கல்லூரி இறுதி ஆண்டு. சேகர் தன் சொந்த ஊரில்(கரூர் அருகே ஓரு கிராமம்) திருவிழா என்று விருந்துக்கு அழைத்திருந்தான். விருந்து வெள்ளிக்கிழமை. அதே நாளில் Environmental Science தேர்வு வேறு இருந்தது. செமஸ்டர் தேர்வு இல்லையென்றாலும் இதன் மதிப்பெண்களை வைத்து தான் இன்டெர்னல் மதிப்பெண்கள் கணக்கிடப்படும். திருவிழாவா, மதிப்பெண்களா என்று யோசித்துப் பார்த்ததில் திருவிழாவும் அது சார்ந்த மகிழ்ச்சிகளுமே வென்றன. சரவணா, மணி, பரணி, தமிழ் மற்றும் நான் அடங்கிய குழு, சேகர் தலைமையில் புதனன்று மாலையே சேலத்திலிருந்து தன் பயணத்தைத் தொடங்கியது. எட்டு மணிவாக்கில் கரூர் வந்தடைந்தோம். சேகர் தங்கையும் அவள் கல்லூரியில் இருந்து கரூர் வந்து எங்களுடன் சேர்ந்து கொண்டாள். அனைவரும் சேகர் அப்பா காரில் அவர்கள் ஊருக்கு செல்வதென்று ஏற்பாடு. வந்தவர் சும்மா இருந்திருந்தால் பிரச்சனை இல்லை. "சாப்டீங்களா? " என்று கேட்டார். ஏன் அந்த வார்த்தையை...