தள்ளிக்கொண்டு போகிறார்கள். பாண்டியர்கள் பின்தொடர்ந்து வராமலிருக்க ஏழு பொறிகளை(Traps) ஏற்படுத்திவிட்டுப் போகிறார்கள். 800 வருடங்கள் கழித்து, இன்றும் அந்த சோழ இளவரசன் தஞ்சமடைந்த இடம் தேடப்படுகிறது. அந்த இடத்தைத் தேடப்போகும் பிரதாப் போத்தன் காணாமற்போய்விடுகிறார். அவரையும், அந்த இடம் மற்றும் சிலையையும் தேடிக்கொண்டு ஆர்க்கியாலஜி டிப்பார்ட்மென்ட் ஹெட் ரீமாசென் தலைமையில் குழு ஒன்று கிளம்புகிறது. குழுவில் பிரதாப் மகள் ஆன்ட்ரியா, ஹெல்ப்பராக கார்த்தி ஆகியோர் இடம்பெறுகிறார்கள். ஏழு தடைகளைத் தாண்டி அந்த இடத்தை அடையும் போது, பார்த்திபன் தலைமையில் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் சோழர்களைக் கண்டுபிடிக்கிறார்கள். இடைவேளை!சும்மா சொல்லக்கூடாது. முதல் பாதி ராக்கெட் வேகம். இதுவரை சொன்னதெல்லாம் முதல் பாதி தான். சில விஷூவல் மொக்கைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் நன்றாகவேயிருக்கிறது. விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை.  சோழர்களைப் பார்த்தவுடன் ஒரு ட்விஸ்ட். அப்புறம் வேகம் குறைந்து விடுகிறது. ஆனாலும் கடைசி வரை ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. இடைவேளைக்குப் பின் எல்லோரும் தமிழில்(!) பேசுகிறார்கள்.
இரண்டாம் பாதி முழுக்க ஒரே கூச்சலாக இருக்கிறது. மக்கள் அல்லது போர். சண்டைக்காட்சிகளின் நேரத்தைக் குறைத்து கொஞ்சம் சத்தத்தையும் குறைத்திருந்தால் கூட போதும். இரண்டாம் பாதி வேகமெடுத்திருக்கும். முக்கியமாக அந்த கிளாடியேட்டர் ரக சண்டைக்காட்சி.சோழர்களுக்கு (தமிழர்களுக்கு) இந்த மாதிரி அடுத்தவன் சாவை ரசிக்கும் வக்கிர மனப்பான்மை இருக்குமா என்று ஒரு கணம் தோன்றியது. உடனே அந்த சந்தேகம் தீர்ந்தது. இரண்டாம் பாதி முழுக்க எனக்கு ஈழத்தை நினைவூட்டுகிறது மக்களே!ரீமாசென்... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... யப்பா! படம் முழுக்க அவர் ஆதிக்கம் தான். தன் குழுவினர் மீது இருக்கும் கண்ட்ரோல், பார்த்திபனுடன் சமர் செய்யும் அந்த கம்பீரம்... எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. சில இடங்களில் விரசம் தூக்கலாக இருக்கிறது. "செம கட்ட இல்ல ?" இது அவரே சொன்ன டயலாக்!பார்த்திபன் : வறுமையின் வாடும் சோழர்களின் தலைவன். இறுதிக்காட்சிகளில் நெகிழவைத்துவிடுகிறார்.கார்த்தி : ஹெல்ப்பர். ந‌க்க‌ல், வழிசல், தெனாவெட்டு என ஒரிஜின‌ல் செல்வ‌ராக‌வ‌ன் ப‌ட ஹீரோ.ஆண்ட்ரியா ‍ ஆர்க்கியாலஜி பொண்ணு. வழியிலிருக்கும் பொறிகளைக் கண்டுபிடிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறார். அதையும் பாவம் கலாய்த்துவிடுகிறார்கள். குல்ஃபி ஃபிகராக இருந்தவரை ஆயா மாதிரி உட்காரவைத்துவிடுகிறார்கள்.செல்வாவைப் பாராட்டியே ஆக வேண்டும். வழக்கமான காதலன் காதலி, தாதாயிசம், யதார்த்தம் வகையறாக்களுக்கு மத்தியில் ஒரு ஃபான்டஸிக் கதையை முயற்சி செய்ததற்காக!வசனங்கள் செம ஷார்ப். குறிப்பாக இரண்டாம் பாதியில் ஏராள தாராளமாக "வார்த்தைகள்" விழுகின்றன.  "நெல்லாடிய" பாடலுக்கு யார் சார் நடனம் ? "ஆளான தாமரை" பாடலுக்கு போட்ட மாதிரி இருக்கிறது.சிலபல சொதப்பல்கள் இருந்தாலும் நம்பிப் பார்க்கலாம். எப்படியும் ரீ‍எடிட் செய்துவிடுவார்கள்.டிஸ்கி : படம் முடிந்து என் நண்பன் சொன்ன வசனம் "இதெல்லாம் வேலைக்கே ஆவாது மச்சி. நம்ம ஆளுங்களுக்கு ஸ்ட்டார்டிங்க்ல லவ் பண்ண ஆரம்பிச்சு, கிளைமாக்ஸ்ல ஒன்னு சேருற மாதிரி கதை கொடுத்தாத் தான் பார்ப்பாங்க" ரைட்டு!Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More