
தன் காதலியைக் கொன்ற வில்லனை "இன்னும் இரண்டு மணி நேரத்தில் உன்னைக் கொல்லப் போகிறேன்" என்று டைம் சொல்லி சொல்லி பழிவாங்கும் கதாநாயகன், அதே அவகாசத்தில் நாயகனை கொல்லத்துடிக்கும் வில்லன் இவர்களுக்கு இடையே நடக்கும் விறு விறு ரேஸ் தான் படம். ரொம்ப நாளைக்கு அப்புறம் வேகமான திரைக்கதையுடன் கூடிய படம். டைட்டில் போடும் போதே எதிர்பார்ப்பை கிளப்பிவிடுகிறார்கள். படமும் அதை ஓரளவிற்கு பூர்த்தி செய்கிறது. ஒவ்வொரு அசைவையும் திட்டம் போட்டு நகர்த்தும் நாயகன் வில்லனின் புகழையும் பலத்தையும் அழிக்க ஆரம்பிக்கிறான். அதை சாமர்த்தியமாக எதிர்கொள்கிறான் வில்லன். இப்படி படம் முழுக்க பரபரப்பு. முழுப்படமே கிளைமாக்ஸ் எனும்போது விறுவிறுப்புக்கு சொல்லவும் வேண்டுமா? எஸ்.ஜே.சூர்யாவிற்கு...