May 27, 2010

தேவதை - Skin Smoothening Technique.

நிறைய குழந்தைகளின் படங்களைப் பார்த்திருப்பீர்கள். சருமம் பட்டு போன்று மென்மையாக இருக்கும். உதாரணத்துக்கு இந்தப் படத்தைப் பாருங்கள். இதன் ஒரிஜினல் வடிவம் இது. சரி இந்த Effect எப்படிக் கொண்டு வருவது...? 1)  படத்தை PS ல் திறக்கவும்.(கருப்பு வெள்ளையாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.) 2)  பின்னணி லேயரை நகலெடுத்துக்கொள்ளவும். 3) Blending Mode ஐ Overlay க்கு மாற்றிக்கொள்ளுங்கள். 4) Image > Adjustments > Invert. இதன் மூலம் படத்தை பின்னணி லேயரை இன்வெர்ட் செய்து கொள்ளுங்கள்.  5) இனி Smoothen செய்யும் நேரம். Filter > Other > High Pass இதைச் செய்யும். High Pass Radius அளவை மாற்றி விளையாடுங்கள். பொதுவாக 25 முதல் 50 வரையில்...

May 17, 2010

அரட்டை - 18-5-2010

ஆக்ஸிமொரான் தெரியுமல்லவா? தமிழில் முரண்தொடை என்பார்கள்(எச்சூஸ்மி மிஸ்டர் ராஜு... "கிரண் தொடை தெரியும். அதென்ன முரண்தொடை" என்று கேட்கக்கூடாது!).  ஒன்றுக்கொன்று எதிரான பொருள் கொண்ட இரு வார்த்தைகள் ஒன்றாக வந்து ஒரு பொருளைத் தருவது. உதாரணத்துக்கு, ‍நடைபிணம். தின வாழ்க்கையில் நாமும் நிறைய உபயோகித்திருப்போம். இயல்பான நடிப்பு, சிறிய கூட்டம், முழுதாய் காலி, வெட்டிவேலை, தெளிவாக் குழப்பிட்டான், சற்றே அதிகம்... இப்படி நிறைய. செய்யுளெல்லாம் கூட‌ இருக்கிற‌தாம். சினிமா பாட்டுக்கள் கூட! வாச‌மில்லா ம‌ல‌ரிது நினைவிருக்கிற‌தா? ஆனால் நம் ஆதி அவர்களைக் கேட்டால் உலகிலேயே சிறந்த முரண்தொடை "Happily Married" தான் என்பார்... :) {} செம்மொழியான தமிழ்மொழியாம் - கேட்டீர்களா?...

May 16, 2010

கருப்பு வெள்ளை - 1

ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச சமம் என்பார்கள். அதிலும் கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள் இன்னும் ஒரு படி மேல்! ஆனால் என்னதான் Grayscale/Monochrome மோடில் குமுறக் குமுற படம் எடுத்தாலும் சில சமயம் எதிர்பார்த்த அளவுக்கு இருப்பதில்லை. அதற்குத் தீர்வு Post Processing தான். ஒரு வண்ணப் புகைப்படத்தைக் கருப்பு வெள்ளைக்கு மாற்ற நிறைய முறைகள் இருக்கின்றன. Channel Mixer, Adjustment Layer என்று பல வழிகளில் கருப்பு வெள்ளைக்கு மாற்றலாம். இன்னொரு முறை இருக்கிறது. இந்த முறை புகைப்படத்தின் வெளிச்ச அளவை அடிப்படையாகக் கொண்டது. நல்ல ரிசல்ட் தருகிறது. இதற்கு Gorman-Holbert முறை என்று பெயர். பின்வரும் படத்தை இந்த முறையில் மாற்றிப் பார்க்கலாம். 1) படத்தை PS...

May 12, 2010

பெய்யெனப் பெய்த மழை.

எங்களது ஒரு விவசாயக் கிராமம். வாய்க்கால், ஏரிகள், கிணறுகள் என்று நீர் நிலைகள் சூழ்ந்த கிராமம். ஆனால் இன்று எல்லாம் வ‌ற‌ண்ட‌ நிலையில். ம‌ழை என்ற‌ ஒன்றே ம‌ற‌ந்து போன‌ பிற‌கு எங்க‌ள் விவ‌சாய‌ம் ந‌ம்பியிருந்த‌தெல்லாம் ஆழ்துளைக் கிண‌றுக‌ளை ம‌ட்டுமே. ஆயிர‌ம் அடி அல்ல‌து ஆயிர‌த்து முன்னூறு அடி வ‌ரை தோண்டி அங்கு கிடைக்கும் நீர்க்கால‌க‌ளையும் உறிஞ்சியெடுத்துவிட்டோம். ஆழ்துளைக் கிண‌றுக‌ளும் இன்றோ நாளையோ என்ற‌ நிலையில் இருக்கின்ற‌ன. கிடைக்கும் கொஞ்ச நஞ்ச தண்ணீரில் இரு தென்னை மரங்களின் தாகம் மட்டுமே தீர்க்க முடியும். ஒரு காலத்தில் க‌‌ரும்பு, நெல், வாழை, ம‌ஞ்ச‌ள் என்று விளைத்த‌ எங்க‌ள் நில‌மெல்லாம் க‌ல‌க‌ம் செய்து சோள‌த்துக்கு மாறிவிட்ட‌ன. அல்லது சும்மாயிருக்கின்றன.  இந்த நிலை நாங்களே தேடிக் கொண்டது. விவசாயத்துக்குக் கிடைத்த முக்கியத்துவம் நீர் ஆதார மேம்பாட்டுக்குத் தரப்படவில்லை. நிலத்தடி நீர் மேம்படுத்தப்படவில்லை....

May 10, 2010

புகைப்படம்...

1) அவரைக்குப் பூவழகு... 2) பையனை ரொம்ப போரடிச்சுட்டேன் போல!  3) சுண்ணாம்பாறு - பாண்டிச்சேரி.  4) சார்மினார். 5) முஸ்தஃபா முஸ்தஃபா...  6) வாழ வேண்டிய வயசு. உங்கள் மேலான கருத்துக்கள் மேம்படுத்திக்கொள்ள உதவும். Start Music!&nbs...

Pages 311234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More