
(ஜில்லு, தலைப்பைப் பார்த்துட்டு தப்பா நினைக்கக் கூடாது.)
ஃபிலிம் நெகட்டிவ்களை ப்ராசஸ் (சரியாகச் சொன்னால் டெவலப்) செய்யும் இடம் டார்க்ரூம் என்று தெரியும். அதன் அடிப்படையில், டிஜிட்டல் படங்களைப் ப்ராசஸ் செய்ய லைட்ரூம் என்றொரு மென்பொருள் இருக்கிறது. இப்பொழுது தான் உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறேன். Exposure, Clarity, brightness, Contrast என ஏறக்குறைய அனைத்து பண்புகளையும் சுலபமாக மாற்றிக்கொள்ள் முடிகிறது. இதன் முக்கிய அம்சமே Clarity தான். வழக்கமாக படத்திலுள்ள ஒளி இரைச்சலை (Noise) நீக்க முயன்றால், “ஙே” என்றிருக்கும். ஆனால் இங்கு படத்தின் தரத்துக்கு எந்தப் பங்கமுமின்றி Clarity ஐ அதிகப்படுத்த முடிகிறது. இன்னொரு முக்கிய அம்சம் Presets. ஃபோட்டோஷாப்பில் முக்கி...