ஒரு கமெர்ஷியல் படம் எடுக்கலாமா? முதலில் நல்ல பெயரை செலெக்ட் பண்ணிக்குங்க. ஒரு வாட்டசாட்டமான ஹீரோவையும், லூசுத்தனமான ஹீரோயினையும் ரெடி பண்ணிக்குங்க. ஐந்து பாடல்களை எழுதிக்குங்க. ஒன்று அல்லது இரண்டு வில்லன்களை ரெடி பண்ணிக்குங்க.ஏதாவது ஒரு செண்டிமெண்ட் வரணும் படத்துல. அப்புறம் காட்டமான பன்ச் டயலாக்ஸும். அட்வைஸ் டயலாக்ஸும் எழுதிக்குங்க. இப்ப ஹீரோவும் வில்லனும் மோதிக்கணும். அதுக்கு ஒரு காரணம் வேண்டும். அந்த கருமாந்தரத்தையும் ரெடி பண்ணிக்குங்க. மறக்காம ஹீரோ , வில்லன் சேசிங் சீன் ஒன்று வைக்கணும். இப்ப எல்லா விஷயத்தையும் அங்கங்க ஃபிட் பண்ணனும். இப்பவே கதை டெம்ப்ளேட் ஒன்று உருவாகியிருக்கும். ஹீரோயினை மறந்துவிட்டோமே! கப்பித்தனமான ரொமான்ஸ் சீன்ஸ் கொஞ்சம் ரெடி பண்ணிக்கிட்டு அங்கங்க அட்டாச் பண்ணிக்குங்க. ஒவ்வொரு சீன்ஸ் முடியறப்பவும் தலா ஒரு பாடலை இணைக்கவும். முதல் பாதியில் நிறைய பன்ச் டயலாக்ஸ் வர மாதிரியும்...