
சமீபத்தில் தக்ஷிண் சித்ரா போயிருந்தோம். அங்கு எடுத்தப் புகைப்படங்களில் சில...
தக்ஷிண்சித்ரா தென்னிந்திய கலாச்சாரக் கிராமம் மாதிரி. நான்கு மாநிலங்களின் கிராமங்களில் இருந்த(!) வீடுகளின் மாதிரிகளைக் கட்டி வைத்திருக்கிறார்கள். பொம்மலாட்டம், தப்பாட்டம் போன்றவையும் நடத்துகிறார்கள்.
நிறைய கைவினைப் பொருட்கள் கிடைக்கின்றன. விலை கொஞ்சம் அதிகம் :)
இது கர்நாடகா வீடு ஒன்றில் சுட்டது.
ஒரு ராஜஸ்தானிய கைவினைப் பொருள் கலைஞர்..
பதினைந்து ரூபாய்க்குப் பானை செய்யவும் கற்றுத்தருகிறார்கள்.
90 ரூபாய்க்கு ஒரு நல்ல அனுபவம். விவசாயி, குயவர், வணிகர், கூடை முடைபவர், நெசவுத்தொழிலாளி போன்ற பலரது வீடுகள், அய்யனார் கோவில், படகு வீடு ஆகியவற்றின்...