April 04, 2009

அயன் - ஒரு கலக்கல் காக்டெயில்

நிறைய புத்திசாலித்தனத்துடன் எடுக்கப்பட்ட ஒரு பக்கா கமெர்ஷியல் படம். கள்ளக்கடத்தல் தாதா தாஸ் (பிரபு). அவரிடம் வேலை பார்க்கும் படித்த புத்திசாலி இளைஞன் தேவா (சூர்யா). அவர்களை வீழ்த்திவிட்டு நம்பர் ஒன்னாக வரத்துடிக்கும் இன்னொரு கள்ளக்கடத்தல் ஆசாமி கமலேஷ் (ஆகாஷ்தீப் ஷேகல்). இவர்கள் இடையே நடக்கும் விறுவிறு போராட்டம் தான் அயன். 

படமே, நாயகன் "ஆண்டவன் ஆட்டம்" என்ற படத்தின் திருட்டு டி.வி.டி கடத்தும் காட்சியுடன் ஆரம்பிக்கிறது. அதை சாமர்த்தியமாக பறிக்கிறான் வில்லன். அதற்க்கப்புறம் வைரம் கடத்த காங்கோ செல்கிறான் நாயகன். அங்கும் அவரிடம் இருந்து வைரத்தைப் பறிக்க சதி நடக்கிறது. அதையும் அதற்கப்ப்புறம் வரும் அனைத்து சதிகளையும் சாகசமாக முறியடிக்கிறான் நாயகன். பிறகு வில்லனை போட்டுக்கொடுக்கும் இன்ஃபார்மராக மாறுகிறான். எதிர்பார்த்த மாதிரியே வில்லனை அழித்து தனது அம்மா ஆசைப்படி ஒரு அரசாங்க வேலையில் அமர, படம் சுபம்.

ஆங்கில நாவல்களில் வருமே! நாயகனுக்கு ஒரு ஆபத்து வரும், மாட்டப்போகிறான் என்று நினைப்போம், ஆனால் அதற்கு முன்னரே ஏதாவது ஒரு மாற்று யோசனை செய்திருப்பான் அதனால் தப்பித்துவிடுவான். இது போல தான் படம் முழுக்க! கடத்தல்களுக்கு உபயோகப்படுத்தப்படும் யுக்திகளை நன்கு யோசித்துச் செய்திருக்கிறார்கள். நாவலாசிரியர் சுபா அவர்களுக்குப் பாராட்டுக்கள்! 

சூர்யா, அசத்தலான் நடிப்பும், டைமிங்க் காமெடியுமாகப் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். காதலில் கரைவதாகட்டும், அன்பில் நெகிழ்வதாகட்டும், கோபத்தில் திமிறுவதாகட்டும் சூர்யா சூர்யா தான்! விமான நிலையத்தின் உள்ளே ஆங்கிலத்தில் புலமை காட்டிவிட்டு வெளியே வந்த உடன் சென்னைத் தமிழில் கலாய்க்கிறார்.

பிரபுவுக்கு இது ஒரு நல்ல படம். குறைந்த நேரமே வந்தாலும் கைத்தட்டல்களை அள்ளுகிறார். அதுவும் அந்த போலீஸ் ஸ்டேஷன் காட்சி கலகலப்பு. நேர்மை தவறாத சுங்க இலாகா அதிகாரியாக வரும் பொன்வண்ணன், சூர்யாவைப் கையும் களவுமாக பிடிக்க முயலும் காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். சூர்யாவின் நண்பனாக முக்கிய வேடத்தில் விஜய் டி.வி. ஜெகன் நடித்திருக்கிறார். 

இவர் தங்கை தமன்னா. இடையிடையே வந்து சூர்யாவைக் காதலித்துவிட்டுப் போகிறார். வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகி வேடம் தான். அழகாக இருக்கிறார்.

எம் எஸ் சரவணனின் கேமரா சென்னையை அழகாகக் காட்டியிருக்கிறது. காங்கோ சண்டைக் காட்சிகளில் கூடவே பயணிக்கிறது. பாடல்கள் படமாக்கப்பட்டிருக்கும் விதம் அருமை. "பள பளக்கிற" பாட்டிற்கு அரங்கமே அதிர்கிறது. அந்த பாட்டில் சூர்யா, கஜினி, வாரணம் ஆயிரம், பேரழகன் பட கெட்டப்புகளில் வருவது அழகு. "விழி மூடி யோசித்தால்" பாட்டு கலக்கல். 

இரைச்சல் இல்லாத பிண்ணனி இசை காட்சிகளை விறுவிறுப்பாக்குகிறது. ஹாரீஸ் ஜெயராஜுக்கும் சூர்யாவுக்கும் அப்படி என்ன ராசியோ தெரியவில்லை. இசை ரசிக்க வைக்கிறது. 

ஆண்டனியின் படத்தொகுப்பு படத்திற்கு ஒரு பெரிய பலம். படம் அவ்வளவு வேகம். (சில காட்சிகள் சீக்கிரம் மறந்துவிடும் அளவுக்கு வேகம்). 

படத்தின் ஆடை தேர்வுகளில் இளமை துள்ளுகிறது. வில்லன் மட்டும் மனதில் ஒட்ட மறுக்கிறார். வட இந்திய முகம் வேண்டும் என்பதற்காக இவரைத் தேர்வு செய்திருப்பார்கள் போல.

காங்கோவில் வரும் சேசிங் சண்டைக்காட்சி "கேசினோ ராயல்" படத்தை நினைவுபடுத்தினாலும் ரசிக்க வைக்கிறது. பள பளக்கிற பாடலின் நடன அசைவுகள் "ஏத்தி ஏத்தி" பாடலுடையதப் போன்றே இருக்கின்றன. 

படத்தில் ஆங்காங்கே தொய்வு ஏற்படுவது போல் தோன்றினாலும் வலுவான திரைக்கதை மூலம் அந்த குறையை மறைத்து ஒரு நல்ல விறுவிறுப்பான படத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் கே வி ஆனந்த்.

அயன் - அயர்ன் செய்ய்ப்பட்ட அழகிய சட்டை :)

8 கருத்து:

சூப்பர் விமர்சனம் ..படம் பார்க்க தூண்டி விட்டுடீங்க மகேஷ் அண்ணே..

என்ன தல!

நீங்க இன்னுமா பார்க்கல?

நல்லா தான் இருக்கு!

அந்த் dvd ஆண்டவன் ஆட்டம்.ஆண்டவன் கட்டளை இல்ல/படம் நல்ல திரில்லர்.

சுப்பர் :-) நானும் பார்த்துட்டு காலையில் மொதல் விமர்சனம் போட்டேன்

வருகைக்கு நன்றி shabi

//அந்த் dvd ஆண்டவன் ஆட்டம்.ஆண்டவன் கட்டளை இல்ல//

தகவலுக்கு நன்றி.

ஜெர்க் ஆகிட்டேன்! :)

வாங்க சுரேஷ்!

நன்றி

நல்லாத்தான் இருக்கு ஓகே

மசாலா படம், தமன்னா தான் படதோட உஜாலா .............

நன்றி அனானி!

// தமன்னா தான் படதோட உஜாலா .............//


:))))))))))))))))

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More