August 05, 2010

எந்திரன் - முன்னோட்டம்.

சுஜாதாவின் "என் இனிய இயந்திரா" படித்திருக்கிறீர்களா? அழகான அறிவியல் கதை. நிலா என்ற அழகியும் ஜீனோ என்ற இயந்திர நாயும் சேர்ந்து கொண்டு செய்யும் சாகசங்கள் தான் கதை. ஜீனோ அநியாயத்துக்குப் புத்திசாலி. புத்தகம் படிக்கும், கவிதை நெய்யும், லாஜிக்கல் ரீசனிங்கில் வித்தை காட்டும். எல்லாவற்றிற்கும் மேலாக உணர்வுகள் என்ற உன்னதத்தைப் பெற்று படைப்பின் உச்சத்தை அடையும். தானாகவே சிந்திப்பது, நிலாவின் மேல் மையல் கொள்வது, தடவிக்கொடுத்தலில் இருக்கும் அன்பை உணர்வது, பயம் கொள்வது என்று அட்டகாசம் செய்யும்.

இயந்திரன் என்ற பெய்ரைக் கேட்டவுடன் அப்படிப்பட்ட செயற்கை அறிவுடன் கூடிய இயந்திரம் செய்யும் சாகசங்கள் தான் படம் என்று தெரிந்தது. பாடல்களும் ட்ரெய்லரும் அதை உறுதிப்படுத்துகின்றன. பார்க்கலாம் அறிவியலும் மசாலாவும் ஒன்று சேரப் போகின்றன. 160 கோடி பட்ஜெட் என்கிறார்கள். சன் பிக்சர்ஸ் செய்யலாம். ரஜினியின் முகத்தை விதவிதமான லைட்டிங்கில், விதவிதமானக கோணங்களில் என்பது விதமான படங்கள் எடுத்து கிராஃபிக்ஸ் செய்து இருக்கிறார்களாம். சண்டைக் காட்சிகளே மொத்தம் ஒரு மணி நேரம் வருகின்றதாம். ஊரெல்லாம் எந்திரன் தான்.

ஒன்று மட்டும் புரியவில்லை. ஆறு பாட்டுகளில் ஐந்து ரோபோவிற்குத்தான் போலிருக்கிறது. "அஃறிணையின் அரசன் நான், காமுற்றக் கணினி நான்" என்றெல்லாம் ரோபோ பாடுகின்றது. நம்மவர்கள் ஏலியனை வைத்துப் படம் எடுத்தாலும் அதற்கும் ஒரு பில்ட்-அப் சாங் வைப்பார்கள்.

ஆனால், சும்மாச் சொல்லக் கூடாது. முதல் முறை கேட்டபோது கன்னாபின்னாவென இருந்தப் பாடல்கள், புரிய ஆரம்பித்ததும் ஆட்டம் போட வைக்கின்றன. Rahman Rocks! "இரும்பிலே ஒரு இருதயம் முளைத்ததோ" கதறக் கதறக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

தமிழில் அறிவியல் படங்கள் வருவது வரவேற்கத்தக்கது. என்ன ஒன்று, டெரா ஹெர்ட்ஸும், ஜெரா பைட்ஸும் புரிந்து தொலைக்க வேண்டும்.

எந்திரன் டீமுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

*

29 கருத்து:

நண்பர் மகேஷின் நூறாவது பதிவு இது :)

நூறாவது பதிவு போடுறேன்னு சொல்ல ஒரு பதிவ வேஸ்ட் பன்னனுமான்னு கேக்குற ஆளு இவர் :)

அதற்காகவே என் பாராட்டுகள்
100க்கு வாழ்த்துக்கள்

அப்பரம் சுஜாதா சார் தான் எந்திரன் முக்கால் வாசி டயலாக் எழுதினார்

எந்திரன் சுஜாதா அவர்களுக்கு சமர்ப்பனம் :)

ஆமாம்..எனக்கும் முதல்ல பாட்டெல்லாம்..என்னடா இதுங்கற மாதிரிதான் இருந்தது...அப்புறம் கேக்க கேக்க...லிரிக்சும்...மியுசிக்கும்..அல்லுது....அப்புறம் இது உங்க 100 ஆவது பதிவா....வாழ்த்துக்கள்...சீக்கிரம் பத்துல இன்னொரு 0 வ சேத்துங்க...

//டெரா ஹெர்ட்ஸும், ஜெரா பைட்ஸும் புரிந்து தொலைக்க வேண்டும்//

Don't under estimate anyone. It is enough if they know that the measurements are too high in something ;)

waiting for endhiran.

congrats for your 100th post.

எந்திரன் பட குழுவினர் ஒருவரை ஒருவர் பாராட்டிய நேரம் போக கொஞ்சம் சுஜாதா வையும் பாராட்டி பேசி இருக்கலாம் ,வசனங்கள் பாலகுமாரன் ஐ அடுத்து சங்கருக்கு செட் ஆனவர் சுஜாதா மட்டுமே ! அவருக்கு என்ன மரியாதையை செய்திருக்கிறார்கள் இவர்கள் ? மேடையில் பேசியவர்களில் சங்கரை தவிர வேறு ஒருவருக்கும் இவர் பெயர் தெரியாதோ ?

century போட்டதுக்கு வாழ்த்துக்கள். பதிவும், நடையும் அருமை நண்பரே

இந்திரன் இசை வெள்யீட்டு விழாவை பார்க்க நேரிட்டது.. இதில் உழைப்பால் உயர்ந்த மனிதன் ரஜினி, நல்ல படைப்பாளி ஷங்கர், சாதனையாளன் ரஹ்மான் இவர்களையெல்லாம் பெருமையாக பேசினார்கள்..இவை எல்லாவற்றிக்கும் மேலும் தயாரிப்பாளர்களை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளினார்கள்...

ஆனால் இவர்களுக்கும் பிரம்மாவான சுஜாதாவை பற்றி பேசியதாகவே தெரியவில்லை...

100 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் நண்பரே...

ஏவாளுக்கு தங்கச்சியே என்கூடத்தான் இருக்கா

ஆளுயர ஆலிவ் பழம் அப்படியே எனக்கா..

ஆஹா..ஆஹா....
ஆஹா..ஆஹா....

///சண்டைக் காட்சிகளே மொத்தம் ஒரு மணி நேரம் வருகின்றதாம். ஊரெல்லாம் எந்திரன் தான்.
////
அடடா ..!! எந்திரன் எதிர்பார்க்கிறோம்..!!
நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் மகேஷ்..!!

நான் படிச்சதில்ல அந்த கதை. படம் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். பார்க்கலாம். :)

பாட்டு லிரிக்ஸ் எல்லாம்.. த்து!! இரும்பிலே ஒரு இதயம் மட்டும்தான் பிடிச்சது.

செஞ்சுரியா? வாழ்த்துக்கள்! :)

//நான் படிச்சதில்ல அந்த கதை. படம் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். பார்க்கலாம். :)

பாட்டு லிரிக்ஸ் எல்லாம்.. த்து!! இரும்பிலே ஒரு இதயம் மட்டும்தான் பிடிச்சது.//

//செஞ்சுரியா? வாழ்த்துக்கள்! :)//
ரொம்ப நாள் கழிச்சு இப்பத்தான் ரிப்பீட்டு போடுறேன்...
ரிப்பீட்டு...

100 ஆவது வாழ்த்துக்கள்

@ ஜில்லு, :))))))) மிக்க நன்றி

@ நன்றி ரமேஷ், இது ஓவர்.

@ நாகராஜ், நீங்கள் அந்த விழாவைச் சொல்கிறீர்களா? நான் பார்க்கவில்லை. அப்படியிருந்தால் கொடுமை தான்

@ நன்றி வெறும்பய அவர்களே.

@ கார்க்கி, சகா, பார்த்து பார்த்து

@ நன்றி செல்வக்குமார்.

@ நன்றி கார்த்திக், உனக்குப் புடிக்கலையா? :-@

//உனக்குப் புடிக்கலையா?

I didn't like the lyrics, yes. :(

Music too wasn't very impressive considering Rahman's standards. I mean, he has given gems like Thiruda Thiruda even in that stone age.

Hopefully picturization will make up.

நல்ல பதிவு, சுஜாதாவின் "என் இனிய இயந்தரா" படித்துவிட்டு எதனை முறை ஜீனோவுக்காக அழுதிருப்பேன். வீட்டு செல்ல நாயிக்கு கூட ஜீனோ என்று தான் பெயர் வைத்தேன்...

எனக்கு என்னவோ பாடல்கள் சுமார் ரகமாகதான் படுது. பார்ப்போம்.

100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்...

@ பார்க்கலாம் கார்த்திக்,


@ தேங்க்ஸ் குரு... :)

பாட்டுக்கள் கேட்க கேட்க ரொம்ப பிடிக்குது. குறிப்பா அரிமா அரிமா பாடல். ஒரு அறிவியல் படத்துக்கு எப்படி இருக்கணுமோ அப்படி தான் பாடல் வரிகள் இருக்கு.

எனக்கு தெரிந்த நண்பர்கள் எல்லாரும் முதலில் சொன்னது பாட்டு விலங்கலைனு தான். இப்போ அவங்களே புகழ்ராங்க.

திருடா திருடா ல தீ தீ பாடல் வந்த அப்போ யாருக்கும் பிடிக்கல. இப்போ கேட்டுப் பாருங்க.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More