June 07, 2009

அரட்டை : 07-06-09

ஒரு கமெர்ஷியல் படம் எடுக்கலாமா? முதலில் நல்ல பெயரை செலெக்ட் பண்ணிக்குங்க. ஒரு வாட்டசாட்டமான ஹீரோவையும், லூசுத்தனமான ஹீரோயினையும் ரெடி பண்ணிக்குங்க. ஐந்து பாடல்களை எழுதிக்குங்க. ஒன்று அல்லது இரண்டு வில்லன்களை ரெடி பண்ணிக்குங்க.ஏதாவது ஒரு செண்டிமெண்ட் வரணும் படத்துல. அப்புறம் காட்டமான பன்ச் டயலாக்ஸும். அட்வைஸ் டயலாக்ஸும் எழுதிக்குங்க. இப்ப ஹீரோவும் வில்லனும் மோதிக்கணும். அதுக்கு ஒரு காரணம் வேண்டும். அந்த கருமாந்தரத்தையும் ரெடி பண்ணிக்குங்க. மறக்காம ஹீரோ , வில்லன் சேசிங் சீன் ஒன்று வைக்கணும். இப்ப எல்லா விஷயத்தையும் அங்கங்க ஃபிட் பண்ணனும். இப்பவே கதை டெம்ப்ளேட் ஒன்று உருவாகியிருக்கும். ஹீரோயினை மறந்துவிட்டோமே! கப்பித்தனமான ரொமான்ஸ் சீன்ஸ் கொஞ்சம் ரெடி பண்ணிக்கிட்டு அங்கங்க அட்டாச் பண்ணிக்குங்க. ஒவ்வொரு சீன்ஸ் முடியறப்பவும் தலா ஒரு பாடலை இணைக்கவும். முதல் பாதியில் நிறைய பன்ச் டயலாக்ஸ் வர மாதிரியும் பின் பாதியில் நிறைய அட்வைஸ் டயலாக் வர மாதிரியும் பார்த்துக்கவும். இப்ப மிச்சம் இருக்குறது காட்சியமைப்பு. பழைய மசாலா படத்துல எல்லாம் இருந்து ஒவ்வொரு சீன் எடுத்து சீன்ஸ் ரெடி பண்ணிக்குங்க. இப்ப சீன்ஸ் எல்லாம் ஒழுங்கா மாத்தி மாத்திப் போட்டு, கிளைமாக்சில் வில்லனை அழித்து/திருத்தி சுபம் போட்டால் படம் ரெடி.
ஒரு வேளை தோரணையையும் இப்படி தான் எடுத்திருப்பார்களோ?

{}

எங்களுக்கு ஒரு கொடூர பழக்கம் இருக்கிறது. எங்களுக்கு என்றால் நான், ரவி, செந்தில், ரிஸ்வான்,முத்து மீனா மற்றும் சௌம்யா. கம்பெனி பஸ்சில் கடைசி மூன்று வரிசைகளைக் கைப்பற்றிக் கொண்டு டைம் பாஸ் செய்கிறோம் பேர்வழி என பாடிக் கொண்டு வருவோம். உண்மையில் பாடுகிறோம் என்ற பெயரில் பாடல்களைக் கொலை செய்வோம். இதனாலேயே பஸ் கிளம்பியவுடன் எல்லோரும் ஹெட்செட் எடுத்து மாட்டிகொண்டுவிடுவர்கள். (என்றைக்கு கம்ப்ளெய்ன்ட் செய்யப் போகிறார்களோ!)
அன்று ஜூன் இரண்டு.
நான் சொன்னேன். "மச்சி இன்னிக்கு ராஜா சார் பர்த்டே டா!"
"அதுக்கு?" முத்து கேட்டான்.
"இன்னிக்கு முழுக்க ராஜா சார் பாட்டு தான் பாடறோம். அவருக்கு மரியாதை பண்ற மாதிரி இருக்கும்ல? "
"டேய். அவர் பாட்ட நீ பாடம இருந்தாலே அவருக்கு பண்ற மரியாதை டா... இன்னிக்காவது அவர விட்ரு"
"^&&)*&*^%%^$"

{}

ஊருக்குப் போயிருந்த போது பாட்டி வேறெந்த சேனலையும் மாற்ற விடாததால் கலைஞர் டி.வியையே பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதாயிற்று. ஏதோ வைர நெஞ்சம் சீரியலாம். யாரோ யாரையோ கொலை செய்துவிட்டார்களாம். அந்த பழி நாயகியின் கணவன் மேல் விழுந்துவிட்டதாம் (இங்கு ஒரு விஷயம். சீரியலில் நாயகியின் புருஷன் எல்லாம் நாயகன் அல்ல. சினிமாவில் விஜயசாந்தி படத்தில் ஒரு புருஷன் வருவானே, அது மாதிரி டம்மி தான்.) அதனால் இவள் வாழ்க்கையே பாழாகிவிட்டதாம். நாம் தான் உதவி செய்து அவனையும் அவளையும் காப்பாற்ற வேண்டுமாம் (என்ன எழவு இது?). ஒவ்வொரு பிரேக்கிலும் நாயகி வந்து அழுதுகொண்டிருந்தாள்.
பாட்டியிடம் கேட்டேன். "எப்படிம்மா இதையெல்லாம் பாக்குறீங்க?"
"அந்த நாடகத்துலயும் உன்ன மாதிரி தான் கண்ணு.... அவனுக்கும் அம்மா இல்ல.. Bla bla bla"
எப்படியாவது தங்கள் வாழ்க்கையுடன் ரிலேட் செய்து விடுகிறார்கள். அதன் பின் அந்த சீரியல் போரடிப்பதுமில்லை. மறப்பதுமில்லை.

{}

மீரா குமார். இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர் (நாயகி?). படித்தவர். சமூக நல ஆர்வலர். வழக்கறிஞர். மகிழ்ச்சி. ஆனால் குரல் மட்டும் மிகவும் மென்மையாக இருக்கிறது. தினமும் அமளி துமளி நடக்கும் லோக் சபாவில் ஆளுமையான குரல் இல்லாமல் எப்படி குப்பை கொட்டப்போகிறார் என்று பார்ப்போம். வாழ்த்துக்கள்!!!

10 கருத்து:

// எப்படியாவது தங்கள் வாழ்க்கையுடன் ரிலேட் செய்து விடுகிறார்கள். அதன் பின் அந்த சீரியல் போரடிப்பதுமில்லை. மறப்பதுமில்லை.//

இப்படித்தான் மக்களை ஏமாற்றி இருக்கின்றார்கள்.

இங்கு எனக்கு ஒரே ஒரு தமிழ் சேனல் தான் வருகின்றது.

இரண்டு நாள் தான் அதில் ஒரு சீரியல் பார்த்தேன். மூன்றாவது நாள் பார்த்து இருந்தா, டிவியை உடைச்சு இருப்பேன்.

மகா கஷ்டம்ப்பா....

வணக்கம் இராகவன் அண்ணே!

// இரண்டு நாள் தான் அதில் ஒரு சீரியல் பார்த்தேன். மூன்றாவது நாள் பார்த்து இருந்தா, டிவியை உடைச்சு இருப்பேன்.

மகா கஷ்டம்ப்பா.... //

இரண்டு நாள் பார்த்துட்டீங்களா? பெரிய ஆள் தான்! :))))))))

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை எப்படி இணைப்பது என்ற விவரங்களுக்கு

இந்த சுட்டியை சொடுக்குங்கள்

தமிழர்ஸ் பிளாக்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

தோரணையின் ரோதணையை நீங்களும் அணுபவிச்சுட்டீங்களா..?
விதி வலியது மகேஷ் அ?ண்ணே,,!

தோரணை நீங்களும் பார்த்திஙக்ளா? ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நல்ல சுவையான அரட்டை மகேஷ்.. ஃபார்ம் ஆகிட்டே வர்ற... வாழ்த்துக்கள்...
சரி இன்னைக்கு உன்னப் பாடச் சொல்லிக் கேட்டுறவேண்டியதுதான்...
//பாட்டியிடம் கேட்டேன். "எப்படிம்மா இதையெல்லாம் பாக்குறீங்க?"
"அந்த நாடகத்துலயும் உன்ன மாதிரி தான் கண்ணு.... அவனுக்கும் அம்மா இல்ல.. Bla bla bla"
எப்படியாவது தங்கள் வாழ்க்கையுடன் ரிலேட் செய்து விடுகிறார்கள். அதன் பின் அந்த சீரியல் போரடிப்பதுமில்லை. மறப்பதுமில்லை.//
சூப்பர் மேட்டர்....

// டக்ளஸ்....... said...
தோரணையின் ரோதணையை நீங்களும் அணுபவிச்சுட்டீங்களா..?
விதி வலியது மகேஷ் அண்ணே,, //

அனுபவிச்சாச்சு! விதி சுத்தி சுத்தி அடிக்குது... :(

// கார்க்கி said...
தோரணை நீங்களும் பார்த்திஙக்ளா? ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் //

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்,,, முடியல நெசமாலுமே!

// தமிழ்ப்பறவை said...
நல்ல சுவையான அரட்டை மகேஷ்.. ஃபார்ம் ஆகிட்டே வர்ற... வாழ்த்துக்கள்... //

நன்றி அண்ணா!

// சரி இன்னைக்கு உன்னப் பாடச் சொல்லிக் கேட்டுறவேண்டியதுதான்... //

இன்ஷூரன்ஸ் இருக்கா?

// சூப்பர் மேட்டர்.... //

நன்றி

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More