July 27, 2009

அரட்டை : 27-07-09


இந்தியாவின் முதல் அணுசக்தி நீர் மூழ்கிக்கப்பல் INS Arihant, கடந்த இருபத்து ஆறாம் தேதி (கார்கில் நினைவு தினம்) நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது முழுவதுமாக இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் சுமார் நாற்பது ஆண்டு காலக் கனவு நனவாகி இருக்கிறது. கிட்டத்தட்ட இருபது வருடங்களாக கட்டுமானத்தில் இருந்ததாகக் கேள்வி. ஆனால் கப்பல் முழுவதுமாகச் செயல்பட குறைந்தது ஐந்து வருடம் ஆகும் போலத் தெரிகிறது! (ஆமா! இப்ப தானே Build Phase முடிஞ்சு இருக்கு? இன்னும் System Testing, User Acceptance..... hmm... Miles to Go!)

{}

கலைஞரின் "பொன்னர் சங்கர்" என்ற சரித்திர நாவலைப் படமாக்குகிறார்கள்(கேபிள் சங்கர் விமர்சனம் எழுதுவார்ல?). அனேகம் பேருக்கு பொன்னர் மற்றும் சங்கர் ஆகியோர் சரித்திர நாயகர்கள். ஆனால் கொங்கு தேசத்து மக்களுக்கு அவர்கள் அண்ணன்மார் சாமி என்று அழைக்கப்படும் குல தெய்வங்கள். வழி வழியாக சொல்லப்படும் அண்ணன்மார் சாமி கதைகளில், பொன்னர் சங்கர் ஆகியோருக்கு "வயது பதினாறு வாலிபம் தொண்ணூறு" என்று சொல்வார்கள். அதாவது அவர்கள் பதினாறு வயது வரை தான் வாழ்ந்தார்கள் என்றும் அந்த வயதுக்குள்ளேயே தொண்ணூறு வயதுக்கான ஆளுமையைப் பெற்றிருந்தார்கள் என்றும் சொல்லப்படும். இந்த பதினாறு வயது வாலிபர்கள் கேரக்டரில் தான் பிரசாந்த் நடிக்கிறார். ( என்ன கொடுமை சாமி இது? ). இது தவிர பொன்னர் சங்கரின் தங்கை - பெரிதும் வணங்கப்படும் அருக்காணித் தெய்வமாக யார் நடிக்கப்போகிறார்கள் என்று நினைத்தால் இப்பவே கண்ணைக் கட்டுகிறது. அதற்குள் ட்ராய் பட போஸ்டரில் பிரசாந்த் தலையை ஒட்டி வைத்து ஸ்டில்ஸ் வேறு. படம் வரட்டும் பார்க்கலாம். ஒரு ஆச்சர்யம். ரஹ்மான் இசை அமைக்கிறார் என்கிறார்கள்.

{}

இந்த மொபைல் தேர்வு செய்வது இருக்கிறதே, ரொம்ப கஷ்டம். தேவைப்படும் வசதியும் இருக்க வேண்டும், செக்ஸி மாடலாகவும் (மொபைல் தான்) இருக்க வேண்டும், ஸ்லிம்மாகவும் இருக்க வேண்டும், பணமும் குறைவாக இருக்க வேண்டும் (ஹி ஹி, இது இல்லாம?). இப்படி பார்த்துப் பிடிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது. அதுவும் நண்பர்களிடம் கருத்துக் கேட்டால் அவ்வளவு தான். அவர்களுக்குப் பிடித்த மொபைலைத் தான் உங்கள் தலையில் கட்டுவார்கள். ஆனால் என் நண்பன் "சார்" ஐப் பார்த்து வாங்கு என்றான். எந்த சாரை என்று கேட்டதற்கு முறைத்த அவன், "சார் என்றால் SAR - Specific Absorption Rate. நமது உடம்பு கிரகிக்கும் கதிர்வீச்சின் அளவு" என்று விளக்கினான். SAR அளவு குறைவாக இருந்தால் நல்லதாம். 1.6 வாட்ஸ்/கி.கி என்பது தான் அதிகபட்ச பாதுகாப்பான அளவாம்! பார்த்துக்கோங்க சாம்யோவ்!

{}

இரு வீடியோக்கள் உங்களுக்காக. மேஜிக் எப்படி செய்கிறார்கள் என்று. சிம்பிள் வித்தை தான். பாருங்கள்




எல்லாமே டைமிங் தான்!

இன்னும் அரட்டையடிப்போம்! Have a great Week ahead!

9 கருத்து:

\\ரஹ்மான் இசை அமைக்கிறார் என்கிறார்கள்.\\

என்னாது காந்தி செத்துட்டாரா...?

நல்லாயிருக்கு அரட்டை!

//அருக்காணித் தெய்வமாக யார் நடிக்கப்போகிறார்கள் என்று நினைத்தால்//

ஒருவேளை நவரச நாயகி நமீதாவா இருக்குமோ ??

//SAR - Specific Absorption Rate. நமது உடம்பு கிரகிக்கும் கதிர்வீச்சின் அளவு"//

இந்த கொடுமை வேறையா பாஸ்? பாத்து வாங்கிடுவோம்..

அருமையான பதிவு தோழர் மகேஷ் அவர்களே...!! வாழ்த்துக்கள்...!! வாழ்க வளமுடன்...!!!

// வால்பையன் said...
நல்லாயிருக்கு அரட்டை! //

நன்றி தல!

// சின்ன அம்மிணி said...

ஒருவேளை நவரச நாயகி நமீதாவா இருக்குமோ ?? //

ஏனுங்க? இந்த கொலை வெறி? அருக்காணி சாமிங்க!

நன்றி கலை!

நன்றி மாம்ஸ்!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More