July 05, 2009

வேதாளம் கேட்ட கேள்விகள்.

யாரோ எப்போதோ கிளப்பிவிட்ட வேதாளம் அங்கே சுற்றி இங்கே சுற்றி இப்போது என் முதுகில் ஏறிக்கொண்டுள்ளது. இந்த வேதாள்த்தை என் மீது ஏவி விட்ட புண்ணியவான் அண்ணன் தமிழ்ப்பறவை அவர்கள்! நல்லவேளை இந்த வேதாளம், ப்தில் சொல்லாவிட்டால் தலை சுக்குநூறாகப் போகக்கடவது என்றெல்லாம் சபிக்கவில்லை. சில கேள்விகளுக்கு பதில் சொல்லாவிட்டாலும் "தொலைந்து போ" என லூசில் விட்டுவிட்டது.
இனி வேதாளம் கேட்ட கேள்விகளும் இந்த விக்கிரமாதித்தன் பதில்களும்!

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

மகேஷ் - குழந்தையாக இருந்தபோது என்ன பெயர் வைப்பது என்ற குழப்பம் வந்ததாம் என் தாத்தா, சில பெயர்களை எழுதி சுருட்டிப்போட்டு தவழ்ந்து கொண்டிருந்த என்னை எடுக்க வைத்திருக்கிறார்! எடுத்த சீட்டில் இருந்தது மகேஷ். நானே வைத்துக்கொண்டதால் (?) எனக்கு இந்த பெயர் பிடிக்கும். தோழிகள் / ரசிகைகள் (அடீங்) இந்த பெயரையும் சுருக்கி "மேக்ஸ்" என்று அழைப்பது இன்னும் ஜோராக இருக்கிறது.

ரசிகன் - இதுவும் நானே வைத்துக்கொண்ட பெயர். இந்த வார்த்தையின் மகத்துவத்தும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதுவும் நெம்ப பிடிக்கும்.

2) கடைசியா அழுதது எப்போது?

நினைவில்லை.

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?

ரொம்ப சுமாராகவே இருக்குமென்பதால் மெனக்கெட்டு ரசித்ததில்லை. இந்த கேள்விக்காக எழுதிப் பார்த்ததில்.... வேண்டாம். மகா மட்டமாக இருக்கிறது.

4) பிடித்த மதிய உணவு?

சிக்கன் கொழம்பும் சுடுசோறும். கலந்துக்க கொஞ்சூண்டு தயிரும்!

5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா?

அது அந்த வேறு யாரோவைப் பொறுத்தது. எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை.

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?

மெரீனா கடலைப் பார்த்ததும் கடலில் குளிக்கும் ஆசையே விட்டுப் போய் விட்டது. அருவிக் குளியலுக்கே என் ஓட்டு.

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?

சிரிக்கிறாரா என்று.

8) உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விசயம் என்ன? பிடிக்காத விசயம் என்ன?

பிடித்த விஷயம் - எளிதில் நட்பு பாராட்டுதல்...
பிடிக்காத விஷயம் - கோபம், நெருங்கியவர்கள் மீதும்.

9)உங்கள் துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?

பேச்சுலர் சாமியோவ்!

10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?

நண்பன் ஜெயப்பிரதி.

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?

கருப்பு நிற அரைக்கால் சட்டை.

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

விக்ரம் என்ற படத்தில் வரும் "மீண்டும் மீண்டும் வா" பாட்டு!

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?

கருப்பு

14) பிடித்த மணம்?

மல்லிகை

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவர்களிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்?

லவ்டேல் மேடி - இவரோட நக்கலான பேச்சு. இந்த கேள்விகளை இவர் எப்படி கையாளப்போகிறார் என்ற எதிர்பார்க்கிறேன்.

16) உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

அண்ணன் தமிழ்ப்பறவை - அநேகமாக அனைத்தும். இவரது உவமைகளும், இவர் வரையும் படங்களும் ஜூப்பரா இருக்கும்.

17) பிடித்த விளையாட்டு?

யோவ், வேதாளம்! இன்னா மாதிரி பாட்டு கேட்டுட்டு இருக்கேன், இப்ப வந்து இன்னா வெளாட்டு புடிக்கும்னு கேக்குறியே! என்னென்னவோ தோணுதுபா!

சரி சரி, ஹாக்கி ரொம்ப புடிக்கும்.

18) கண்ணாடி அணிபவரா?

ஆம்! சில நாட்களாக.

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?

செண்டிமெண்ட், சண்டை, குத்துப்பாட்டு, குத்து வசனம், அட்வைஸ், ரத்தம், தத்துவம் இவை எதுவுமில்லாத படங்கள்.

20) கடைசியாகப் பார்த்த படம்?

சக்தே (எத்தனையாவது முறை என்று நினைவில்லை.)

21) பிடித்த பருவ காலம் எது?

கோடை காலம். அந்த பருவத்தில் எங்கள் கல்லூரிச் சாலை முழுவதும் கோலம் போட்டது போல இரத்தச் சிவப்பும், அடர் மஞ்சளுமாய் மாறி மாறி பூக்களை உதிர்த்திருக்கும் அந்த திலகம் மற்றும் பாதிரி (கொன்றை வகைகள்)மரங்களுக்காக!

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

The Six Sacred Stones - By, Matthew Reilly.

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?

அடுத்த நல்ல படம் கிடைக்கும் போது. நாள் கணக்கெல்லாம் எதுவுமில்லை.

24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம் : குழந்தை (என்னோடது இல்லப்பா) எழுப்பும் எல்லா ஓசையும். ச்சோ ச்வீட்!
பிடிக்காத சத்தம் : அலாரம்

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?

கன்னியாகுமரி.

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

இருக்கிறது. நன்றாக பொய் சொல்வது.

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நிறைவேற்ற முடியாது எனத் தெரிந்தும் தரப்படும் வாக்குறுதிகள்.

28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம்.

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

அதிகம் சுற்றியதில்லை. இப்போதைக்கு ஏற்காடு.

30) எப்படி இருக்கணும்னு ஆசை?

யாரையும் காயப்படுத்தாமல்.

31) மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

Out of Syllabus

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க.

வாழ்க்கைங்கறது வாழைக்காய் மாதிரி. கறை படியறதும் கறை படியாததும் நாம கையாள்றதப் பொறுத்து தான் இருக்கு. எப்பூடி?

12 கருத்து:

// மகேஷ் - குழந்தையாக இருந்தபோது என்ன பெயர் வைப்பது என்ற குழப்பம் வந்ததாம் என் தாத்தா, ///


ஏண்டா மாப்ள .... அவ்ளோ அழகா இருந்தியா.....???



// சில பெயர்களை எழுதி சுருட்டிப்போட்டு தவழ்ந்து கொண்டிருந்த என்னை எடுக்க வைத்திருக்கிறார்! //



உனக்கு பேரு வெக்கரதுக்குல்லையே பெரிய சர்ச்சைய கெலப்பீருக்குற .......??


// தவழ்ந்து கொண்டிருந்த என்னை //



அப்பவே சில்மிச வேலையில எரங்கீட்ட போல ........!! நடத்து... நடத்து.. !!!



// எடுத்த சீட்டில் இருந்தது மகேஷ். //


அட......!!! இது பில் கேட்ஸ்ஓட மச்சாம்பேரு........!!!!!!




// தோழிகள் / ரசிகைகள் (அடீங்) ///


தோழிகள் ... ரசிகர்கள் எல்லார்த்துக்குமே விழுப்புரத்துக்கு பக்கத்துலதான் கொலதெய்வ கோயிலாமா......???



// இந்த பெயரையும் சுருக்கி "மேக்ஸ்" என்று அழைப்பது இன்னும் ஜோராக இருக்கிறது //

ஆனா... ஸ்கூல்ல கணக்குல வாங்குனதெல்லாம் முட்ட......!!!! இதுல உனக்கு மேக்ச்ன்னு வேற பேரு....!!!


அடியேய் .... யாருகிட்ட உடுற உன் டகால்டிய.....!!!!!



அதுக்கு " பாக்ஸ் " வேசிருந்தாகூட சரக்குக்கு ஸ்நாக்ஸ் போட்டு கொண்டு போவலாம்.... .... !!!!




// 2) கடைசியா அழுதது எப்போது?

நினைவில்லை. //



அந்த சப்ப பிகரு சகுந்தலா வுக்கு லவ் லெட்டர் குடுத்து ... நடு ரோட்டுல ஓட .. ஓட ... கல்லுட்டு அடுச்சாலே.....!! அந்தன்னைக்கு நீ அழுவுல ........???

உண்மைய சொல்லுடா மாப்ள...!!!




// மகா மட்டமாக இருக்கிறது. //


உண்மைய ஒத்துகிட்ட ..... பரவால்ல.....!!!!




// 4) பிடித்த மதிய உணவு?

சிக்கன் கொழம்பும் சுடுசோறும். கலந்துக்க கொஞ்சூண்டு தயிரும்! ///



இதே எல்லாமே ஓசியில தான..............!! என்னைக்கு நீ காசு குடுத்து சப்புட்ருக்குற.....!!!




// 5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா?

அது அந்த வேறு யாரோவைப் பொறுத்தது. எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. //



ஐ...... " கூவுற கோழி... கூவுற வேல....


ராசாத்தி ராசென் வாராண்டி புல்லா.......


நம்மாளு.... மகேசு நமாலு..........."



டேய் மாப்ள.... யாரோ உன்னைய கூப்புடுராங்கடா .....!!!!






// 6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?

மெரீனா கடலைப் பார்த்ததும் கடலில் குளிக்கும் ஆசையே விட்டுப் போய் விட்டது. அருவிக் குளியலுக்கே என் ஓட்டு. //



குளிக்கவே புடிக்காது... இதுல கேள்வி வேற.......!!!!!!!




// 7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?

சிரிக்கிறாரா என்று. //



ஓசியில ஏதாவது வாங்கித் தருவானான்னு......!!!!!





///
8) உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விசயம் என்ன? பிடிக்காத விசயம் என்ன?

பிடித்த விஷயம் - எளிதில் நட்பு பாராட்டுதல்...
பிடிக்காத விஷயம் - கோபம், நெருங்கியவர்கள் மீதும். //



புடுச்ச விசியம் -- ஷகிலா படத்துக்கு ஓசியில tikkettu வாங்கி வெச்சு ப்ரெண்ட்ஸ் கூப்புட்டா....



புடிக்காத விஷயம் -- நா திங்குற மொக்க ஊசிப்போன பிரியாணியையும் எம்பட கலீக் சாரா திருடி திங்குறது......




/// 9)உங்கள் துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?

பேச்சுலர் சாமியோவ்! //



ஒண்ணா ... ரெண்டா.... எதயச் சொல்றது.....!!!!




// 10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?

நண்பன் ஜெயப்பிரதி. //




அவன் இருந்திருந்தான ஓசில ஏதாவது அவன்கிட்ட வாங்கிகிட்டு அவன் மண்டைய கழுவி கமுத்தலாம்....!!


ஜஸ்ட் மிஸ்ஸு......!!!!!!!

// 11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?

கருப்பு நிற அரைக்கால் சட்டை. //



அது எந்த புன்னியவானுதோ.......!!!!




// 12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

விக்ரம் என்ற படத்தில் வரும் "மீண்டும் மீண்டும் வா" பாட்டு! //




பயபுள்ள ... ஒரு மார்கமாதேன் இருக்குறான்.... !! எதுக்கும் ரூம் மேட்ஸ் தம்பிங்களா.... கொஞ்சம் தள்ளியே படுத்துங்கப்பா ....!!!!





// 14) பிடித்த மணம்?

மல்லிகை //


யார்டா மாப்ள அந்த பாய் அக்கா.......???



// 15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவர்களிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்?

லவ்டேல் மேடி - இவரோட நக்கலான பேச்சு. இந்த கேள்விகளை இவர் எப்படி கையாளப்போகிறார் என்ற எதிர்பார்க்கிறேன். //




அடங்கொன்னியா........!!!!! உனக்கு ஏன் இந்த கொல வெறி.......!!!





// 17) பிடித்த விளையாட்டு?

யோவ், வேதாளம்! இன்னா மாதிரி பாட்டு கேட்டுட்டு இருக்கேன், இப்ப வந்து இன்னா வெளாட்டு புடிக்கும்னு கேக்குறியே! என்னென்னவோ தோணுதுபா!

சரி சரி, ஹாக்கி ரொம்ப புடிக்கும். ///



சின்ன வயசுல வெலாடுனது....!!

அட .. கம்முனு இருங்க... பயனுக்கு வெக்...வெக்கமா வருது.....!!!




// 18) கண்ணாடி அணிபவரா?

ஆம்! சில நாட்களாக. ///


லென்ஸ் கண்ணாடியாடா மாப்ள....???? பின்ன ..... கம்பனியில .. ஒன்னு ... ரெண்டையா.. பாக்குற.....!!!!





// 19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?

செண்டிமெண்ட், சண்டை, குத்துப்பாட்டு, குத்து வசனம், அட்வைஸ், ரத்தம், தத்துவம் இவை எதுவுமில்லாத படங்கள். //




புரச்சி புயல்.... த்து... கவர்ச்சி புயல்........ சகிலாவின் கிட படமான கின்னார தும்பி முதல் ... , தலைவியின் தற்போதைய படமான அந்தரங்க இரவு வரை......!!!!!






// 20) கடைசியாகப் பார்த்த படம்?

சக்தே (எத்தனையாவது முறை என்று நினைவில்லை.) //



கடைசி சொன்ன பதில்.......!!!!

// 21) பிடித்த பருவ காலம் எது?

கோடை காலம். அந்த பருவத்தில் எங்கள் கல்லூரிச் சாலை முழுவதும் கோலம் போட்டது போல இரத்தச் சிவப்பும், அடர் மஞ்சளுமாய் மாறி மாறி பூக்களை உதிர்த்திருக்கும் அந்த திலகம் மற்றும் பாதிரி (கொன்றை வகைகள்)மரங்களுக்காக! //



குளிர் காலம்....!! மஜா வுக்கு நல்லாருக்கும்....!! சாப்ட்வேர் கம்பனி வேற.....!!!!!





// 22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

The Six Sacred Stones - By, Matthew Reilly. //



மொதோ பக்கத்தையே ஒரு வருசமா படிக்கிறியாமா....??? அவ்வளவு இன்ட்ரஸ்டிங் ஸ்டோரியா........????




// 23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?

அடுத்த நல்ல படம் கிடைக்கும் போது. நாள் கணக்கெல்லாம் எதுவுமில்லை. //



நேத்து ஷகிலா படமின்னா... இன்னைக்கு நமிதா படம்.....!!!!!!





// 24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம் : குழந்தை (என்னோடது இல்லப்பா) எழுப்பும் எல்லா ஓசையும். ச்சோ ச்வீட்!
பிடிக்காத சத்தம் : அலாரம் //



பிடித்த சத்தம் : மிட் நைட் மசாலா சத்தம்...


பிடிக்காத சத்தம் : டீம் லீடரோட சத்தம் ....





// 25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?

கன்னியாகுமரி. //



பக்கத்து தெரு பாபிலோனாவ டாவடிக்கரதுக்கு ....!!




// 26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

இருக்கிறது. நன்றாக பொய் சொல்வது. //



ம்ம்ம்... ஓசியில எது குடுத்தாலும் .... கூச்சப் படாம வாங்கிக்குவேன்......!!!!



// 27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நிறைவேற்ற முடியாது எனத் தெரிந்தும் தரப்படும் வாக்குறுதிகள். //



நா நல்ல பையன்னு நாலு பேரு சொல்லுறது......




// 28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம். //



நானே சைத்தான் ... இதுல சாத்தான் வேறையா.......




// 29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

அதிகம் சுற்றியதில்லை. இப்போதைக்கு ஏற்காடு. //



ஏண்டா மாப்ள ... !! அடிகடி டபுள்ஸ் போயிருப்பையாட்ட ..........??





// 30) எப்படி இருக்கணும்னு ஆசை?

யாரையும் காயப்படுத்தாமல். ///



சாரா கிட்ட கேட்டு பாக்கலாமா.....???




// 31) மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

Out of ச்ய்ள்ளபுஸ் //


ராவா ஒரு கோட்டார் அடிக்கறது........




// 32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க.

வாழ்க்கைங்கறது வாழைக்காய் மாதிரி. கறை படியறதும் கறை படியாததும் நாம கையாள்றதப் பொறுத்து தான் இருக்கு. எப்பூடி? //



ஓசி.... ஓசி... ஓசி......


ஓசியில எது கெடச்சாலும் வாங்கிக்கணும்.......!!!!

தம்ப்ப்ப்ரீ...
பதில்கள் சுவாரஸ்யமா இருக்கு... இது போல எழுத நினைத்து, கை வரவில்லை.
//நானே வைத்துக்கொண்டதால் (?) எனக்கு இந்த பெயர் பிடிக்கும். //
//இந்த கேள்விக்காக எழுதிப் பார்த்ததில்.... வேண்டாம். மகா மட்டமாக இருக்கிறது.//
//சிரிக்கிறாரா என்று. //
//யோவ், வேதாளம்! இன்னா மாதிரி பாட்டு கேட்டுட்டு இருக்கேன், இப்ப வந்து இன்னா வெளாட்டு புடிக்கும்னு கேக்குறியே! என்னென்னவோ தோணுதுபா!

//
//செண்டிமெண்ட், சண்டை, குத்துப்பாட்டு, குத்து வசனம், அட்வைஸ், ரத்தம், தத்துவம் இவை எதுவுமில்லாத படங்கள்.

//அப்போ தமிழ்ப் படமே பிடிக்காதா...?
//Out of Syllabus//
எல்லாமே இளமை துள்ளல் பதில்கள்..
அல்டிமேட்.. வாழ்க்கையும், வாழைக்காயும்...
அது சரி.. கேள்விகளைக் காப்பி பண்றாப்போ, சில இடங்களிலும் அப்படியே என் பதிலைக் காப்பி பண்ணி இருக்கியே..!!! :-))

@ லவ்டேல் மேடி

யோவ் மாமா! இப்ப சந்தோஷமா? இதுல நான் எதுக்கு பதில் சொல்றது? இருடி, நீ எழுதப் போற இல்ல? அங்க வச்சுக்குறேன் கச்சேரிய!

அடேய் மாப்ள .......!!! நா அந்த பதிவ போட்டுட்டேன் ....!!!!! நீ... என்ன வேணுமுனாலும் கமென்ட் போட்டுக்கோ.....!! நாங்கெல்லாம் அசர மாடோமுள்ள........!!!!!!

// தம்ப்ப்ப்ரீ...
பதில்கள் சுவாரஸ்யமா இருக்கு...

எல்லாமே இளமை துள்ளல் பதில்கள்.. //

நன்றி தமிழ்ப்பறவை அண்ணா!

// அல்டிமேட்.. வாழ்க்கையும், வாழைக்காயும்... // சொந்த சரக்கு சாமியோவ்!

அது சரி.. கேள்விகளைக் காப்பி பண்றாப்போ, சில இடங்களிலும் அப்படியே என் பதிலைக் காப்பி பண்ணி இருக்கியே..!!! :-))

சாஃப்ட்வேர் இல்ல? அதான். அப்படி இல்லண்ணா! அந்த கேள்விகளுக்கெல்லாம் உங்கள் பதிலே தான் என் பதிலும். அதான் அப்படியே உட்டுட்டேன்.

\\வாழ்க்கைங்கறது வாழைக்காய் மாதிரி. கறை படியறதும் கறை படியாததும் நாம கையாள்றதப் பொறுத்து தான் இருக்கு. எப்பூடி?\\

உங்கள ஒரு வரிலதானப்பா பதில் சொல்ல சொன்னோம்.

உங்கள் பதில்கள் அருமை.....

ஆஹா ஒரு மார்க்கமாத்தான் இருக்கு கும்மி

நன்றி டக்ளஸ்.......விடுங்க விடுங்க தெரியாம பண்ணிட்டேன்.

நன்றி சந்ரு

நன்றி நேசமித்ரன்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More