August 17, 2010

நான் மகான் அல்ல!

1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

மகேஷ் : ரசிகன்.

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன? 
  
மகேஷ் என் பெயர். ரசிகன் நான் படித்து வாங்கிய பட்டம்.  :) 

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி..

அது ஒரு சோக தருணம். (உங்களுக்குத் தான்)

4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்? 

எப்பயாச்சும் எழுதுவதே கஷ்டமாயிருக்கிறது. இதில் பிரபலம் வேறா? நெக்ஸ்ட்... 

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

அவ்வப்போது. பகிர்ந்துகொள்ளும் போது சந்தோஷம் இரட்டிப்பாகுமாம். ஆகிறதா என்று பார்க்க!

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

நண்பர்களைச் சம்பாதிக்க. 

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன? 

ஒன்றே ஒன்று தான்.

8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பொறாமை :  கார்க்கி (தோழி அப்டேட்ஸ் சான்ஸே இல்ல), வானவில் வீதி கார்த்திக் (இளமை எக்ஸ்பிரஸ்னா தலைவர் தான்)  பிரசன்னா (உயிரோட தான் இருக்கானானு தெர்ல),

கோபம் : எழுத்துச் சுதந்திரத்தைத் தனி மனிதத் தாக்குதல்களுக்கு பயன்படுத்தும் எல்லோர் மீதும். 

 9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

தமிழ்ப்பறவை - பரணி - டியர் அண்ணா.. :) 

10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..

மரண வாக்குமூலமா வாங்குறீங்க? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..... 

டிஸ்கி : தலைப்பு மேட்ச் ஆகவில்லை? 

*

14 கருத்து:

நல்லா இருக்குங்க மகேஷ்...உங்க பதில்கள் எல்லாம்...

// மகேஷ் என் பெயர். ரசிகன் நான் படித்து வாங்கிய பட்டம். :) ///

அது என்ன படிப்புயா புதுசா இருக்கு :)

சொன்னா நாங்களும் கரஸ்ல போட்டு பட்டம் விடுவோம்ல

/// நான் மகான் அல்ல! ///

டைட்டில மாத்து,உண்மைய போட்டா

"நான் மாக்கான் அல்ல"

நல்லா பதில் சொல்லியிருக்கீங்க..

ஆறாவது பதில் சூப்பர்.

8, என்னை தூக்கி ரொம்ப உசரத்துல வெச்சிட்டீங்க. :)

// மகேஷ் என் பெயர். ரசிகன் நான் படித்து வாங்கிய பட்டம். :) ///
nice one...

//கார்க்கி (தோழி அப்டேட்ஸ் சான்ஸே இல்ல/

சான்சே இல்ல. எல்லாம் கப்சான்னு சொல்றியா?

/என்னை தூக்கி ரொம்ப உசரத்துல வெச்சிட்டீங்க. :/

மயில்சாமி விவேக்கிடம் கேட்பாரே

என்ன பாஸ் தூக்கறிங்க..

உன்னை அமுக்கதாண்டா

:))

@ நன்றி ரமேஷ்.

@ நன்றி தில்லை.

@ ஜில்லு. சென்னை வரத்தானே போற? அப்ப இருக்குடி உனக்கு.

@ நன்றி பாபு

@ கார்த்திக். :))))))))) உண்மையச் சொன்னேன்.

@ நன்றி பரணி அண்ணா.

@ கார்க்கி,

கப்ஸா இல்லைன்னு தான் தெரியுதே. தோழி அப்டேட்ஸ் மேல கூட பொறாமை இல்லை. உங்கள் தோழிகளின் எண்ணிக்கை கண்டு தான் பொறாமை.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More