
முதலில் அமரர் சுஜாதா அவர்களைப் பற்றி... கதையின் அடிநாதம் அவரின் என் இனிய இயந்திராவை ஒட்டியே இருக்கிறது. ”செயற்கை அறிவுடன் கூடிய இயந்திரன், மனிதன் போல் சிந்திக்க ஆரம்பித்தால்?” என்ற கேள்வியை வைத்து அவர் எழுதிய கதை என்று பிரம்மாண்டமாக, எந்திரனாக வளர்ந்திருக்கிறது. அஞ்சலிகள்!!! அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.
இனி படம்...
இந்திய ராணுவத்துக்கு அர்ப்பணிப்பதற்காக ஒரு மனித ரோபோவை (சிட்டி - ரஜினி)உருவாக்குகிறார் டாக்டர் வசீகரன் (ரஜினி). அந்த ரோபோவுக்கு மனித உணர்வுகள் கற்பிக்கப்படுகின்றன. பிறகு சிட்டி, டாக்டரின் காதலி சனா (ஐஸ்) மீது காதல் கொள்கிறது. இடையில் வில்லன்(டேனி), சிட்டியை தீய நோக்கத்துக்குப் பயன்படுத்த நினைக்கிறார். அதன் பிறகு...