July 10, 2010

மதராசப்பட்டினம்



முதல் நாள் பார்த்தே ஆக வேண்டும் என்று ரொம்ப நாட்கள் காத்திருந்து, அடித்துப் பிடித்து ரிசர்வ் செய்து பார்த்தப் படம். கேட்டுக் கேட்டுத் தீர்த்தப் பாடல்கள், ஆவலைத் தூண்டும் விளம்பரங்கள் என்று எத்தனையோ காரணங்கள்!! காத்திருப்பும் எதிர்பார்ப்பும் வீண் போகவில்லை. இயக்குனர் விஜய்க்கு நன்றிகள், பாராட்டுக்கள்.

இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் நடக்கும் நெகிழ்வான, கனமான ஒரு காதல் கதை. சலவைக்கார மல்யுத்த வீரனாக ஆர்யா. பிரிட்டிஷ் சீமாட்டியாக ஏமி ஜாக்ஸன்(பொண்ணு Miss World Teen !!!!). இருவருக்குமிடையே காதல். சந்தர்ப்பவசத்தால் 1947ல் பிரிகிறார்கள். காதலி இங்கிலாந்து போக நேரிடுகிறது. கிட்டத்தட்ட 60 வருடம் கழித்து ஆயாவாக தன் பழைய காதலனைத் தேடிக் கொண்டு(கணவன் இறந்த பிறகு தான் :) ) சென்னை மன்னிக்கவும், மதராசப்பட்டினம் வருகிறார். தேடலையும், காதலையும் அழகான திரைக்கதை மூலமாக அருமையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். முதல் பாதி முழுக்க காமெடி சரவெடி. இந்தியாவுக்கு சுதந்திரம் என்று அறிவிக்கும் போது இடைவேளை விடுகிறார்கள். இரண்டாம் பாதியில் கேசிங். வழக்கமான க்ளைமாக்ஸ் என்றாலும் அருமை. ஒன்ற முடிகிறது. காட்சிகள் என்று சொல்ல ஆரம்பித்தால் நிறைய சொல்ல வேண்டும்.

ஆர்யா, ஏமி இருவரும் அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார்கள். ஹனீஃபாவைப் பற்றிச் சொல்லியே தீர வேண்டும். மனிதர் வரும் ஒவ்வொரு ஃப்ரேமுக்கும் தியேட்டர் அதிர்கிறது. அவர் இன்னும் வெகு நாட்கள் நம்மோடு இருந்திருக்க வேண்டும். நேதாஜியைப் பின்பற்றும் குஸ்தி வாத்தியாராக வரும் நாசர் முறுக்கிக் கொண்டு திரிகிறார். பாலா சிங், எம்.எஸ். பாஸ்கர் இருவரும் மிகக் குறைவாகவே வந்தாலும் நிறைவு.

படத்தின் முக்கிய பலம் கலை(செல்வகுமார்), ஒளிப்பதிவு(நீரவ் ஷா) மற்றும் இசை(ஜி.வி). மூவரும் அருமையான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். சில இடங்களில் உறுத்தினாலும் சி.ஜியும் நன்றாக இருக்கிறது. Again, பீரியட் படம் எடுப்பது கடினமானது. பணம் ஒரு முக்கியக் காரணி. காட்சிகள், உடைகள், வசனம், சம்பவங்களின் தொடுப்பு இப்படி எல்லாவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் ப்டத்திலும் உழைப்பு தெரிகிறது. இயக்குனர் விஜய் ரொம்ப அமைதியானவராக்த் தெரிந்தார். ஆனால், படத்தில் அடித்து ஆடியிருக்கிறார்.

பழைய சென்னையைப் பார்க்க நிறைவாக இருக்கிறது. இந்தப் படம், பல்வேறு படங்களை நினைவு படுத்தினாலும் அதையெல்லாம் வசதியாக மறந்துவிடலாம். சில காட்சிகளின் நீளமும் பெரிதாக பாதிக்கவில்லை.

படம் எனக்குப் பிடித்திருக்கிறது. உங்களுக்கும் பிடிக்கும்.

டிஸ்கி : ஏமிக்கு சென்னையில் ரசிகர் மன்றம் ஆரம்பித்தாகிவிட்டதா?

22 கருத்து:

//ஏமிக்கு சென்னையில் ரசிகர் மன்றம் ஆரம்பித்தாகிவிட்டதா?
//

ஆரம்பிச்சாச்சு....மனதில்...

நீங்க தலைவர். நான் செயலாளர்..
சரியா?

நான் பொருளாளர்.

அடுத்து ஏமி எங்க வீரத் தளபதிக்குதான் ஜோடியா நடிக்கனும்!

தல இயக்குனர். நல்லாதான் எடுத்திருப்பார். பார்த்துடலாம். :)

காத்திருந்த படம் உங்கள் பார்வை மேலும் ஆவலைத் தூண்டுகிறது.

/////ஏமிக்கு சென்னையில் ரசிகர் மன்றம் ஆரம்பித்தாகிவிட்டதா?
////

ஈரோடு கிளைக்கு நான் அப்ளை பண்ணியிருக்கேன்...

:-)

ஜெட்லி said..

//ஏமிக்கு சென்னையில் ரசிகர் மன்றம் ஆரம்பித்தாகிவிட்டதா?
//

யாருப்பா அது என்னோட ஆளுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்க போறது :)

ஏமி விலாசம் யாருக்கிட்டயாவது இருந்தா கொடுங்கய்யா,தேடி போய் காதலிக்கனும் :)

/தல இயக்குனர்.//
ஹிஹிஹி

கிரீடம்னு ஒரு ப்டம்.. என்னம்மா எடுத்தாரு!!!!!

இன்னைக்கு நைட்டுதானே போறதா இருந்தீங்க????????????

@ பாவம்யா அந்தப் புள்ள....

@ கார்த்திக்...

பார்த்துடுங்க.

நன்றி திரு முருகானந்தன்..

@ அகல்விளக்கு...

நடத்துங்க நடத்துங்க.

@ ஜில்லு..

உன் ஆளா? அடீங்...

வெலாசம் வெலாசம்.... :)

@ கார்க்கி...

இன்னிக்கு நைட்டும் போறதா இருந்தேன்.... ஹி ஹி ஹி...

ஏன்? கிரீடம் படம்னா அவ்ளோ மட்டமா?

:-/

இளைய தலைவலிக்கு எவ்வளவோ தல' பரவாயில்லை..

வொக்காளி விஜய் படம் பார்த்துட்டு எவனாச்சம் நிம்மதியா இருக்க முடியுமா...

மதராசப்பட்டிணம் பார்க்கனும் நண்பா..

@ இர்ஷாத்..

கண்டிப்பா பாருங்க. கருத்துக்கு நன்றி.

நல்லா எழுதிருக்கீங்க..நம்ம விமர்சனத்தையும் வந்து படிச்சுட்டு போங்க...
http://rameshspot.blogspot.com/2010/07/2010-madharasapattinam.html

படம் உண்மையிலயே நல்லா இருக்கு... இது மாதிரி படம் திரும்ப எப்போ வரும்...........

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More