புளூட்டோ... பதவியிழந்த இந்த முன்னாள் கிரகத்தைப் பற்றிய கட்டுரை ஒன்று சமீபத்தில் வாசிக்கக் கிடைத்தது. புளூட்டோவிற்கு அந்தப் பெயர் கிடைத்தது சுவாரஸ்யமான சம்பவம். 18 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை எட்டு கோள்களே அறியப்பட்டிருந்தன. சூரியக் குடும்பத்தின் அந்த ஒன்பதாவது கிரகத்துக்கான(Planet X) தேடல் வெகுகாலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்படி இப்படியென்று 1930ல் இந்தக் கிரகம்(?) கண்டறியப்பட்டது. கிரகம் என்றால் பெயர் வைக்கவேண்டுமே! பெயர் வைக்கும் உரிமை மக்களிடமே விடப்பட்டது. உலகெங்கும் இருந்து ஆயிரக்கணக்கான பெயர்கள், பரிந்துரைகள் குவிந்தன. அதில் இங்கிலாந்தைச் சேர்ந்த பதினோரு வயது சிறுமியின் பரிந்துரை மிகப் பொருத்தமாக இருந்தது. அவள் சொல்லியிருந்த பெயர் "புளூட்டோ." சொல்லியிருந்த காரணம் தான் இந்தப் பெயரைத் தெரிவு செய்ய உதவியது. "சூரியக் குடும்பத்தின் எல்லாக் கோள்களும் (பூமியைத் தவிர) ரோமானிய அல்லது கிரேக்கக் கடவுளர்களின் பெயரைக் கொண்டுள்ளன. அதே போல, இந்தக் கிரகத்துக்கும் கடவுளின் பெயரை வைப்பதே சரி. இயல்பில் இருட்டு மற்றும் அதீத குளிரைக் கொண்டுள்ள இந்தக் கிரகத்துக்கு ரோம் புராணத்தின் பாதாள உலகின் கடவுளான புளூட்டோவின் பெயரே மிகப் பொருத்தமானதாக இருக்கும்" என்பதே அவள் கொடுத்திருந்த விளக்கம். இப்படியாக புளூட்டோ கிரகம் நாமகரணம் சூட்டப்பட்டது. ஓரிரு கோள்களுக்கானப் பெயர் காரணம் ஏற்கெனவே தெரிந்திருந்தாலும் மற்றக் கோள்களைப் பற்றியும் தெரிந்துகொள்ளத் தூண்டியது அந்தக் கட்டுரை.
கூகிள் அண்ணாச்சியைக் கேட்டேன். மற்ற கோள்களுக்கானப் பெயர்க் காரணங்கள்.
புதன் - மெர்க்குரி - வேகமான கிரகம். 88 நாட்களில் சூரியனைச் சுற்றி வருகிறது. இறக்கைகள் கொண்ட ரோமானியக் கடவுளான மெர்க்குரியின் பெயர் வாய்த்தது. இவரது இறக்கைகள் இவரது தகப்பனாரான ஜூபிடர் அளித்ததாம். இவற்றை வைத்துக் காற்றை விட வேகமாகப் பறப்பாராம்.
வெள்ளி - வீனஸ் - பொதுவாக அனைவரும் அறிந்திருப்போம். ரோமானியக் காதல் தேவதை. அழகி. பிரகாசமான அழகியத் தோற்றத்தால் இந்தப் பெயர்.
பூமி - எர்த் - கடவுள் பெயர் இல்லாத ஒரே கிரகம். பழங்கால ஜெர்மன்-ஆங்கிலத்தில் எர்டா என்றால் நிலம்/மண் என்று பெயர். இது மருவி எர்த் ஆனது.
செவ்வாய் - மார்ஸ் - ரோமானிய யுத்தக் கடவுள். இந்தக் கோளின் சிவப்பு நிறம் இரத்தத்தை நினைவூட்டுவதால் இந்தப் பெயர்.
வியாழன் - ஜூபிடர் - ரோமானியக் கடவுள்களின் அரசன். இந்தக் கோளின் பிரம்மாண்டத்துக்காக இந்தப் பெயர்.
சனி - சேடர்ன். - ஜுபிடரின் அப்பா. ரோமானிய லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் :). வில்லனாக மாறிய இவரது தந்தையான யுரேனஸிடமிருந்து ராஜ்ஜியத்தைப் பறித்துத் தனியாக அரசாண்டார் என்று ஒரு கதை உண்டு. பிறகு இவரிடமிருந்து ராஜ்ஜியத்தைப் பறித்தார் ஜுபிடர்.
யுரேனஸ் - முதலில் இங்கிலாந்து மன்னரின் நினைவாக ஜார்ஜியன் கிரகம் என்று தான் இதனை அழைத்தார்கள். பிறகு கிரேக்கக் கடவுளான ஔரானஸின் நினைவாக யுரேனஸ் என்று பெயர் சூட்டப்பட்டது. ஔரானஸ் சனிக் கிரகத்தின் தந்தை. சொர்க்கங்களின் கடவுள்.
நெப்டியூன் - கடல் நிறம் கொண்ட கிரகம். கடல்களின் கடவுளான (ரோமானிய) நெப்டியூனின் பெயர் சூட்டப்பட்டது.
கிரகங்கள் மட்டுமில்லாது அவற்றின் நிலாக்களுக்கும் இதே முறை பின்பற்றப்பட்டது.
தமிழ்நாட்டைச் சற்று நினைத்துப் பாருங்கள். "சூரியக்" குடும்பத்துக்கு இப்போதைய முதல்வர் பாராட்டுக் குழுவினர் பெயர் வைத்திருந்தால் என்னென்ன பெயர்கள் வைத்திருப்பார்கள்? உதாரணம் : சூரியன் - கலைஞர்.
18 கருத்து:
நல்ல பதிவு
அருமை.....
தொடர்ந்து எழுத மனமார்ந்த வாழ்துக்கள்.....
உடம்பு சரியாயிடுச்சு போல
தலைப்பைப் பார்த்து ஏதோ செம்மொழி மாநாட்டுப்பதிவுன்னு நெனைச்சு வந்தேன்!
ரீ-என்ட்ரி "சூரியன்"லயா
பெரிய ஆளுதான் நீங்க
என்ன கட்சியில் சேர்ந்தாச்சா சூரியன் தான்
ரைட்டு...
வருக வருக.. ஒளி வீசுக :)
இன்று பல தகவல்களுக்கு நன்றி...
நல்ல பதிவு நிறைய தெரிந்து கொண்டேன்
இதுவரைக்கும் எனக்கு தெரியாது. நன்றி. :)
நன்றி உலவு.
@ கார்க்கி..
ஆமா சகா
@ ஜில்லு...
இல்லப்பா... நீ வேற.
நன்றி இர்ஷாத்
நன்றி பிரசன்னா.
நன்றி பரணி அண்ணா
ரொம்ப சந்தோஷம் வேலு
@ கார்த்திக்...
என்ன நம்பச் சொல்றியா ?
Post a Comment