
இரத்தத்தையும், இடுப்புச்சதையையும் நம்பாமல் பிள்ளைப்பருவ சுகதுக்கங்களை மட்டுமே படமாக்கத்துணிந்த இயக்குனர் பாண்டிராஜ், தயாரித்த இயக்குனர் சசிகுமார் ஆகியோருக்கு முதலில் மனமார்ந்த பாராட்டுக்கள்.ஆறாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்களுக்கு இடையேயான சில்லுவண்டித்தனமான மோதல்கள் தான் படத்தின் கதை. அனேகமாக எல்லோருடைய வாழ்க்கையிலும் இந்த மாதிரி சம்பவங்கள் நடைபெற்று இருக்கும். ஜீவா, பக்கடா, குட்டி மணி ஆகிய மூவரும் உள்ளூர் தாதாக்கள். மூவரும் ஆறாம் வகுப்பு படிப்பவர்கள். இவர்களுக்கு பயந்து போலீஸ் பாதுகாப்பு கேட்கும் அளவிற்கு டெரரான ஆட்கள். "இவர்களை அடக்க ஒருவன் வராமலா போய்டுவான்? " என்று ஒரு பெருசு சொல்லும்போது நாயகன் (அன்புக்கரசு I.A.S - I.A.S...