புளூட்டோ... பதவியிழந்த இந்த முன்னாள் கிரகத்தைப் பற்றிய கட்டுரை ஒன்று சமீபத்தில் வாசிக்கக் கிடைத்தது. புளூட்டோவிற்கு அந்தப் பெயர் கிடைத்தது சுவாரஸ்யமான சம்பவம். 18 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை எட்டு கோள்களே அறியப்பட்டிருந்தன. சூரியக் குடும்பத்தின் அந்த ஒன்பதாவது கிரகத்துக்கான(Planet X) தேடல் வெகுகாலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்படி இப்படியென்று 1930ல் இந்தக் கிரகம்(?) கண்டறியப்பட்டது. கிரகம் என்றால் பெயர் வைக்கவேண்டுமே! பெயர் வைக்கும் உரிமை மக்களிடமே விடப்பட்டது. உலகெங்கும் இருந்து ஆயிரக்கணக்கான பெயர்கள், பரிந்துரைகள் குவிந்தன. அதில் இங்கிலாந்தைச் சேர்ந்த பதினோரு வயது சிறுமியின் பரிந்துரை மிகப் பொருத்தமாக இருந்தது. அவள் சொல்லியிருந்த பெயர் "புளூட்டோ." சொல்லியிருந்த காரணம் தான் இந்தப் பெயரைத் தெரிவு செய்ய உதவியது. "சூரியக் குடும்பத்தின் எல்லாக் கோள்களும் (பூமியைத் தவிர) ரோமானிய அல்லது கிரேக்கக்...