August 24, 2010

புகைப்படம் - 25-08-2010

தமிழ்நாடு தான். எந்த ஊர் என்று தெரிகிறதல்லவா? கடைசி படத்தில் க்ளூவும் இருக்கிறது. நன்றி ஹ...

August 23, 2010

எம்.பிக்கள் சம்பளம் - ஒரு அனல் மூச்சு.

ஒரு வழியாக குட்டிக்கரணம் அடித்து 500 சதவீத சம்பள உயர்வை வாங்கியே விட்டனர் எம்.பிக்கள். இப்போது மாதச் சம்பளம் 1.6 லட்சம். சம்பள உயர்வு வேண்டும் என கோஷம் எழுப்பி, அவையை முடக்கி வாங்கிய உயர்வு இது.  இன்று லஞ்ச்சில் இதைப்பற்றி தான் பேச்சு. அந்த 500 சதவீத உயர்வு எல்லோரிடமும் ஒரு அனல் மூச்சைக் கிளப்பிவிட்டிருந்தது. :)  சாதாரண கம்ப்யூட்டர் ப்ரோக்ராமர் வேலையில், 6%, 8% உயர்வு வாங்கவே நிர்ணயிக்கப்பட்ட Goals எல்லாம் முடித்திருக்க வேண்டும், சர்டிஃபிகேஷன் ஏதாவது எழுதியிருக்க வேண்டும், Value-Add ஏதாவது காட்ட வேண்டும், இப்படி ஏகப்பட்ட ஏகப்பட்ட மதிப்பீட்டு முறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு துறையிலும் அதற்குத் தகுந்தவாறு வழிமுறைகள் கட்டாயம் இருக்கும். ஒரு தொகுதியின் பிரதிநிதி என்பவர் ஒரு பெரிய நிறுவனத்தின் ஒரு துறையின் தலைவர் போலக் கொள்ளலாமா? கொண்டால் அந்தப் பதவிக்கு ஏன் மதிப்பீட்டு முறையில் சம்பள...

August 18, 2010

அரட்டை - 19-08-2010

நண்பர்களுடனான எனது சனிக்கிழமைகள் விசேஷமானவை. மறுநாள் காலை நான்கு மணி வரை நீளும் இரவுகளை, பேசியேத் தீர்ப்போம். அரிதாக உருப்படியான விஷயங்கள் விவாதிக்கப்படுவதுண்டு. சமீபத்தில் விவாதிக்கப்பட்ட விஷயம் G.D.P (Gross Domestic Product). மொத்த உள்நாட்டு உற்பத்தி. இந்தியாவின் ஜி.டி.பி விகிதம் சரியான முறையில் கணக்கிடப்படுவதில்லை என்று பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கு ஜி.டி.பி பற்றி ஒரு இழவும் தெரியாத்ததால் புரிந்தும் புரியாமலும் கேட்டுக்கொண்டிருந்தேன். அன்று மழை பெய்து ஓய்ந்திருந்தது. சிட்டி சென்டரிலிருந்து அறைக்கு வந்து கொண்டிருந்தோம். ஜி.டி.பி யில் ஆரம்பித்த விவாதம் பிளாட்ஃபார்ம் வாசிகள் பக்கம் திரும்பி, அரசின் மெத்தனத்தைச் சாடி, இறுதியாக "அரசாங்கம் இருக்கட்டும்,...

August 17, 2010

நான் மகான் அல்ல!

1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்? மகேஷ் : ரசிகன். 2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?   மகேஷ் என் பெயர். ரசிகன் நான் படித்து வாங்கிய பட்டம்.  :)  3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.. அது ஒரு சோக தருணம். (உங்களுக்குத் தான்) 4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?  எப்பயாச்சும் எழுதுவதே கஷ்டமாயிருக்கிறது. இதில் பிரபலம் வேறா? நெக்ஸ்ட்...  5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்? அவ்வப்போது. பகிர்ந்துகொள்ளும் போது சந்தோஷம் இரட்டிப்பாகுமாம். ஆகிறதா என்று பார்க்க! 6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா? நண்பர்களைச்...

August 10, 2010

லைட் ரூம்

(ஜில்லு, தலைப்பைப் பார்த்துட்டு தப்பா நினைக்கக் கூடாது.) ஃபிலிம் நெகட்டிவ்களை ப்ராசஸ் (சரியாகச் சொன்னால் டெவலப்) செய்யும் இடம் டார்க்ரூம் என்று தெரியும். அதன் அடிப்படையில், டிஜிட்டல் படங்களைப் ப்ராசஸ் செய்ய லைட்ரூம் என்றொரு மென்பொருள் இருக்கிறது. இப்பொழுது தான் உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறேன். Exposure, Clarity, brightness, Contrast என ஏறக்குறைய அனைத்து பண்புகளையும் சுலபமாக மாற்றிக்கொள்ள் முடிகிறது. இதன் முக்கிய அம்சமே Clarity தான். வழக்கமாக படத்திலுள்ள ஒளி இரைச்சலை (Noise) நீக்க முயன்றால், “ஙே” என்றிருக்கும். ஆனால் இங்கு படத்தின் தரத்துக்கு எந்தப் பங்கமுமின்றி Clarity ஐ அதிகப்படுத்த முடிகிறது. இன்னொரு முக்கிய அம்சம் Presets. ஃபோட்டோஷாப்பில் முக்கி...

August 05, 2010

எந்திரன் - முன்னோட்டம்.

சுஜாதாவின் "என் இனிய இயந்திரா" படித்திருக்கிறீர்களா? அழகான அறிவியல் கதை. நிலா என்ற அழகியும் ஜீனோ என்ற இயந்திர நாயும் சேர்ந்து கொண்டு செய்யும் சாகசங்கள் தான் கதை. ஜீனோ அநியாயத்துக்குப் புத்திசாலி. புத்தகம் படிக்கும், கவிதை நெய்யும், லாஜிக்கல் ரீசனிங்கில் வித்தை காட்டும். எல்லாவற்றிற்கும் மேலாக உணர்வுகள் என்ற உன்னதத்தைப் பெற்று படைப்பின் உச்சத்தை அடையும். தானாகவே சிந்திப்பது, நிலாவின் மேல் மையல் கொள்வது, தடவிக்கொடுத்தலில் இருக்கும் அன்பை உணர்வது, பயம் கொள்வது என்று அட்டகாசம் செய்யும். இயந்திரன் என்ற பெய்ரைக் கேட்டவுடன் அப்படிப்பட்ட செயற்கை அறிவுடன் கூடிய இயந்திரம் செய்யும் சாகசங்கள் தான் படம் என்று தெரிந்தது. பாடல்களும் ட்ரெய்லரும் அதை உறுதிப்படுத்துகின்றன. பார்க்கலாம் அறிவியலும் மசாலாவும் ஒன்று சேரப் போகின்றன. 160 கோடி பட்ஜெட் என்கிறார்கள். சன் பிக்சர்ஸ் செய்யலாம். ரஜினியின் முகத்தை விதவிதமான...

Pages 311234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More