
சந்திரயான் – 1 எதிர்பார்த்த அளவு செயல்படாதது, கிரையோஜெனிக் – ஜி.எஸ்.எல்.வி தோல்வி போன்ற தொடர் நிகழ்வுகள், 2012 ல் சந்திரயான் – 2 திட்ட்த்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளன. சந்திரயான் 2, நிலவுக்கு மனிதனையனுப்பும் இந்தியாவின் திட்டம். ஆனால் திட்டமிட்டபடி சந்திரயான் – 2 நிலவுக்கு செலுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவிப்பதாலும், 2011ல் விஜயகாந்த் முதல்வராகிவிட்டால் ராக்கெட் எஞ்ஜினுக்கே வேலையிருக்காது என்பதாலும் நாம் கவலையை விட்டுவிடலாம். கிரையோஜெனிக் எஞ்ஜின் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம்.
கிரையோஜெனிக்ஸ் என்பது மிகக் குறைந்த வெப்ப நிலையில் உள்ள் பொருட்களின் தன்மையைப் பற்றிய படிப்பு. குறைந்த என்றால் -150 செல்சியஸுக்குக் கீழே. கிரையோஜெனிக்ஸ் படிப்பில் இவ்வளவு குறைந்த வெப்பநிலைகளை அளக்க செல்சியஸுக்குப் பதில் கெல்வின் என்ற அளவு பயன்படுகிறது (0 டிகிரி செல்சியஸ் = 273 கெல்வின்). இந்த வெப்பநிலையில் பொதுவாக அனைத்து வாயுக்களும் திரவமாகிப் போகின்றன. திரவ நிலையிலுள்ள இந்த வாயுக்கள் திடீரென்று விரிவாகி (ஆவியாகி) வாயு நிலைக்கு மாறும் போது கிடைக்கும் சக்தி அபரிமிதமானது. இந்த சக்தி தான் ராக்கெட்டை சுமார் 30,000 கி.மீ உயரம் வரை உந்தித் தள்ள உதவுகிறது(Thrust). கிரையோஜெனிக் இஞ்ஜின்கள் இந்தத் தொழில்நுட்பத்தில் தான் இயங்குகின்றன. இந்த இயந்திரங்களில் எரிபொருளாக இருப்பவை திரவ ஹைட்ரஜன் (LH2) மற்றும் திரவ ஆக்சிஜன்(LOX). இந்தத் திரவங்கள் எப்படி வாயுநிலைக்கு மாறுகின்றன, எவ்வளவு சக்தி கிடைக்கிறது என்பதெல்லாம் ரொம்ப சயன்ஸ் என்பதால் விட்டுவிடலாம்.
நமது ஜி.எஸ்.எல்.வியைப் பார்ப்போம். ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் செலுத்துதலில் மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலையில் திட எரிபொருளும், இரண்டாவது நிலையில் திரவ எரிபொருளும் பயன்படுகின்றன. இரு நிலைகளில் சுமார் 130 கி.மீ உயரம் வரை செலுத்தப்படுகிறது. அதன் பிறகு கிரையோஜெனிக் இயந்திரம் இயங்க வேண்டும். முதல் இரு நிலைகளை வெற்றிகரமாகக் கடந்த ஜி.எஸ்.எல்.வி மூன்றாவது நிலையில் தோல்வியுற்றது. கிரையோஜெனிக் எஞ்ஜின் இயங்க ஆரம்பிக்கவேயில்லை. சோதனைகளில் நமது கிரையோஜெனிக் இயந்திரங்கள் வெற்றிகரமாக இயங்கியிருந்தாலும், விண்வெளியில், 130 கி.மீ உயரத்தில் இயக்குவது பெரும் சவால் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்தியா கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் இறங்கியதன் பின்னணியில் வழக்கம்போல அமெரிக்காவே இருக்கிறது. 90 களில் இந்திய-ரஷ்ய ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்குக் கிடைக்கவிருந்த இந்தத் தொழில்நுட்பம், அமெரிக்காவின் தலையீட்டால் கிடைக்காமல் போனது. அமெரிக்கா இதற்குச் சொன்ன காரணம் “இந்தியா இந்த்த் தொழில்நுட்பத்தை ஏவுகணைகளைத் தயாரிக்கப் பயன்படுத்தக்கூடும்” என்பது. அதனால் சொந்தமாக இந்த்த் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு அடையும் முயற்சி ஆரம்பிக்கப்பட்ட்து. அன்று ஆரம்பித்தப் பயணத்தின் ஒரு படிக்கட்டு இந்த்த் தோல்வி. படிக்கட்டு மட்டுமே. ஏனெனில், இன்னும் ஒரு வருட்த்தில் மீண்டும் ஒரு முறை ஜி.எஸ்.எல்.வி செலுத்தப்படுமாம்! With More Brilliance, With More Excellence! All the Best!
16 கருத்து:
நல்ல பதிவுங்க. :)
Good One thala..!
அறிய தகவல்களை எளிமையாக தந்துள்ளீர்கள்.
நன்றி.
//இவ்வளவு குறைந்த வெப்பநிலைகளை அளக்க celcius- க்கு பதில் kelvin என்ற அளவு பயன்படுகிறது ( ௦ டிகிரி செல்சியஸ் =273 kelvin). //
என்று சொல்லிருக்கிறீர். குறைந்த வெப்பநிலையை செல்சியஸ் -யிலும் சொல்லலாம்.( -273 degree celcius = 0 Kelvin), kelvin யிலும் சொல்லலாம் என்பது என் தாழ்மையான கருத்து. செல்சியஸ், கெல்வின் இரண்டுமே வெப்பநிலையை குறிப்பட பயன்படுத்தப்படும் இரண்டு வெவ்வேறு அலகுகள் ( units). அவ்வளவே. இது நிச்சயமாக உங்களுக்கு தெரிந்திருக்க கூடிய ஒன்றுதான். இருப்பினும் இது உங்கள் கட்டுரையில் உள்ள பொருட்பிழையாகவே கருது இதை சுட்டிக்காட்டுகின்றேன். மற்றபடி உங்கள் கட்டுரை சிறப்பான ஒன்று. வாழ்த்துக்கள்
வாவ்.
கலக்குறே சந்துரு
பயனுள்ள தகவல்கள், உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றி கார்த்திக்!
நன்றி ராஜூ.
நன்றி திரு. சீனு.
மிக்க நன்றி சங்கர்.
கிரையோஜெனிக்ஸ் படிப்பில் செல்சியஸுக்குப் பதில் கெல்வின் அலகு பயன்படுத்தப்படும் என்று எங்கோ படித்ததாக நினைவு. அதைச் சொல்ல வந்து, இப்படிச் சொல்லிவிட்டேன்.
சுட்டிக்காட்டியதற்கு நன்றிகள்.... :)
நன்றி சகா!
நன்றி சசிகுமார்
ஆல் தெ பெஸ்ட்!
great job mahesh. all the best.
Thanks Uzhavan...
Thanks Shankar
//அமெரிக்காவின் தலையீட்டால் கிடைக்காமல் போனது.//
சண்டாளனுங்க, ஒருத்தன் முன்னேறுனா புடிக்காதே..
அண்ணே.. உங்க கட்டுரைகள் தரமானவையா இருக்கு.. Could see the difference :)
thanks dude...
tharama irukka ? LOL......
Post a Comment