October 01, 2010

எந்திரன் மேனியா

முதலில் அமரர் சுஜாதா அவர்களைப் பற்றி... கதையின் அடிநாதம் அவரின் என் இனிய இயந்திராவை ஒட்டியே இருக்கிறது. 
”செயற்கை அறிவுடன் கூடிய இயந்திரன், மனிதன் போல் சிந்திக்க ஆரம்பித்தால்?” என்ற கேள்வியை வைத்து அவர் எழுதிய கதை என்று பிரம்மாண்டமாக, எந்திரனாக வளர்ந்திருக்கிறது. அஞ்சலிகள்!!! அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. 

இனி படம்... 

இந்திய ராணுவத்துக்கு அர்ப்பணிப்பதற்காக ஒரு மனித ரோபோவை (சிட்டி - ரஜினி)உருவாக்குகிறார் டாக்டர் வசீகரன் (ரஜினி). அந்த ரோபோவுக்கு மனித உணர்வுகள் கற்பிக்கப்படுகின்றன. பிறகு சிட்டி, டாக்டரின் காதலி சனா (ஐஸ்) மீது காதல் கொள்கிறது. இடையில் வில்லன்(டேனி), சிட்டியை தீய நோக்கத்துக்குப் பயன்படுத்த நினைக்கிறார். அதன் பிறகு நடக்கும் விறு விறு சுறு சுறு ரேஸ் தான் எந்திரன்.

ரஜினியைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். தனது மாஸைப் பற்றிக் கவலைப்படாமல், வழக்கமான எண்ட்ரி இல்லாமல், குத்து வசனங்கள் இல்லாமல் நடித்திருக்கிறார். மற்ற So called super stars கவனிக்க வேண்டிய விஷயம் இது. மிரட்டல் தலைவா!!!!

ஐஸுக்கு வயசானது ராவணனிலேயே கன்ஃபார்ம் ஆகிவிட்டது. ஆனால் இந்தப் படத்தில் ரஜினியுடன் இருக்கும் போதெல்லாம் இளமையாகத் தெரிகிறார். டான்ஸ் அசத்தல். 

இயக்குனர் ஷங்கர் ஒரு அறிவியல் கதையை முடிந்த அளவுக்கு கமர்சியலாக்கித் தந்திருக்கிறார். வெற்றியும் பெறுகிறார். எங்கேயும் யோசிக்கவிடாத திரைக்கதை கடும் உழைப்பைக் காட்டுகிறது. கடைசி 45 நிமிடங்கள் பிரம்மிக்க வைக்கின்றன. அவரிடமிருந்து இந்த மாதிரியான பிரம்மாண்டங்களைத் தான் எதிர்பார்க்கிறோம். ரோட்டுக்குப் பெயிண்ட் அடித்து ரண்டக்க ரண்டக்க என்று பாடுவதையல்ல... :) 

சில இடங்களைத் தவிர்த்து கிராஃபிக்ஸ் நேர்த்தியாக இருக்கிறது. கலை, இசை, சண்டைப் பயிற்சி எல்லாம் செம செம... இரண்டாம் பாதியில் வரும் சில ரொமான்ஸ் காட்சிகளை மட்டும் வெட்டியெறிந்திருக்கலாம். பாடல்கள் பார்க்க நன்றாக இருந்தாலும் வேகத்தைக் குறைக்கின்றன. 

மொத்தத்தில் இந்திய நிறத்தில் ஒரு ஹாலிவுட் சினிமா... 

டிஸ்கி 1 : இந்தி மீடியாக்கள் படத்தைக் கொண்டாடுகின்றன. எப்பேர்ப்பட்ட படத்துக்கும் மூன்று ஸ்டார்கள் கூட கொடுக்க அழும் விமர்சகர்கள், எந்திரனுக்கு நான்கு நான்கரை என்று தந்திருக்கிறார்கள்.

டிஸ்கி 2 : இந்த மாதிரி முயற்சிகள் வெற்றி பெறாவிட்டால், கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்து ரௌடிகளை அழிக்கும் சூப்பர் ஹீரோக்களை மட்டுமே பார்க்க வேண்டியிருக்கும் என்பது எனது கருத்து. :)

டிஸ்கி 3 : ஷாருக் படத்தைப் பார்த்துக் கண்டிப்பாக வருந்தியிருப்பார். 

*

11 கருத்து:

crisp review magesh...
//ஐஸுக்கு வயசானது ராவணனிலேயே கன்ஃபார்ம் ஆகிவிட்டது. ஆனால் இந்தப் படத்தில் ரஜினியுடன் இருக்கும் போதெல்லாம் இளமையாகத் தெரிகிறார்.//
அதான் நீயே சொல்லிட்டியே ரஜினி கூட இருக்கதாலதான் ஐஸ் இளமையா இருக்காருன்னு...:-)

@ பரணி அண்ணா..

அதத் தான் நானும் சொல்றேன்.. :)

அஜித்தும் வருந்தியிருப்பார்.. ஆனாலும் படம் கடைசி 20 நிமிடம் தான் சூப்பர்.. தலைவர் மட்டும் ஒகே.. சிட்டி கோ...

//இந்தி மீடியாக்கள் படத்தைக் கொண்டாடுகின்றன. எப்பேர்ப்பட்ட படத்துக்கும் மூன்று ஸ்டார்கள் கூட கொடுக்க அழும் விமர்சகர்கள், எந்திரனுக்கு நான்கு நான்கரை என்று தந்திருக்கிறார்கள்.//

சரிதான்.. :)

Will read in two days. Not taking any chances. :)

//இந்த மாதிரி முயற்சிகள் வெற்றி பெறாவிட்டால், கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்து ரௌடிகளை அழிக்கும் சூப்பர் ஹீரோக்களை மட்டுமே பார்க்க வேண்டியிருக்கும் என்பது எனது கருத்து. :)//
நல்ல வேல அப்படி எதுவும் நடக்கல, படம் பட்டய கிளப்புது...
//"சூப்பர் ஹீரோ"//
இந்த மாதிரி நடிகருங்க இனிமே கொஞ்சம் யோசிக்கணும் :)

நானும் எழுதியிருக்கேன் என்னுடைய இந்திரனின் அனுவபத்தை பற்றி..

நல்ல விமர்சனம் நண்பா..

நல்ல விமர்சனம் நண்பா..

நல்லா இருக்கு
thanks
mrknaughty

sujatha avargalukku oru arrpanippu card avathu pottirukkalam
........

Uiroda irukara ? wireoda irukkar

Nakkala ? illa nikkal

** decibal too loud who is that chellatha?

Endrendrum valvar sujatha!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More