கவிதாயினி ஜேன் மார்ட்டினாவைத் தெரியுமா? ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில் இங்கிலாந்தில் வாழ்ந்த கவிஞர் இவர். இவரின் ஒவ்வொரு கவிதையும் காதல் பேசும். நட்பைச் சொல்லும். அவர் கவிதைகளில் நான் ரசித்த இரண்டை இயன்றவரை மொழிபெயர்த்திருக்கிறேன்.காதல்******உன்னை அறியாமல் நீயும்என்னை அறியாமல் நானும்நம்மை அறியாமல் நம்மை ரசித்தோம்,ரகசியமாய்! நட்பு*****சருகாய் உலர்ந்து உதிர்ந்தாலும்தாங்கும் நிலமாய்நண்பர்கள்.எப்படி இருக்கு?அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்! ஜேன் மார்ட்டினாவைப் பற்றிய தவறான தகவல்களைத் தந்ததற்காக மன்னிக்கவும். :) அவர் இங்கிலாந்தில் வாழவுமில்லை. நான் அவரது கவிதையை மொழிபெயர்க்கவுமில்லை. அவர் எனது அலுவலகத் தோழி! அவர் எழுதிய கொலைவெறி கவிதைகள் தான் இவை என்று சொல்லியிருந்தால் முதலிலேயே அப்பீட் ஆகி இருப்பீர்கள். அதற்காகத்தான் இந்த டகால்டி. அவர் சில கவிதைகளைத் தந்து கருத்து...