
இன்று யதேச்சையாக மின்னஞ்சல் பார்த்த போது தான் இரண்டு பின்னூட்டங்கள் வந்திருப்பது தெரிந்தது. யாரது நம்ம பதிவுக்கு இவ்வளவு நாள் கழித்து பின்னூட்டியிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டே மின்னஞ்சலைத் திறந்தேன். ஆனந்த அதிர்ச்சி(கள்)! பதிவர் லவ்டேல் மேடி அவர்கள் தனது பட்டாம்பூச்சி விருதினை என்னுடன் பகிர்ந்து கொண்டிருந்தார். "என்னையும் நம்பி..." வசனம் தான் நினைவுக்கு வந்தது. லவ்டேல் மேடி அவர்களுக்கு நன்றி. அடுத்த பின்னூட்டம் கிருஷ்ண பிரபு அவர்களிடமிருந்து. வலைச்சரத்தில் அறிமுகப் பதிவராக என் பெயர் இடம்பெற்றிருக்கிறது என்றார். ஆம்! பதிவர் அப்பாவி முரு அவர்கள் தனக்குப் பிடித்த பதிவுகளில் ஒன்றாக் எனது பதிவையும் அறிமுகப் படுத்தியிருந்தார். அப்பாவி...