ஒரு வழியாக குட்டிக்கரணம் அடித்து 500 சதவீத சம்பள உயர்வை வாங்கியே விட்டனர் எம்.பிக்கள். இப்போது மாதச் சம்பளம் 1.6 லட்சம். சம்பள உயர்வு வேண்டும் என கோஷம் எழுப்பி, அவையை முடக்கி வாங்கிய உயர்வு இது.
இன்று லஞ்ச்சில் இதைப்பற்றி தான் பேச்சு. அந்த 500 சதவீத உயர்வு எல்லோரிடமும் ஒரு அனல் மூச்சைக் கிளப்பிவிட்டிருந்தது. :)
சாதாரண கம்ப்யூட்டர் ப்ரோக்ராமர் வேலையில், 6%, 8% உயர்வு வாங்கவே நிர்ணயிக்கப்பட்ட Goals எல்லாம் முடித்திருக்க வேண்டும், சர்டிஃபிகேஷன் ஏதாவது எழுதியிருக்க வேண்டும், Value-Add ஏதாவது காட்ட வேண்டும், இப்படி ஏகப்பட்ட ஏகப்பட்ட மதிப்பீட்டு முறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு துறையிலும் அதற்குத் தகுந்தவாறு வழிமுறைகள் கட்டாயம் இருக்கும். ஒரு தொகுதியின் பிரதிநிதி என்பவர் ஒரு பெரிய நிறுவனத்தின் ஒரு துறையின் தலைவர் போலக் கொள்ளலாமா? கொண்டால் அந்தப் பதவிக்கு ஏன் மதிப்பீட்டு முறையில் சம்பள...