August 23, 2010

எம்.பிக்கள் சம்பளம் - ஒரு அனல் மூச்சு.



ஒரு வழியாக குட்டிக்கரணம் அடித்து 500 சதவீத சம்பள உயர்வை வாங்கியே விட்டனர் எம்.பிக்கள். இப்போது மாதச் சம்பளம் 1.6 லட்சம். சம்பள உயர்வு வேண்டும் என கோஷம் எழுப்பி, அவையை முடக்கி வாங்கிய உயர்வு இது. 

இன்று லஞ்ச்சில் இதைப்பற்றி தான் பேச்சு. அந்த 500 சதவீத உயர்வு எல்லோரிடமும் ஒரு அனல் மூச்சைக் கிளப்பிவிட்டிருந்தது. :) 

சாதாரண கம்ப்யூட்டர் ப்ரோக்ராமர் வேலையில், 6%, 8% உயர்வு வாங்கவே நிர்ணயிக்கப்பட்ட Goals எல்லாம் முடித்திருக்க வேண்டும், சர்டிஃபிகேஷன் ஏதாவது எழுதியிருக்க வேண்டும், Value-Add ஏதாவது காட்ட வேண்டும், இப்படி ஏகப்பட்ட ஏகப்பட்ட மதிப்பீட்டு முறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு துறையிலும் அதற்குத் தகுந்தவாறு வழிமுறைகள் கட்டாயம் இருக்கும். ஒரு தொகுதியின் பிரதிநிதி என்பவர் ஒரு பெரிய நிறுவனத்தின் ஒரு துறையின் தலைவர் போலக் கொள்ளலாமா? கொண்டால் அந்தப் பதவிக்கு ஏன் மதிப்பீட்டு முறையில் சம்பள உயர்வை நிர்ணயிக்கக் கூடாது? எத்தனையோ எம்.பி க்கள் தொகுதிக்கும் போகாமல் நாடாளுமன்றத்துக்கும் போகாமல் இருப்பது கண்கூடு. அதைவிட குற்றப் பின்புலம் கொண்ட எம்.பிக்கள் எவ்வள்வு பேர்?  அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் எதற்கு சம்பள உயர்வு? 

என்னைக்கேட்டால் அரசியல்வாதிகளுக்கும் ரேட்டிங்க்-சிஸ்டம் ஏதாவது கொண்டு வரலாம். பதவியேற்பின் போது மூன்று ஸ்டார்கள் வழங்கப்படலாம். ஒவ்வொரு தவறுக்கும் ஒன்று பறிக்கப்பட வேண்டும். மூன்று ஸ்டாரும் அவுட் என்றால் பதவி கோவிந்தா... அடுத்து அவர் தேர்தலில் போட்டியிடவே கூடாது. அவர் செய்யும் ஒவ்வொரு நல்ல விஷயத்துக்கும் ஒரு ஸ்டார் மற்றும் அதற்குத் தகுந்த மாதிரி சம்பள உயர்வு தரப்படலாம். தொகுதி வளர்ச்சி நிதியை அவர் செலவழிக்கும் விதம், நாடாளுமன்றத்துக்கு அட்டென்டன்ஸ், கிரிமினல் ரெக்கார்ட்ஸ் இது மாதிரி விஷயங்களை வைத்து அவரை மதிப்பிடலாம். இதைச் சொன்னதுக்கு நண்பன் சொன்னான் "போயா, டொய்யாலே!"

சரிதான். இந்த மாதிரி ஒரு சிஸ்டம் வருவதற்கு ஒருவரும் அனுமதிக்கப் போவதில்லை. அப்படி வந்தால் ஒருவரும் தொழில் சாரி, அரசியல் பண்ன முடியாது. எல்லாம் ஒரு நப்பாசை தான். மன்னிச்சிடுங்க பாஸ்.

இன்னொருத்தர் சொன்னார். "இதற்கு மேலாச்சும் காசுக்கு ஆசைப்படாம ஒழுங்கா வேலையச் செய்வாங்களா பார்க்கலாம்". 
"ஆமாம், என்னவோ சோத்துக்கு வழியில்லாமல் தான் கொள்ளையடிக்குற மாதிரி சொல்றீங்க?" என்று சொல்லலாம் என்று தோன்றியது.

எல்லாம் ஒரு தொடர் சங்கிலி மாதிரி ஆகிவிட்டது. பணம் சம்பாதிக்க வேண்டும், அதற்குப் பதவி வேண்டும், அதற்கு காசு செலவழிக்க வேண்டும், பதவிக்கு வந்த பின் விட்ட காசைப் பிடிக்க வேண்டும், அடுத்தது மிக முக்கியம், சேர்த்த காசைப் பாதுகாக்க மீண்டும் பதவிக்கு வர வேண்டும். அதற்கு என்ன செய்வது? காசை செலவழித்து பதவியைப் பிடி! 

சரி நீங்க என்ன நினைக்கிறீர்கள் ? எம்.பி களுக்கு இந்தச் சம்பளம் நியாயமானதா? இல்லை அதிகமா? அல்லது எவ்வளவு கொடுத்தாலும் போதாது என்று நினைக்கிறீர்க்ளா ? பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். உங்களுக்காக PVR Cinemas Couple Pass காத்துக் கொண்டு இருக்கிறது. ச்சே... வரவர ஓவரா எஃப்.எம் கேட்கிறேன். 

8 கருத்து:

எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் போதாதுன்னு அவங்க நினைப்பாங்க மகேஷ்....இதுவரை மக்கள் பணத்தை பல வழிகளிலும் கொள்ளை அடிச்சிட்டு இருந்தாங்க...இப்ப அரசாங்கமே அதுல ஒரு வழியா...அவங்க சம்பளத்தையும் சேர்த்திடுச்சு..அவ்லோதான்...

இவனுங்க வாங்குற லஞ்சம் போதாதுன்னு சம்பளம் வேறையா...

இந்த ஸ்டார் சிஸ்டத்துல யாரு அந்த ஸ்டார் கொடுக்குறது பறிக்குறதெல்லாம் பண்ணுவா..?

அவனுக்கும் லஞ்சம் கொடுப்போம்ல நாங்க..!

எனக்கு தெரிஞ்சி சம்பளமே குடுக்ககூடாது. மக்கள் பணிக்கு எதுக்கு சம்பளம்? வீடு, கார், போன், விமான டிக்கெட் எல்லாம்தான் இலவசமா தராங்களே - எதுக்கு சம்பளமும் குடுக்கனும்

ச்சும்மா கிச்சு கிச்சு மூட்டாத மகேஷ்...
ஸ்டார் கொடுக்கணும்னா, இங்க சில பேரு சூப்பர் ஸ்டாருக்கு பிரதமர் பதவி கேப்பாங்க...
சுப்ரீம் ஸ்டாருக்கு ஜனாதிபதி கேப்பாங்க...

pavam velavasi eri pochu illa... avanga eppadi tholil (pagal kollai) panrathu

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More