
மல்லியம்மன் துர்க்கம்... ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலுருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மலைக் கிராமம். அந்த கிராமத்தை அடைய ஒரு 8. கி.மீ மலையேற வேண்டியிருக்கும். மின்சாரம், சாலை வசதி எதுவும் இல்லாத ஒரு கிராமம். மாதம் ஒரு முறை மட்டுமே நடக்கும் ஆரம்பப் பள்ளி வன அலுவலர்களுக்கும், காவலர்களுக்கும் விருந்தினர் இல்லம்.இருளில் மூழ்கிப் போயிருந்த அந்த கிராமத்தில், இன்று சூரிய சக்தியில் இயங்கும் தெரு விளக்குகள் அமைக்கப்ப்ட்டுள்ளன. பள்ளிக்கூடம் தொடர்ந்து நடக்க ஆவன செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பின்கண்ட செய்தியுடன் கூடிய பலகை அங்கு வைக்கப்பட்டுள்ளது. அது தவிர, அங்கு வசிக்கும் சிறார்களுக்கு விளையாட்டுப் பொருட்கள் விநியோகிப்பட்டுள்ளன....