May 09, 2009

கலைஞரின் கதி என்ன?

அரசியல் சதுரங்க ஆட்டத்தில் எந்த காயும் எப்படியும் நகரும். எந்த கட்சியும் எப்பொழுது வேண்டுமானாலும் கூட்டணி மாறும். அப்படித் தான் இருக்கிறது இன்றைய நிலையும். ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், ஷீலா தீக்ஷித் ஆகியோர், தேர்தலுக்குப் பின் அமையவிருப்பது தான் உண்மையான கூட்டணி என்று கூறி வருகிறார்கள். அ.தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி இல்லை, இருந்தா நல்லா இருக்கும் என்ற தசாவதாரம் டைப் அறிக்கைகள் கூட்டணி அமைவதற்கான சாத்தியக்கூறுகளை தெளிவுபடுத்துகின்றன. தேர்தல் பிரச்சாரங்களில் கலைஞரை வறுத்து எடுக்கும் அம்மாவும் காங்கிரஸ் பற்றி பெரிதாக எதுவும் சொல்வதில்லை. 

கிராமப்புறங்களிலும், இணையம் நுழையாத சிறு நகரங்களிலும் ஈழப் பிரச்சனை அதிகம் அறியப்படாமல் இருந்தது. அதை, திடீர் ஈழத்து நாயகி அவதாரம் எடுத்த அம்மா பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சென்று, அழகாக ஓட்டு வேட்டையாடி வருகிறார். கலைஞர் எதிர்ப்பு வாக்குகள் வேறு அம்மாவுக்கு விழும் வாய்ப்பு இருக்கிறது. இந்த காரணங்களால் இந்த தேர்தலில் ஒருவேளை தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு குறைவான தொகுதிகள் கிடைத்து, அ.தி.மு.கவிற்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் பட்சத்தில் மத்தியில் ஆட்சி அமைக்க காங்கிரசுக்கு அம்மா தயவு தேவைப்படலாம். அப்போது காங்கிரஸ் காற்று திசை மாறி வீசக்கூடும். தமிழ்க்குடிதாங்கி அய்யா வேறு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் இருக்கும் என சூசகமாகக் கூறி புளியைக் கரைத்து வருகிறார். அ.தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் இதுவும் சாத்தியமே! 

எது எப்படியோ! இந்த கூட்டணி மட்டும் அமைந்தால் கலைஞரின் நிலை தான் பரிதாபத்திற்குள்ளாகப் போகிறது. காங்கிரஸ் என்ற அரசனை நம்பி தமிழ்நாடு என்ற புருஷனை கைவிட்டது போல... அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை - இது கலைஞர் சொன்னது தான். அந்த வார்த்தைகள் அவருக்கே ரிவீட் அடிக்கும் நிலையில் இருக்கிறது. 

கூட்டணி விசுவாசம் காட்டிய கலைஞருக்கு பதில் மரியாதை செய்யுமா காங்கிரஸ் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

12 கருத்து:

// அரசியல் சதுரங்க ஆட்டத்தில் எந்த காயும் எப்படியும் நகரும். எந்த கட்சியும் எப்பொழுது வேண்டுமானாலும் கூட்டணி மாறும். அப்படித் தான் இருக்கிறது இன்றைய நிலையும். //


ஆமாங்க தம்பி.... !! யார நம்பி ஓட்டு போடுரதுனே தெரியல....!!!
// ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், ஷீலா தீக்ஷித் ஆகியோர், தேர்தலுக்குப் பின் அமையவிருப்பது தான் உண்மையான கூட்டணி என்று கூறி வருகிறார்கள். //


நடந்தாலும் நடக்கலாம். ஆனால் ராகுல் காண்டி மாதிரி ஒரு அற்ப கேடுகெட்ட இளைய தலைமுறை அரசியல் வியாதியை நான் பார்த்ததே இல்லை...!!!
நாட்டிருக்கு ஒன்றும் பெரிதாக கிழிக்கவில்லை என்றாலும்... எந்த ஊருக்கு பிரச்சாரத்திற்கு சென்றாலும் மாட்டு கொட்டகையி தங்குவது... குடிசையில் பழைய சோறு தின்பது... இது போன்ற ஜிகுனா வேலைகளெல்லாம் செய்து ஏழைகளின் ஓட்டை எப்படியாவது வாங்கிஇடலாம் என்ற அற்ப நம்பிக்கை இந்த இத்தாலி இளைஞனுக்கு......!!!
// கிராமப்புறங்களிலும், இணையம் நுழையாத சிறு நகரங்களிலும் ஈழப் பிரச்சனை அதிகம் அறியப்படாமல் இருந்தது. அதை, திடீர் ஈழத்து நாயகி அவதாரம் எடுத்த அம்மா பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சென்று, அழகாக ஓட்டு வேட்டையாடி வருகிறார். //


இது எப்படி தெரியுமா இருக்கு....!! சில ஊர்களில் பிச்சைகாரர்கள் அநாதை
பிணங்களை அழகாக மாலையெல்லாம் போட்டு ... பொட்டு வைத்து பிச்சை எடுப்பதுபோல் உள்ளது......!!! கேவலமான பிறவிகள்.....!!!!
// எது எப்படியோ! இந்த கூட்டணி மட்டும் அமைந்தால் கலைஞரின் நிலை தான் பரிதாபத்திற்குள்ளாகப் போகிறது. //


அவருகென்ன .... அவருக்கும் , அவரது தலைமுறைகளுக்கும் கணக்கிலடங்கா சொத்துக்களை சேர்த்து வைத்து விட்டார்......// அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை - இது கலைஞர் சொன்னது தான். அந்த வார்த்தைகள் அவருக்கே ரிவீட் அடிக்கும் நிலையில் இருக்கிறது. ///


அவனவன் அடிக்கிற ஆப்பு.... அவனவனுக்கேதான்....!!!!// கூட்டணி விசுவாசம் காட்டிய கலைஞருக்கு பதில் மரியாதை செய்யுமா காங்கிரஸ் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்! //


கொடுமைங்க தம்பி..!!!

------------------------------

நல்ல பதிவுங்க தம்பி....!!! அருமை...!!!!

வருகைக்கு நன்றி மேடி அண்ணே!!!

ராகுல் காந்தியின் ஜிகினா வேலைகளுக்கு அளவே இல்லை..

ஈழப் பிரச்சினையை ஓட்டு பொறுக்குவதற்காக மட்டும் பயன்படுத்துபவர்களுக்கு நீங்கள் சொன்ன உதாரணம் நன்றாக பொருந்தும்.

// நல்ல பதிவுங்க தம்பி....!!! அருமை...!!!! //

விரிவான அலசலுக்கும், கருத்துப் பதிவுக்கும் மிக்க நன்றி அண்ணே..... :)

தலப்ப கட்டு சொல்கிரான்:சில உபகரணங்கல் இலங்கைக்கு கொடுத்தானாம்:அது என்ன?
1)முள் வாங்கி
2)தேங்காஇ துருவி
3)பேனா கத்தி
தமிழனை காக்க மறந்த மஞசல் துண்டுக்கு இதுவும் வேண்டும்!
இன்னமும் வேண்டும்:
சோனிஅவுக்கு காவடி தூக்கியவன்,தமிழனால் ஒதுக்கபடுவது உறுதி!

3

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ttpian!!

வாங்க டக்ளஸ் தல!

பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு...

கருணாநிதி ஒரு செத்த பாம்பு அந்தப்பாம்பை மீண்டும் மீண்டும் அடிக்காதீர்கள்.

வாங்க அனானி.

// கருணாநிதி ஒரு செத்த பாம்பு அந்தப்பாம்பை மீண்டும் மீண்டும் அடிக்காதீர்கள்//


அடிக்கவில்லை. அய்யோ பாவம் என்றிருக்கிறது.

மகேஷ் அண்ணே... நமக்கும் அரசியலுக்கும் தூரம் அதிகம்.. ஆனா கலைஞ்சருக்காக நல்லா ஃபீல் பண்ணீருக்கீங்கன்னு மட்டும் தெரியுது...
‘நந்தவனத்திலோர் ஆண்டி
அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தானொரு தோண்டி...
அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி’

வாங்க தல!

// நந்தவனத்திலோர் ஆண்டி
அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தானொரு தோண்டி...
அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி //

:))))

சூடாயிடுச்சு போல இடுகை... வாழ்த்துக்கள்...

நன்றி அண்ணா!!!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More