
அரசியல் சதுரங்க ஆட்டத்தில் எந்த காயும் எப்படியும் நகரும். எந்த கட்சியும் எப்பொழுது வேண்டுமானாலும் கூட்டணி மாறும். அப்படித் தான் இருக்கிறது இன்றைய நிலையும். ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், ஷீலா தீக்ஷித் ஆகியோர், தேர்தலுக்குப் பின் அமையவிருப்பது தான் உண்மையான கூட்டணி என்று கூறி வருகிறார்கள். அ.தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி இல்லை, இருந்தா நல்லா இருக்கும் என்ற தசாவதாரம் டைப் அறிக்கைகள் கூட்டணி அமைவதற்கான சாத்தியக்கூறுகளை தெளிவுபடுத்துகின்றன. தேர்தல் பிரச்சாரங்களில் கலைஞரை வறுத்து எடுக்கும் அம்மாவும் காங்கிரஸ் பற்றி பெரிதாக எதுவும் சொல்வதில்லை. கிராமப்புறங்களிலும், இணையம் நுழையாத சிறு நகரங்களிலும் ஈழப் பிரச்சனை அதிகம் அறியப்படாமல் இருந்தது....