மதிப்புக்குரிய கவிஞர் தாமரைக்கு,நலமா?குமுதம் வெப் டி.வியில் தங்களது பேட்டியை பார்க்க நேர்ந்தது. ஈழப் பிரச்சனையில் தனது நியாயமான கருத்துக்களையும், ஆதங்கங்களையும் முன்வைத்திருந்தீர்கள். அதன் பின் கண்ணகி பிறந்த மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம் என்ற தலைப்பில் ஒரு கவிதை வாசித்தீர்கள். அந்த கவிதை.கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!ஏ இந்தியாவே...!எத்தனை கொடுமைகள் செய்துவிட்டாய் எங்கள் தமிழினத்திற்கு...எத்தனை வழிகளில் கெஞ்சியும் கூத்தாடியும்காலில் விழுந்தும் கதறியும் கொளுத்திக் கொண்டு செத்தும் தீர்ந்தாயிற்று...எதுவுமே காதில் விழாத உங்களுக்குஇன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்...பட்டினியால் சுருண்டு மடிந்தபிஞ்சுக் குழந்தைகளின் படத்தைப் பார்த்துஅழுது வீங்கிய கண்களோடும்அரற்றிய துக்கத்தோடும்களைந்த கூந்தலோடும்வயிறெரிந்து இதோ விடுகிறேன்..கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!குறள் நெறியில் வளர்ந்து...