April 22, 2009

பின்நவீனத்துவ பிறந்தநாளும் இன்ன பிறவும்!

வெள்ளிக்கிழமை மதியம் மட்டும் அலுவலகத்திலிருந்து பொன்னுசாமிக்கு (சோழிங்கநல்லூர்) போய் சாப்பிடுவது வழக்கம். அப்படி போன வாரம் சென்று திரும்பும் போது வழியில் கண்ட ஒரு காட்சி மனதை உருக்கியது. ஒரு உணகவகத்தின் பெயர்ப் பலகையை கையில் பிடித்துக்கொண்டு சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தார் அதன் காவலாளி. எப்படியும் அவருக்கு அறுபது வயதிற்கும் மேலிருக்கும். சென்னையின் வெயிலைப் பற்றி வேறு சொல்லவே தேவையில்லை. அந்த உச்சி வெயிலில் பெயர்ப்பலகையை கையில் ஏந்தியபடி வெயிலில் காய்ந்து கொண்டிருந்தார் பெரியவர். பெயர்பலகையைக் கூட பொருத்த துப்பில்லாத அந்த கடை முதலாளிக்கு கிருமிபோஜனம் தான் என்று மனதார சபித்துகொண்டே வந்தோம்!

{}
 
நேற்று நண்பன் பரணிக்கு பிறந்த நாள். கொண்டாட்டங்கள் (?) அனைத்தும் வழமையான ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இல்லாமல் அஹிம்சை முறையில் நடந்து முடிந்தன.  எங்கள் கல்லூரியில் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு என தனி வரைமுறைகள் இருக்கின்றன. பிறந்தநாள் கொண்டாடுபவனை கை கால்களை பின்புறம் கட்டி மண்ணில் போட்டு உதைக்க வேண்டும். உள்ளாடை நீங்கலாக மற்ற அனைத்தையும் கழற்றிவிட்டு அடி போட வேண்டும். துப்பாக்கி கழுவ வைத்திருக்கும் எண்ணெய் உட்பட கையில் கிடைக்கும் திரவங்கள் அனைத்தையும் வைத்து அபிஷேகம் செய்ய வேண்டும். எங்கள் வகுப்பு பெண்கள் யாராவது ஒருவருக்கு தொ(ல்)லைபேசி காதலிக்கிறேன் என்று சொல்ல வேண்டும். இந்த மாதிரி நிறைய விஷயங்கள். கிட்டத்தட்ட இப்படி இருக்கும் 
 


இப்படி வழமையான நெறிமுறைகளை மீறி, சுய முரண்பாடுகளுடன் (எங்களுக்கு) கொண்டாடப்பட்ட இந்த பிறந்தநாள் விழாவை பின் நவீனத்துவ பிறந்தநாள் என்றே கருதுகிறோம். :)

நோ நோ! இதுக்கெல்லாம் எதுக்கு கட்டைய தூக்குறீங்க? 

{}
மரியாதை திரைப்படத்தின் இந்த படத்தைப் பார்த்தவுடன் எனக்கு ஒன்றுதோன்றியது.

{}

நியூட்டனோட தங்கமணி ஒருநாள் அவர்கிட்ட கேட்டாங்களாம் "ஏங்க, நான் எப்படி இருக்கேன்?" அப்படின்னு.

அதுக்கு அவர் சொன்னாராம்.  Tan C / Sin C

தங்க்ஸ்: அப்படின்னா ?

நியூட்டன் : Tan C / Sin C     =    (Sin C / Cos C)  / Sin C =   1/Cos C = Sec C

செக்சி!!!

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க! 

குறிப்பு : எஸ் எம் எஸ்ஸில் வந்தது. திரிகோணவியல் அறிந்திராத நண்பர்கள் மன்னிக்க!

*****

6 கருத்து:

கல்லூரி பிறந்த நாள் கொண்டாட்டங்களை நினைவு ப்டுத்தி விட்டாய் மகேஷ்..
//துப்பாக்கி கழுவ வைத்திருக்கும் எண்ணெய் //
இதையெல்லாம் விடக் கொடுமை மெஸ்ஸில் மீந்த சட்னி, சாம்பார்தான் ஹைலைட்..அரிப்புக்கு போடுற மருந்தெல்லாம் அந்த ரசவாத திரவத்துல அடங்கும்...

//எங்கள் வகுப்பு பெண்கள் யாராவது ஒருவருக்கு தொ(ல்)லைபேசி காதலிக்கிறேன் //
நல்லவேளை எங்க காலத்துல செல் போன் கிடையாது... மொட்டை மாடியிலிருந்து கேர்ள்ஸ் ஹாஸ்டல் கெட்கிறவரை வாய் கிழிய கத்தணும்..

கடை முதலாளிக்கு கிருமிபோஜனம் கிடைக்க என் சார்பில் வாழ்த்துகிறென்..!
பின் நவீனத்துவ பிறந்த நாள் கொண்டாடிய பரணிக்கும் வாழ்த்துக்கள்..!
கேப்டன் மேட்டரு சூப்பரு..!
SMS அசத்தல் ரகம்...!
புது டெம்ப்ளேட்டா..?

வணக்கம் தமிழ்பறவை அண்ணா!

அவன் வாழ்நாளிலேயே அதிகம் கஷ்டப்படுவது பிறந்தநாளாகத்தான் இருக்கும்!

வாங்க டக்ளஸ்!
//கடை முதலாளிக்கு கிருமிபோஜனம் கிடைக்க என் சார்பில் வாழ்த்துகிறென்..!
பின் நவீனத்துவ பிறந்த நாள் கொண்டாடிய பரணிக்கும் வாழ்த்துக்கள்..!
கேப்டன் மேட்டரு சூப்பரு..!
SMS அசத்தல் ரகம்...!//

நன்றி நன்றி நன்றி!!!!

// புது டெம்ப்ளேட்டா..? //

ஆமாங்க! போட்டுட்டு ரொம்ப கஷ்டப்படுறேன். XML வேற தெரியாது. :((((

வலைச்சரம் மூலமாக உங்களோட பதிவுக்கு வந்தேன். பதிவுகள் நன்று.

http://www.blogintamil.blogspot.com

தொடர வாழ்த்துக்கள்.

படத்த வேற போட்டுட்டீங்களே :) வெளி ஆட்கள் பயந்துற போறாங்க..

பி.கு: நானும் அடி வாங்கியர்களில் ஒருத்தன் தான்.. உங்கள் வழி நடந்த ஜூனியர் :)

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More