April 24, 2009

போங்கடா நீங்களும் உங்க அரசியலும்

உடனடியாக சண்டையை நிறுத்துமாறு இலங்கை அரசை கோர வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர் மேனன் மற்றும் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரை மறுபடியும் மத்திய அரசு அனுப்பியிருந்தது. எதற்காக? மத்திய அரசின் கவலையை இலங்கை அரசுக்கு எடுத்துச் சொல்லவாம்! தமிழனின் கவலையைச் சொல்ல ஒரு தமிழன் தூதுவனாக கிடைக்கவில்லையா? ஆனால் தமிழ்ப் பிரதிநிதிகளையும் அனுப்ப பயமாகத்தானிருக்கிறது! ஏனென்றால்,

* இங்கே முதலைக் கண்ணீர் சிந்தி கவிதை வடிப்பதும், மத்தியில் பம்முவதுமாய் மக்களை ஏய்த்தவர்களல்லவா நாம்?

* எம்.பிகள் அனைவரும் ராஜினாமா என்று பூச்சாண்டி காட்டி ஒரு சில நாட்களிலேயே அடங்கிப் போனவர்கள் தானே நாம்?

* ஆதரவாக இருப்போம் என்று தமிழர்கள் எதிர்பார்த்த நிலையில் "என்னால் சொல்லத் தான் முடியும்" என்று மனசாட்சியே இல்லாமல் பதிலிறுத்தவர்கள் அல்லவா நாம்?

* தமிழுணர்வு பேசியவர்களை, மத்தியை மகிழ்விப்பதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டம் கொண்டு கைது செய்தவர்கள் தாமே நாம்? 

* தேர்தல் நெருங்க நெருங்க, ஈழத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக காட்டிக்கொள்வதும், ஈழ மக்கள் ஆதரவிற்காக வேலை நிறுத்தம் செய்வதும், ஆனால் மதுக்கடைகளிலும், ஊடகங்களிலும் வேசித்தனமாக திருவிழா கொண்டாட்டங்கள் நடத்துவதுமாக போராடுபவர்கள் அல்லவா நாம்?  

* போர் என்றால் மக்கள் மடியத்தான் செய்வார்கள் என்று சொல்லி திடீர் ஞானோதயமாக உண்ணாநிலை அறிவித்தவர்கள் அல்லவா நாம்?

* வாரிசின் பதவியைக் காப்பாற்ற, அங்கு ஆட்சியில் பங்கு வைத்துக் கொண்டே இங்கு அதை எதிர்த்த சிறந்த பொதுநலவாதிகளல்லவா நாம்? 

* ஈழ ஆதரவும் உண்டு, அதே சமயம் நான்கு சீட் ஐந்து சீட் என்ற பேரமும் உண்டு என்று இரட்டை வேடம் பூண்ட மாபெரும் தமிழ் உணர்வாளர்கள் அல்லவா நாம்?

* எந்த கட்சியை பூண்டோடு ஒழிப்போம் என்று சபதம் போட்டோமோ அதே கட்சியுடன் கூட்டணி வைக்கும் தன்மானத் தமிழர்களல்லவா நாம்?

* மூன்றாவது சக்தியாக இருப்போம் என்ற நிலையில், மூச்சுக் கூட காட்டாமல் பதுங்கியிருந்த மாவீரர்களல்லவா நாம்? 

எப்படி அனுப்புவது?

காவிரிப் பிரச்சனைக்கு கூட ஒன்று சேர வேண்டாம். சொந்த இனம் செத்துக் கொண்டிருக்கும் போது கூடவா ஒன்று சேர முடியவில்லை? அப்படி என்ன தான் சாதிக்கப் போகிறீர்கள்? பாரத ரத்னா விருதா? ஆட்சிக் கட்டிலா? இல்லை கடற்கரையில் கல்லறையா? எதுவாக இருந்தாலும் வாரித்தருகிறோம். எங்களவர்களைக் காப்பாற்றுங்கள்!

22 கருத்து:

நாங்க ஒன்னும் மேனனையும், நாரயனையும் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்துவதற்காக அனுபல... அங்க தமிழர்கள் எல்லாம் செத்துடாகலான்னு பாத்துட்டுவரதான் அனுப்பினோம்.

இன்னும் கொஞ்சம் தமிழர்கள் உயிரோட இருக்காகளாம், அவங்களும் செத்தபிறகு போர் நிறுத்தம் கண்டிப்பா தேவைன்னு உரக்க வலியுறுத்துவோம்.

இத தப்பா புரிஞ்சி, நீங்க எங்களுக்கு ஒட்டு போட்டா அதுக்கு நாங்க ஒன்னும் பொறுப்பில்லை.

-காங்கிரஸ்காரன் பித்தன்

தெருவில் நாயை இழுத்துச் செல்வதுபோல் இழுத்துச் சென்று செருப்படி கொடுக்க வேண்டும்.

தன்னலப் பேய்கள்!

தங்களின் உண்மையான ஆதங்கம் புரிகிறது :-(

yes,wt u r saying is absolutely rite..

elction varuthula nanba parthu podunga ,vitlla nanbarkalidam sollunga 5 vote congrass poratha thadungal.tamilan valka

வருகைக்கு நன்றி தமிழினி!

வருகைக்கு நன்றி Anony!

வாங்க பித்தன்!

//இன்னும் கொஞ்சம் தமிழர்கள் உயிரோட இருக்காகளாம், அவங்களும் செத்தபிறகு போர் நிறுத்தம் கண்டிப்பா தேவைன்னு உரக்க வலியுறுத்துவோம்.//

அது தானே நடக்கிறது!

வாங்க சிக்கி முக்கி!

பார்த்து பேசுங்க! இறையாண்மை அது இதுன்னு சொல்வாங்க!

வாங்க தீப்பெட்டி!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Sachanaa!

வணக்கம் அனானி நண்பரே!

நிச்சயமாக!

//காவிரிப் பிரச்சனைக்கு கூட ஒன்று சேர வேண்டாம். சொந்த இனம் செத்துக் கொண்டிருக்கும் போது கூடவா ஒன்று சேர முடியவில்லை? அப்படி என்ன தான் சாதிக்கப் போகிறீர்கள்? பாரத ரத்னா விருதா? ஆட்சிக் கட்டிலா? இல்லை கடற்கரையில் கல்லறையா? எதுவாக இருந்தாலும் வாரித்தருகிறோம். எங்களவர்களைக் காப்பாற்றுங்கள்!//வேறு என்ன செய்ய முடியும் நம்மால்!தமிழனின் புலம்பல்தான் மிச்சம்!!:(((

அட அர‌சியலும் நல்லா எழுதுறீங்களே..!

வாங்க கேப்டன் ஜெகன்!

// வேறு என்ன செய்ய முடியும் நம்மால்!தமிழனின் புலம்பல்தான் மிச்சம்!!:((( //

வேதனையான உண்மை!

// டக்ளஸ்....... said...
அட அர‌சியலும் நல்லா எழுதுறீங்களே..! //

தல வாங்க!

இது புலம்பல் :(

தல... இவ்வளவு காண்டா...?!
ரொம்ப சூடா இருக்கீங்க போலிருக்கு...
சூட்டோடு சூடா தாமரை பேசுனதையும் யு ட்யூப்பில பார்த்துடுங்க...

ஏண்டா பரதேசிகளா!
யாரை ஏமாத்தறதா நெனப்பு?

உங்க மூஞ்சிலே காரித்துப்ப போறாங்க தேர்தலிலே,உங்க பொண்டாட்டி புள்ள கூட மதிக்காது உங்களை.
சாவறது தமிழினம்டா பொறம் போக்குகளா.அனுப்புனா தமிழனை அனுப்பச்சொல்லுங்கடா அற்பப் பதறுகளா!

வாங்க தமிழ்ப்பறவை அண்ணா!!

// ரொம்ப சூடா இருக்கீங்க போலிருக்கு...//

பொலம்ப வைக்கிறாங்களே!

// சூட்டோடு சூடா தாமரை பேசுனதையும் யு ட்யூப்பில பார்த்துடுங்க...//

பார்த்தாயிற்று அண்ணா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனானி

மகேஷ்... அருமையான் பதிவு....!! உங்களுடைய ஆதங்கத்தை வெளிகொனர்ந்துள்ளீர்...!! அரசியல் வியாதிங்கள விட... அதனுடைய தொண்டர்கள் என்று கூறிக்கொண்டு ஊரையே நாறடிக்கும் மாக்களை ஒன்னும் செய்ய முடியாது....!! அறிவற்ற மூடர்களாகவே இருக்கிறார்கள்.....!! தேர்தலின்போது இரவு பகல் பாராமல் கட்சிக்காக உழப்பது....!! இவுனுங்களுக்கு தெரியாதா இதெல்லாமே நாம் கட்டும் வரிபணம் என்று....!!

சமீபத்தில் நான் திருச்சியில் ஹைவே சாலையில் உள்ள ஒரு கம்பங்கூழ் ் கடைக்கு , கூழ் குடிக்க சென்றேன், சிறிய கீத்து கொட்டகையில் உள்ள அந்த கடைகாரனுக்கு ஒரு சிறிய மகள், மனைவி இறந்து விட்டாளாம்.... , அவன் கீற்று கொட்டகை முழவதும் ஒரு கட்சியின் கொடிகள்......!! நான் கேட்டேன் நீங்கள் இந்த கட்சின் உறுப்பினரா என்று...!! அதற்க்கு அவர் உறுப்பினர் இல்லை .... தீவிர வெறியன் என்றார்...!! இன்னைக்கு எங்க கட்சி பேரணி.. அதுக்க்காகத்தான் நேத்து போய் கட்சி கரை வெச்ச புது வேஷ்டி எடுதிட்டு வந்தேன். இன்னைக்கு காலையில கடைக்கு லீவு உட்டுட்டு பேரணிக்கு போயிருந்தேன்... இப்போதான் வரேன் என்றார்... !! மேலும் , நீங்க கண்டிப்பா எங்க கட்சிக்குத்தான் ஊட்டு போடணும் என்றார்...!! அவரை பார்த்து கொபபடுவதா இல்லை பரிதாபப்படுவதா என்றே தெரியவில்லை....!!! கொடுமை....!!!


உங்கள் வலைப்பூவில் உள்ள அனைத்து பதிவுகளுமே அருமையாக உள்ளது.....!!! வாழ்த்துக்கள் ...!!


ஆதலால் ... எனக்கு கிடைத்த " பட்டாம்பூச்சி " விருதினை தாங்களுக்கும் அளித்து பகிர்கொள்கிறேன் .....!!!



என் முதல் வாழ்த்துக்கள்......!!!!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More