
நானா படேகர், ஜான் ஆப்ரகாம் நடித்த "Taxi No 9211" என்ற ஹிந்தி படத்தின் ரீ-மேக் தான் இந்த படம் (ஹிந்தியிலேயே ஒரு ஆங்கில படத்தை தழுவி தான் எடுத்தார்கள் என்று கேள்வி!). நானா படேகர் நடித்த பாத்திரத்தில் பசுபதி. அவர் மனைவியாக சிம்ரன். ஜான் ஆப்ரகாம்க்கு பதில் "அஞ்சாதே" அஜ்மல். அவர் காதலியாக மீனாக்ஷி.முதலில் வழக்கமான நாயகன்-நாயகி டூயட், அப்பாவை கொன்றவர்களை பழிவாங்குவது, டான்ஸ் ஆட வெளிநாட்டுக்கு போவது என்று போர் அடிக்காமல் இருந்ததற்காகவே டைரக்டருக்கு ஒரு "ஜே" போட்டு விடலாம். இனி சுருக்கம். பணக்காரர்கள் மட்டுமே வாழவேண்டும் என்று நினைக்கும் ஒரு பணக்கார இளைஞன். பணக்காரர்களால் தான் வாழ முடியவில்லை என்று நினைக்கும் ஒரு டாக்ஸி டிரைவர். இருவரும் சந்திக்கிறார்கள்....