
புடுங்குவதற்கு ஆணிகள் குறைவாக இருந்த போது வலையில் மேய்ந்துகொண்டிருந்தேன். அப்போது பழைய செய்தி ஒன்று கண்ணில் பட்டது. முதலில் நம்பவே முடியவில்லை. அப்படியே ஷாக்காயிட்டேன்!!! கண்களைத் தேய்த்துவிட்டுக் கொண்டு பார்த்த போது உண்மைதான் என்று தெரிந்தது."கானல் நீர்" தந்த காவியத்தலைவன், கலைத்தாயின் கைக்குழந்தை, அஞ்சாநெஞ்சன், வீரத்தளபதி ஜே கே ரித்தீஷ் "லகான்" படத்தை ரீ-மேக்கப்போகிறார்.இப்போதைக்கு தமிழில் அதிக படங்கள் வைத்திருக்கும் ஒரே நடிகர் தளபதி தான் :). தில்லு முல்லு, தளபதி, வேட்டைப்புலி என்று மூன்று படங்கள் இவர் கைவசம் உள்ளன. இவற்றை முடித்துவிட்டு லகான் ரீ-மேக்கில் நடிப்பார் என்று தெரிகிறது. ரீ-மேக் உரிமை குறித்து ஜே கே ஆர் தரப்பினரும், அமீர்கான் தரப்பினரும்...