கலைஞர் டி.வியில் "மானாட மயிலாட" நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும், ரஜினி,கமல் சுற்று, ரஹ்மான் சுற்று, நகைக்சுவை சுற்று இப்படி ஏதாவது ஒரு சுற்று இருக்கும். அதில் போன வாரம் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு நிறம் என்ற சரித்திரப் புதுமையான கான்செப்ட்டை எடுத்துக்கொண்டு உள்ளூர் ஆட்டக்காரர்கள் எல்லாம் திறமை காட்டிக்கொண்டிருந்தார்கள் (மறுஒளிபரப்பு என்று நினைக்கிறேன்). அதில் பச்சை நிறத்திற்கான பாடல் முடிந்ததும் "குஷ்பூ மேம்" ஐ கருத்து கேட்டார்கள். அவரும் தனக்கே உரிய தமிழில் ஆட்டக்காரர்களின் கெமிஸ்ட்ரி , ஃபிசிக்ஸ் பற்றி எல்லாம் சொல்லிவிட்டு, பச்சை நிறத்தை பற்றி ஆங்கிலத்தில் விளக்கம் கொடுத்தார். அதுவும் எப்படி ? "நம் தேசியக்கொடியில் கூட பச்சை நிறம் இருக்கிறது. அது அமைதியைக் குறிக்கிறது. அது மாதிரி நீங்..."என்னது? பச்சை நிறம் அமைதியைக் குறிக்கிறதா? அப்ப வெண்மை நிறம் எதற்கு? எங்கள்...