
இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பல்ஜித் சிங் புனேவில் நடந்த பயிற்சியின் போது வலது கண்ணில் பலத்த காயமடைந்தார்.பல்ஜித்கோல் கீப்பரின் Reaction Time ஐக் குறைக்கும் பயிற்சிக்காக கோல்ஃப் பந்து உபயோகப்படுத்தப்படும். இந்த பயிற்சியின் போது தான் அந்த விபத்து ஏற்பட்டது. வலது கண்ணின் ரெட்டினா மற்றும் லென்ஸ் ஆகியவை பலத்த சேதமடைந்திருப்பதாக டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள். இந்திய அணியின் மிக சிறந்த ஆட்டக்காரர் பல்ஜித் சிங். இந்த விபத்து நிச்சயமாக அவருடைய ஹாக்கி கேரியருக்கு பலத்த அடி! அவருக்கு மட்டுமல்ல, இந்த சமயத்தில் இந்திய அணிக்கும் தான். ஏனென்றால், ஜூலை இறுதியில் தான் ஐரோப்பா டூர் போகிறது இந்தியா. இந்த மாதிரி சமயத்தில், அணியின் தூண் என்று சொல்லப்படுகிற...