July 11, 2009

Treasure Hunt விளையாடுவோமா?


இந்த விளையாட்டைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்! ஒரு இடத்தில் அடுத்த இடத்திற்கான க்ளூ, அங்கு அதற்கடுத்த இடத்துக்கு என குறிப்பிட்ட இடத்தையோ அல்லது பொருளையோ தேடும் விளையாட்டு. சுத்தலில் விட்டாலும் சுவாரஸ்யமான விளையாட்டு. எங்கள் கல்லூரி விழா நடைபெறும்போது, முதல் நாள் இரவு இந்த விளையாட்டு நடக்கும். மரியாதைக்குரிய இடம் (கொடிக்கம்பம்), மாணவர்கள் அதிகம் விரும்பும் இடம் (கேண்டீன்), அதிகம் காலடி படாத இடம் (நூலகம்) என்று கிலோமீட்டர் கணக்கில் அலைய வைப்பார்கள். குழுக்களாகப் பிரிந்து, மெக்கென்னா தங்கம் தேடுவதைப் போல போட்டி போட்டுத் தேடிக்கொண்டிருப்போம். சைக்கிள், மொபைல் உபயோகிக்கக்கூடாது என்று நிறைய விதிகளும் உண்டு. வலையிலும் இந்த விளையாட்டு மிகப்பிரபலம்.

அதை மாதிரியாக வைத்து வலைப்பூக்களில் ஒரு விளையாட்டை முயன்றிருக்கிறேன். விளையாடிவிட்டு எப்படி இருக்கிறதெனச் சொல்லுங்கள்.

விளையாடும் முறை:

1) க்ளூக்கள் எல்லாம் இந்த பதிவிலேயே இருக்கும். ஒவ்வொரு க்ளூவும் ஒரு குறிப்பிட்ட பதிவரைக் குறிக்கும்.

2) ஒரு பதிவரைக் கண்டுபிடித்தவுடன், அடுத்த பதிவருக்கான க்ளூவை வைத்து அவர் வலைப்பூவில் தேடவேண்டும். அங்கிருந்து அடுத்தவர், அங்கிருந்து வேறொருவர்.

3)எல்லா க்ளூக்களுக்கும் பதிவின் முகப்பிலேயே விடை/லிங்க் இருக்கும். லிங்க் இல்லையென்றால் பதிவரின் பெயரை கூகிளில் தேடலாம்.
முக்கியமாக Lables அல்லது அவர்கள் விரும்பிப் படிக்கும் பதிவுகளில் (My Blog List)!

4) தெரு, வீடு, வாசல், கடை அனைத்தும் வலைப்பூவின் முகப்பையே குறிக்கும்.

5) ஒவ்வொரு வார்த்தைக்கும் முக்கியத்துவம் உண்டு.

6) ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பதிவர் பெயர். அத்தனை பெயர்களையும் கண்டுபிடிக்க வேண்டும்.

7) வெற்றி பெறுபவர்களுக்கு Inox Couple Pass தரலாமென்று திட்டம் *** (Conditions Apply!)

இனி க்ளூக்கள்!


* தமிழில் பேசும் இந்த பறவைக்கு வானமும் வசப்படும் (1). லிங்க் இந்த பதிவில் இருக்கிறது.

* அந்த பறவையின் கூட்டில் இருக்கிறது இளமை வேகம் (2).

* ரயிலேறி வந்தீங்களா? சரி சரி, தெரு வாசலிலேயே இருக்கிறது ஒரு வண்டியும் கூடவே கீயும். எடுத்துக்கொண்டு வாங்க. (3)

* இவர் நிரந்தர கவர்ச்சிக் கன்னியைப் பற்றி ஒரு ஆராய்ச்சி செய்திருக்கிறார். அந்த கட்டுரைக்கு பின்னூட்டியிருக்கிறார் ஒரு 'நாட்டிபாய்'. (4)

* அந்த பாய், "இளம் புலவ"ருக்கு (அந்த மாதிரி தான் பேர் வச்சு இருக்கார்). எழுதிய எதிர்பதிவின் கடைசியில் நவீன கம்பரைக் (5) கலாய்த்திருக்கிறார்.

* இவர் சொல்லும் இலக்கியக் கதைகள் அலாதியானது. ஆனா இப்ப அது இல்ல மேட்டர். இவர் ஒரு 'போட்டி' வைத்திருந்தார். ஊருக்கு உபயோகப்படும் போட்டி அது. அந்த பதிவில் இருக்கிறது அடுத்தவரின் பெயர் (6). அவர் பெயரைச் சொன்னால் 'கோவிச்சுக்குவாரா' என்று தெரியவில்லை.

* அவர் கடையிலேயே காத்திருப்பவர் கந்தா, கடம்பா, கதிர்......னின் நிகழ்காலம் (7)

* இன்பம், செல்வத்தின் அதிபதியை (8) தேடுங்கள் இங்கே.

* இவர் வீட்டிலேயும் ஒரு வாகனம் உண்டு. கார் அல்ல! (9)

அவ்ளோதான்! விடைகளைப் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்!

13 கருத்து:

*தமிழ்ப்பறவை.
*வானவில் வீதி கார்த்திக்.
*கார்க்கி
*வால்பையன்
*நர்சிம்
*உயிரோடை.
*ச.முத்துவேல்
*செல்வேந்திரன்.

கரிக்கிட்டா மகேஷ் அண்ணே..!
(செம த்ரில் மாமேய்....!)

1.தமிழ்ப்பறவை
2. இளமை எக்ஸ்ப்ரஸ்(கார்த்திக் நாராயண்)
3. கார்க்கி
சரியான்னு சொல்லுங்க. அப்பறம் அடுத்ததுக்கு போறேன்.

அட, இதுக்கு Comment Moderation வைக்கணும்ல...!

//அட, இதுக்கு Comment Moderation வைக்கணும்ல...!//அதானே

நல்லா இருக்கு மகேஷ்...

அடப்பாவி கமெண்ட் மாடரேஷனை எடுத்துட்டியா...?

டக்ளஸ்,

கிட்டத்தட்ட... இன்னும் கொஞ்சம் யோசிங்க!

சின்ன அம்மிணி,

கரெக்டாத்த்தான் போறீங்க!

// தமிழ்ப்பறவை said...
நல்லா இருக்கு மகேஷ்... //

நன்றி அண்ணே

ஆஹா... அற்புதமான பதிவு....!! என்னவொரு வியக்கத்தக்க விளையாட்டு.. !! என்னால் கண்டுபிடிக்க மிகவும் சிரமமாய்ற்று...!!!

உங்களின் அபார சிந்தனைக்கு பரிசாக .... இதோ........
http://madydreamz.blogspot.com/2009/07/hunt.html

கெளம்பிட்டாய்யா.. கெளம்பிட்டாய்யா

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More