பத்தொன்பதாவது காமன்வெல்த் போட்டிகள் மிகக் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கின்றன. மிக மோசமான நிகழ்வுகளுடன் ஆரம்பித்த இந்த விளையாட்டுத் திருவிழா நல்லவிதமாக நடந்து முடிந்திருப்பது நிறைவைத் தருகிறது. விருந்தோம்பலுக்குப் பெயர் போன நாடு இந்தியா எனபதுடன், ஊழல், அலட்சியம் மலிந்த தேசம் என்பதையும் இன்னும் ஒரு முறை உலகுக்குச் சொல்லிப் பெருமைப் பட்டுக்கொண்டோம். பிற்பாடு மிகப் பிரம்மாண்டமாக ஆரம்பித்த போட்டிகள் முன்பு நடந்திருந்த நிகழ்வுகளை மறக்கடித்தன. தடைகளை மீறி சாதனை படைக்கும் நாடு இந்தியா என்ற குரல் உலக அரங்கில் ஓங்கி ஒலித்தது. வெற்றியின் பின்னாலிருக்கும் ஒவ்வொருவருக்கும் நன்றிகள்.
அடுத்தது விளையாட்டு வீரர்கள். 100 பதக்கங்கள் என்ற லட்சியத்துடன் களமிறங்கிய வீரர்கள் சொன்னதை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். இறுதிப் போட்டியில் இந்திய ஹாக்கி அணியின் படு தோல்வி தனிப்பட்ட முறையில் வருத்தத்தைத்...