May 17, 2010

அரட்டை - 18-5-2010

ஆக்ஸிமொரான் தெரியுமல்லவா? தமிழில் முரண்தொடை என்பார்கள்(எச்சூஸ்மி மிஸ்டர் ராஜு... "கிரண் தொடை தெரியும். அதென்ன முரண்தொடை" என்று கேட்கக்கூடாது!).  ஒன்றுக்கொன்று எதிரான பொருள் கொண்ட இரு வார்த்தைகள் ஒன்றாக வந்து ஒரு பொருளைத் தருவது. உதாரணத்துக்கு, ‍நடைபிணம். தின வாழ்க்கையில் நாமும் நிறைய உபயோகித்திருப்போம். இயல்பான நடிப்பு, சிறிய கூட்டம், முழுதாய் காலி, வெட்டிவேலை, தெளிவாக் குழப்பிட்டான், சற்றே அதிகம்... இப்படி நிறைய. செய்யுளெல்லாம் கூட‌ இருக்கிற‌தாம். சினிமா பாட்டுக்கள் கூட! வாச‌மில்லா ம‌ல‌ரிது நினைவிருக்கிற‌தா?

ஆனால் நம் ஆதி அவர்களைக் கேட்டால் உலகிலேயே சிறந்த முரண்தொடை "Happily Married" தான் என்பார்... :)

{}

செம்மொழியான தமிழ்மொழியாம் - கேட்டீர்களா? செம்மொழி மாநாட்டுப்பாடல். கலைஞரின் கவிதை வரிகளுக்கு இசையமைத்திருக்கிறார் ரஹ்மான்.

டி.எம்.சவுந்தரராஜன், பி.சுசிலா, ரஹ்மான், அருணா சாய்ராம், பாம்பே ஜெய்ஸ்ரீ, ஹரிஹரன், கார்த்திக், சின்மயி, பென்னி தயள், நித்யஸ்ரீ, நரேஷ் அய்யர், சுருதிஹாசன், சின்ன பொண்ணு, பிளாசி என‌ முப்ப‌து பேர் பாடியிருக்கிறார்க‌ள் ஆறு நிமிட‌ப் பாட‌லை!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - பிறந்த பின்னர்
யாதும் ஊரே யாவரும் கேளிர். என்று ஆரம்பிக்கிறது பாடல். நிறைய முறை கேட்டால் தான் புரிகிறது. 


அகமென்றும் புறமென்றும்
வாழ்வை அழகாக வகுத்தளித்து
ஆதியந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி ‍- ஆகா!

பிளாசியும் ஸ்ருதியும் சேர்ந்து "கம்ப நாட்டாழ்வாரும் கவியரசி அவ்வை நல்லாளும்" என்று பாடுவது செம க்யூட். 

ரஹ்மானுக்கு நன்றிகள்! ராவணன் பாடல்கள் கூட இப்படிக் கவரவில்லை. :)

{}

குஷ்பூ தி.மு.க வில் சேர்ந்தாயிற்று. இனி சுந்தர்.சி நடிக்கும் படங்களுக்கு ரஹ்மான் இசையமைக்கக்கூடும்... என்ன கொடும குஷ்பூ இது?

{}

பிட் குழுவினரின் சூரிய உதயம்/அஸ்தமனம் போட்டிக்கு நானும் ரௌடிதான் என்ற ரேஞ்சுக்கு ஒரு புகைப்படத்தை அனுப்பியிருந்தேன். 
அவர்களும் எடுத்துக்கொண்டார்கள். அது.. 



14 கருத்து:

This comment has been removed by the author.

சுந்தர்.சி யும் ரகுமானுமா..? அவ்வ்
டெரர் கூட்டணியா இருக்கே...!

ஃபோட்டோ கியூட்ண்ணே..!

கிரண் தொடை?! அல்லோ,என்னப் பார்த்தா எப்பிடி தெரியுது..?
:-)

ஆனாலும், கிரண்..ஹிஹி வெக்க வெக்கமா வருதுண்ணே.

//Happily married//

ஹிஹி..

போட்டோ சூப்பர்.. போட்டோகிராபி நுணுக்கங்கள் பற்றி ஒரு பதிவு போடவும்..

//ஆனாலும், கிரண்..ஹிஹி வெக்க வெக்கமா வருதுண்ணே//

எனக்கு துக்கமா வருது.. கிரணிடம் பார்க்க வேண்டியது தொடையா?

பிட்..வாழ்த்துகள்

அது முரந்தொடையா? நகைமுரண் என்று நினைக்கிறேன். முரண்தொடை என்றால் திருப்பி போட்டாலும் ஒரே பொருள் தருவது. உதாரணம் “தசை..சதை”... “வாய்க்கால்..கால்வாய்”

நான் ஆக்சிமொரான் பற்றி 2008லே எழுதியாச்சு

http://www.karkibava.com/2008/09/blog-post_17.html

\\எனக்கு துக்கமா வருது.. கிரணிடம் பார்க்க வேண்டியது தொடையா?\\

குருவே,யாம் கடைசி வரியில் வெறும் கிரண் என்றுதான் குறிப்பிட்டுள்ளோமே தவிர,தொடையை குறிப்பிடவில்லை.

அதேசமயம்,அதற்கு முந்தைய வரியையும் படிக்க தங்களை கேட்டுக் கொள்கிறேன்.

ராஜு.... நினைவில்லையா? நீங்க தான் இத சொன்னீங்க.... ஏதோ ஒரு பதிவில் பின்னூட்டத்தில்.

சகா.. அது இலக்கணப்போலி என்று ஞாபகம்

// ♠ ராஜு ♠ said...
ஆனாலும், கிரண்..ஹிஹி வெக்க வெக்கமா வருதுண்ணே. //


வரும் வரும்

வாழ்த்துக்கு நன்றி சகா!

\\ராஜு.... நினைவில்லையா? நீங்க தான் இத சொன்னீங்க.... ஏதோ ஒரு பதிவில் பின்னூட்டத்தில்.\\

தெரியுமே!!
கே.வீ.ராஜாவின் ஒரு பதிவில் சொன்னேன்.
:-)

//நிறைய முறை கேட்டால் தான் புரிகிறது.///

தூய தமிழ்'ல வந்தா யாருக்கும் புரியாது.. கொஞ்சம் ராக்,பாப் சேர்த்து வந்தா உடனே புரியும் அப்படித்தானே சகா...

// ♠ ராஜு ♠ said...

தெரியுமே!! கே.வீ.ராஜாவின் ஒரு பதிவில் சொன்னேன்.
:-)

//

அதுக்குத் தான் சொன்னேன். :))))))))

சரியாச் சொன்னீங்க இர்ஷாத்... தவிர பாடும் விதம் என்று ஒன்று இருக்கிறது அல்லவா?

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More