லோக்சபா தேர்தல் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. ஆனால் அது சரியான நேரம் இல்லை என்றும் நட்சத்திரங்களும், வானிலையும் கூடி வராத காலத்தில் தேர்தலை திட்டமிட்டுள்ளதால், தேர்தலுக்கு முன்பு பெரும் குழப்பங்களும் வன்முறையும் மூளும் என பீதியைக் கிளப்பியுள்ளனர் ஜோதிடர்கள் (நல்லா கெளப்புறாங்கய்யா பீதிய!).
ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த ஜோதிடர் ஜெகன்னாத் மிஸ்ரா கூறுகையில், இந்திய அரசியலமைப்புக்கு இந்த தேர்தல் நல்லதல்ல. அரசியல் கிரிமினல்களின் கூடாரமாகி விட்டது. (தெரிஞ்சது தானே?) வரும் காலம் நல்லதாக இருக்காது என்பதே எனது கணிப்பு என்கிறார்.
தேர்தலுக்கு முன்பு தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெறும் வன்முறைகள் மூளும் என்கிறார் மிஸ்ரா. (உளவுத்துறையில இருந்து உங்களுக்கு தகவல் வந்துச்சா?)
இதுமட்டுமல்லாமல் தேர்தல் முடிந்த பின்னர், பூகம்பம், கடல் கொந்தளிப்புகள், புயல்கள் போன்ற இயற்கை சீற்றங்களும் ஏற்படுமாம். ஏன் மினி சுனாமிகள் கூட வரலாமாம். இதனால் உயிருக்கும், பொருளுக்கும் பேரிழப்பு ஏற்படும் எனவும் ஜோதிடர்கள் பயமுறுத்துகிறார்கள் (நல்ல விஷயமா எதுவும் சொல்லுங்கய்யா!).
அசோக் சனோரியா என்பவர் கூறுகையில், அடுத்த பிரதமர் நிச்சயம் ஒரு பெண்தான். அதிலும் ஜெயலலிதாவின் ஜாதகம் மிகவும் வலுவாக உள்ளது, எனவே அவருக்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன என்கிறார் (அதனாலதான் நேரம் சரியில்லனு சொல்றீங்களா? புரிஞ்சுடுச்சுயா புரிஞ்சுடுச்சு).
ஹ்ம்ம்ம்ம்ம்,,, எவ்வளவோ கேட்டுட்டோம். இதக் கேட்க மாட்டோமா?
நன்றி : தட்ஸ்தமிழ்
2 கருத்து:
//அசோக் சனோரியா என்பவர் கூறுகையில், அடுத்த பிரதமர் நிச்சயம் ஒரு பெண்தான். அதிலும் ஜெயலலிதாவின் ஜாதகம் மிகவும் வலுவாக உள்ளது,//
மைண்ட்லே வெச்சிக்கிறேன்!
வாங்க திரு. நாமக்கல் சிபி! :)
பெரியவங்க முதல் முறையா வந்திருக்கீங்க. வாங்க வாங்க!
Post a Comment