
ஆக்ஸிமொரான் தெரியுமல்லவா? தமிழில் முரண்தொடை என்பார்கள்(எச்சூஸ்மி மிஸ்டர் ராஜு... "கிரண் தொடை தெரியும். அதென்ன முரண்தொடை" என்று கேட்கக்கூடாது!). ஒன்றுக்கொன்று எதிரான பொருள் கொண்ட இரு வார்த்தைகள் ஒன்றாக வந்து ஒரு பொருளைத் தருவது. உதாரணத்துக்கு, நடைபிணம். தின வாழ்க்கையில் நாமும் நிறைய உபயோகித்திருப்போம். இயல்பான நடிப்பு, சிறிய கூட்டம், முழுதாய் காலி, வெட்டிவேலை, தெளிவாக் குழப்பிட்டான், சற்றே அதிகம்... இப்படி நிறைய. செய்யுளெல்லாம் கூட இருக்கிறதாம். சினிமா பாட்டுக்கள் கூட! வாசமில்லா மலரிது நினைவிருக்கிறதா?
ஆனால் நம் ஆதி அவர்களைக் கேட்டால் உலகிலேயே சிறந்த முரண்தொடை "Happily Married" தான் என்பார்... :)
{}
செம்மொழியான தமிழ்மொழியாம் - கேட்டீர்களா?...