
"எல்லா புகழும் இறைவனுக்கே!" திரைப்படத்துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் உச்சரிக்கப்பட்ட வார்த்தைகள் தான் இவை. இந்தியத் திரைத்துறையின் பெருமையை உலக அரங்கில் பறைசாற்றிய ரஹ்மான் ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டு இவ்வாறு சொன்னார். அதுவும் ஒன்றுக்கு இரண்டு விருதுகள். ஒரு தமிழனாக உடல் சிலிர்த்தே போய்விட்டது. ஆனால் இந்த விருது ரஹ்மானுக்கு தாமதமாக கிடைத்தது என்றே சொல்லலாம். ஒரு "ரோஜா" ஒரு "இருவர்" ஒரு "உயிரே".... போகட்டும். வாழ்த்துக்கள் ரஹ்மான்!!!இனி நிறைய தமிழ் படங்களுக்கும் இசை அமைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். சிந்து பைரவி சுகாசினியை சொல்ல சொன்னால் "தங்கமே நீயும் தமிழ் பாட்டும் பாடு" என்பார். :)...