March 16, 2009

குஷ்பூவுக்கு ஏன் இந்த வேலை?

கலைஞர் டி.வியில் "மானாட மயிலாட" நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும், ரஜினி,கமல் சுற்று, ரஹ்மான் சுற்று,  நகைக்சுவை சுற்று இப்படி ஏதாவது ஒரு சுற்று இருக்கும்.  அதில் போன வாரம் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு நிறம் என்ற சரித்திரப் புதுமையான கான்செப்ட்டை எடுத்துக்கொண்டு உள்ளூர் ஆட்டக்காரர்கள் எல்லாம் திறமை காட்டிக்கொண்டிருந்தார்கள் (மறுஒளிபரப்பு என்று நினைக்கிறேன்). 

அதில் பச்சை நிறத்திற்கான பாடல் முடிந்ததும் "குஷ்பூ மேம்" ஐ கருத்து கேட்டார்கள். அவரும் தனக்கே உரிய தமிழில் ஆட்டக்காரர்களின் கெமிஸ்ட்ரி , ஃபிசிக்ஸ் பற்றி எல்லாம் சொல்லிவிட்டு, பச்சை நிறத்தை பற்றி ஆங்கிலத்தில் விளக்கம் கொடுத்தார். அதுவும் எப்படி ? 
    "நம் தேசியக்கொடியில் கூட பச்சை நிறம் இருக்கிறது. அது அமைதியைக் குறிக்கிறது. அது மாதிரி நீங்..."

என்னது? பச்சை நிறம் அமைதியைக் குறிக்கிறதா? அப்ப வெண்மை நிறம் எதற்கு? 

எங்கள் ஆசிரியர்கள் எல்லாம் காவி நிறம் தியாகம், வெண்மை - அமைதி, பச்சை - வளம் என்று தான் சொல்லிக்கொடுத்தார்கள். இவற்றை மாற்றக்கூடாது என்று உருப்போட வைத்தார்கள். இவர் இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறார். எரிச்சல் தான் வந்தது!!! 

இந்த மாதிரி ஒரு வெகுஜன ஊடகத்தில், அதிலும் அதிகம் பேரால் பார்க்கப்படும் இப்படி ஒரு நிகழ்ச்சியில் இந்த மாதிரி அபத்தமாக பேசலாமா குஷ்.....? சொந்தக் கருத்தைத் தெரிவிக்க இது கற்பு சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை மேடம்!!! 

26 கருத்து:

ஏதோ அவசரத்துல வந்துருச்சு....
விடுங்க பாசு....

- புஷ்கு

கப்புன்னு புடிச்சிட்டீங்களே

ஏனுங்க குஸ்புவுக்கு மட்டும் இப்ப‍டியெல்லாம் நடக்குது?

இத கவனிச்சி எழுதினதுக்கு பாராட்டுக்கள்.
குச்சிபு எவ்வளவோ தேவலை.. பக்கத்ட்டுல உக்காந்துகிட்டு கமெண்ட் குடுக்குற கலா என்ற வெளக்கெண்ணை பேசுற இங்கிலீஸு தாங்கலயப்பா...இந்த அம்மணிய 1947க்கு முன்னாடி வெள்ளக்காரன்கிட்ட பேச்சுவார்த்தைக்கு அனுப்பிருந்தா, எப்பவோ அவன் ஓடிருப்பான்.
கலக்கல் கலாவின் இங்கிலீசு சாம்பிள்:
"you is great dancer"
"As a dance, you dance beautiful"
"Dancers, all are wonderfuls. "

குஷ்பு விவகாரம் என்னைக்குத்தான் முடியுமின்னு தெரியல.கொடி பற்றிய தவறான கருத்து பரப்பலுக்கு கண்டனம் அவசியமே.

சரி!அத விடுங்க.உங்களை நான் ரசிகன் என்றே முன்பு அறிந்திருக்கிறேன்.இப்ப மகேஷ்ன்னு வருது.ஒண்ணும் ரெண்டும் ஒண்ணா?

//குச்சிபு எவ்வளவோ தேவலை.. பக்கத்ட்டுல உக்காந்துகிட்டு கமெண்ட் குடுக்குற கலா என்ற வெளக்கெண்ணை பேசுற இங்கிலீஸு தாங்கலயப்பா...//

கலாக்காகிட்ட வாங்கி கட்டிக்க வேண்டாம்.அவ்வளவுதான் சொல்வேன்.

அவ்வளவு மும்பரமா அந்த் "கலைச்சேவையை" பாக்குறீங்களா...?
இங்க நான் பொங்குனத வந்து பாருங்க ரசிகன் அண்ணே...
http://tucklasssu.blogspot.com/2009/03/blog-post_16.html

இத கவனிச்சி எழுதினதுக்கு பாராட்டுக்கள். Good

தெரியாத தெரிஞ்சதா நினைச்சு பேசறதால வர தொல்லை இது. இவங்க தெரிந்த்தை மட்டும் பேசுனா பேசறதுக்கு ஒரு சங்கதியும் இருக்காதுங்குறது வேற சேதி....:-)))

கலா பாவம் இங்கிலிபீசூ மோகம் எடுத்து பேசறாங்க...:-))) இதை பார்த்து இன்னும் எத்தனை பேர் தப்பு தப்பா பேச போறாங்களோ? தப்பா பேசறது தப்பில்ல ஆனா தப்ப சரின்னு நினைச்சு தப்பா பேசறது தான் தப்பு....

நம்ப ஏரியாலே கீற தம்மா
குழதக்கி கூட இது பத்தி தெர்யுமே குஸ்பு அக்கா இன்னா மேரி ஆளா கீது

( ? )

இன்னபா இது அக்குரும்பு !

வருகைக்கு நன்றி முரளி கண்ணன்.

// கப்புன்னு புடிச்சிட்டீங்களே //

என்ன பண்றது பாஸ்? நம்ம கடமையை நாம செஞ்சு தானே ஆகணும்?

வாங்க சுபாங்கன்!

// ஏனுங்க குஸ்புவுக்கு மட்டும் இப்ப‍டியெல்லாம் நடக்குது//

என்னங்க பண்றது? சொந்த காசுலயே செய்வின வச்சுக்கிறது இது தானோ?

வாங்க பிரேம்!!!

ஆங்கில மோகம் தான். வேறு என்ன சொல்ல?

வாங்க ராஜ நடராஜன்.

//கலாக்காகிட்ட வாங்கி கட்டிக்க வேண்டாம்.அவ்வளவுதான் சொல்வேன்.//

கலாக்கா ரொம்ப திட்டுவாங்களோ?

வாங்க டக்ளஸ்.

// அவ்வளவு மும்பரமா அந்த் "கலைச்சேவையை" பாக்குறீங்களா...?//

அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. நண்பர்கள் அறைக்கு செல்லும்போது நடந்த பரிதாபம் இது,

வாங்க அனானி.

நன்றி!!!

வாங்க குறும்பன்!

// தெரியாத தெரிஞ்சதா நினைச்சு பேசறதால வர தொல்லை இது.//

// கலா பாவம் இங்கிலிபீசூ மோகம் எடுத்து பேசறாங்க...:-)))

சரியா சொன்னீங்க!

// இதை பார்த்து இன்னும் எத்தனை பேர் தப்பு தப்பா பேச போறாங்களோ? தப்பா பேசறது தப்பில்ல ஆனா தப்ப சரின்னு நினைச்சு தப்பா பேசறது தான் தப்பு....//

சாச்சுபுட்டீங்களே!

வாங்க டவுசர் பாண்டி!!!

அக்குரும்பு தான். அக்குரும்பே தான்.

முன்பு அவங்க கற்ப பத்தி பேசுனப்ப அவங்கள எல்லாம் பச்ச பச்சயா பேசுனாங்க . இப்ப அவங்க பச்சய பத்தி பேசுனாங்க. ஆனால் அதற்கும் அவங்கள பத்தி திட்டுறிங்க ..பாவங்க குஷ்பூ :))))))

//ஏதோ அவசரத்துல வந்துருச்சு....
விடுங்க பாசு....//

அதே ! அதே !!

ரசிக்க வைக்கும் பின்னூட்டங்கள் :))

வணக்கம் பிரதீப், சதங்கா!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More