இந்தியாவின் முதல் அணுசக்தி நீர் மூழ்கிக்கப்பல் INS Arihant, கடந்த இருபத்து ஆறாம் தேதி (கார்கில் நினைவு தினம்) நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது முழுவதுமாக இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் சுமார் நாற்பது ஆண்டு காலக் கனவு நனவாகி இருக்கிறது. கிட்டத்தட்ட இருபது வருடங்களாக கட்டுமானத்தில் இருந்ததாகக் கேள்வி. ஆனால் கப்பல் முழுவதுமாகச் செயல்பட குறைந்தது ஐந்து வருடம் ஆகும் போலத் தெரிகிறது! (ஆமா! இப்ப தானே Build Phase முடிஞ்சு இருக்கு? இன்னும் System Testing, User Acceptance..... hmm... Miles to Go!){}கலைஞரின் "பொன்னர் சங்கர்" என்ற சரித்திர நாவலைப் படமாக்குகிறார்கள்(கேபிள் சங்கர் விமர்சனம் எழுதுவார்ல?). அனேகம் பேருக்கு பொன்னர் மற்றும் சங்கர் ஆகியோர் சரித்திர நாயகர்கள். ஆனால் கொங்கு தேசத்து மக்களுக்கு அவர்கள் அண்ணன்மார் சாமி என்று அழைக்கப்படும் குல தெய்வங்கள். வழி வழியாக சொல்லப்படும்...