September 08, 2009

Global Warming : என்ன செய்யலாம்?


2012 என்று ஒரு படம். ட்ரெய்லர் பார்த்திருப்பீர்கள். 2012ம் வருடத்துடன் மயன் காலண்டர் முடிந்துவிடுகிறது, பைபிளிலும் 2012ல் உலகம் அழிந்துவிடும் என்று சொல்லப்பட்டுள்ளது, அதனால் 2012ல் நிச்சயமாக உலகம் அழிந்துவிடும் என்று மிரட்டியிருப்பார்கள். நெருப்பு மழை பொழிவதாகவும், கடல் ஊருக்குள் நுழைவதாகவும் காட்டியிருப்பார்கள். இது 2012ல் நடக்கிறதோ இல்லையோ, சீக்கிரமாகவே நடந்துவிடும் அபாயம் இருக்கிறது. காரணம் Global Warming என்று சொல்லப்படுகிற உலக வெப்பமாதல் பிரச்சனை. வாகனங்கள், குளிர் சாதனப்பெட்டிகள் இவற்றிலிருந்து வெளிப்படும் கார்பன் கழிவுகள் வளிமண்டலத்தை மாசடையச் செய்வதுடன் அவற்றை வெப்பமாக்குகிறது என்பதெல்லாம் நமக்கு பால பாடம். அதனால், இந்தப் பிரச்சனைக்கு எதிராகக் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பார்ப்போம்.

1) காகிதப் பயன்பாட்டைக் குறைத்தல்.

இதன் மூலம் காகிதத் தயாரிப்பில் மூலப் பொருளான மரங்களைக் காக்க முடியும். தவிர காகித உற்பத்தியின் போது தேவைப்படுகிற எரிபொருளைச் சேமிக்க முடியும்.

2) வாகனப் பயன்பாடு.

* கார் அல்லது பைக் வைத்திருப்பவர்களா? நண்பர்களாக்ச் சேர்ந்து (CarPooling) வருவதன் மூலம் எரிபொருள்பயன்பாட்டைக் குறைக்கலாம்.

* 20 வினாடிகளுக்கு மேல் சிக்னலில் காத்திருக்க வேண்டியிருந்தால் வாகனத்தை ஆஃப் செய்யலாம்.

3) குப்பைகள்

பேக் செய்வதற்கு குறைவான காகிதங்கள் அல்லது பிளாஸ்டிக் உபயோகப்படுத்தப்பட பொருட்கள் வாங்குவதால் குப்பைகளை ஓரளவு குறைக்க முடியும்

4) ஷாப்பிங்

* ஷாப்பிங் லோக்கலாக வீட்டுக்கு அருகிலேயே இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம். வண்டியை எடுக்கவேண்டாமல்லவா?
* பொருட்களை வாங்கிவிட்டு கேரிபேக் கேட்டுக்கொண்டிருக்காதீர்கள். துணிப்பையை உபயோகிக்கலாம்.

5) மின்சாரம் சேமிப்பு

* சார்ஜர் போன்ற சாதனங்களை ஆஃப் செய்யாமல் விடாதீர்கள். நாம் அடிக்கடி சார்ஜ் ஆகிக்கொண்டிருக்கும் மொபலை சார்ஜர் ஆஃப் செய்யாமல் அப்படியே எடுப்போம். அது வேண்டாம்.

* கணினித்திரையை தேவையில்லாத போது (ப்ரேக், மீட்டிங்... ) ஆஃப் செயவது.

6) மரம்

முடிந்தால் மரம் நடுங்கள். :)

இன்னும் எத்தனையோ வழிகள் இருக்கின்றன. உங்களுக்குத் தெரிந்தவற்றைப் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

இது நடக்க வேண்டுமா?

A race begins in a single step! இது நாம் அனைவரும் ஒன்றாக ஓடியாக வேண்டிய ரேஸ். முதலடியை எடுத்துவைப்போம் வாருங்கள்!

17 கருத்து:

இனிமே எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் பயனளிக்கபோவதில்லை என்று விஞ்ஞானிகள் கைவிரித்து விட்டார்கள்.

2020தில் இருந்து தண்ணீர் பஞ்சமும், 10% நிலத்தட்டுபாடும் இந்தியாவில் தவிர்க்க முடியாததாகிவிடும்! ம்ம் இப்ப பொலம்பி என்ன பயன்?

ஷாப்பிங் கடைகளில் துணிப்பை அவர்களே தருவதற்கு முன்வரவைக்க வேண்டும்.
ஏர்டெல் அறிவித்ததுபோல் எல்லாமே மெயில் பில்களாக்க வேண்டும்(கேட்டுக்கொண்டோருக்கு மட்டும்)
ஒயின் ஷாப்புகளில் காகிதக் கப் பயன்பாட்டினை அறிமுகப் படுத்த வேண்டும்.
எல்லோருமே பிளாக் எழுதுறத நிறுத்தினா நிறைய மின்சாரம் மிச்சமாகும். :-)
வெயிட்டிங் ஃபார் லவ்டேல் மேடிஸ் அட்வைசஸ்...

அன்பான நண்பர் திரு மகேஷ்,

உலக வெப்பமயமாக்குதல், இயற்க்கை வளக்காத்தல் போன்றவைப்பற்றி எழுதியிருக்கிறீர்கள்! என்ன நுனிப்புல் மட்டுமே மேய்ந்து இருக்கிறீர்கள்! பரவாயில்லை, சும்மா நாங்களும் இயற்க்கைப்பற்றி எழுதினோம் என்று சொல்லிக்கொள்ளத்தான் என்றாலும், யாராவது ஒரு சிலராவது இதைப்பற்றியெல்லாம் சிந்திக்கிறார்களே என்பதற்காக உங்களுக்கு ஒரு நன்றி மட்டும் பாராட்டு! வாழ்த்துகள்!

இன்றைய தேதிக்கு, மனித நாகரீகத்தையும், நமது சந்ததியினரையும், ஒட்டுமொத்தமாக, பாகுபாடில்லாமல் புரட்டிப்போட்டு நசமாக்ககூடிய ஒன்று உண்டென்றால் அது Global Warming and Natural degradation மட்டுமே!

இன்று மனிதசமுதாயத்தின் முன்னே இருக்கும் invisible white elephant இதுவே! Mother Earth தினம்தோறும் கர்ப்பழிக்கப்படுகின்றது, நம்ம எல்லோராலும்தான்! கொடுமை என்னவென்றால், இதை செய்பவர்களாகிய நாமெல்லாம் சற்றும் இதை உணரவில்லை!!!!!!

கொடுமை கொடுமை கொடுமை!!!!!!

இது வரையில் Geologists மற்றும் paleontologists படி ஐந்து பெரிய extinctionகளை, இந்த பூமி பார்த்திருக்கிறது! Extinction என்றால் நிர்மூலமாக்குதல்! இந்த பூமியில் கிட்டத்தட்ட 200 Million வருடங்கள் வலம்வந்த Dinosur கள் முற்றிலுமாக அழிந்து போனது ஒரு Extinction ஆகும்! இதைப்போன்று இன்னும் சில அழிதல்கள் நடந்தன! அனால் இவையெல்லாம், இயற்க்கயானவை! Natural destructions to the core where both destruction and evolution was happening side by side! பல உயிரினங்கள் அழிந்தன, இருந்தாலும், பல புது உயிரினங்களும், துளிர்ந்தன, Evolution ஆல்! அப்பொழுது, எல்லாவற்றையும் பூண்டோடு அழிக்க மனித இனம் இல்லை! ஆதலால் Darwinian Evolution எனப்படும் பரிணாம உதித்தலுக்கு தடையேதும் இல்லாமலிருந்தது!

அனால் இன்றுநடப்பதோ, மனிதனின் பேராசையால் நடத்தப்படும் அழித்தல்!!!
ஆறாவது extinction!!!!! பூண்டோடு, கூண்டோடு, எல்லாவற்றையும் நாம் தினம்தோறும் அழித்துக்கொண்டிருக்கிறோம்!!!!!!!

அதனுடன், கண்டபடி carbondioxide ஐ, உருவாக்கி, நம்மை இதுநாள்வரை காத்த Global climatic and weather systems ஐ நாசமாகிக்கொண்டு வருகிறோம்!

இது எங்கு பொய் கொண்டு விடும் என்று நாம் அஞ்சத்தேவையில்லை! எனென்றால், இது எங்கு போகிறது என்று பல விஞானிகள் பக்கம்பக்கமாய் எழுதிவிட்டார்கள்! All remaining doubts about the reality of the disaster that we are heading towards are now cleared! What remains to be doubted and clarified is when this will happen!!!!! At the speed with which Humankind is currently savaging Mother earth, we can expect results in another 50 to 100 Years which surely will be a doomsday scenario with no exagerartion!!!!!

கடைசியாக , இந்த பதிவைஎழுதி, atleast, இதைப்பற்றியெல்லாம் நினைக்க ஒருசிலர் இந்த தமிழ் பதிவுலகில் உள்ளார்கள் என்று காட்டியமைக்கு நன்றி நன்றி!

Finally, given this hopeless situation, your few ideas, if followed by all, will atleast do something that might delay the inevitable by a little bit!!!

நன்றி
நோ

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....தமிழ்செய்திகளை வாசிக்க

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

//ஷாப்பிங் கடைகளில் துணிப்பை அவர்களே தருவதற்கு முன்வரவைக்க வேண்டும்.//

நாங்கெல்லாம்(அமெரிக்கால) துணிப்பைக்கும்(வீட்டுல இருந்து எடுத்து போகனும், இல்லாட்டி காசு குடுத்து வங்கனும்), சில்வர் கூஜாவுக்கும்(பிளாஸ்டிக் வாட்டார் பாட்டிலுக்கு பதிலா) மாறிக்கிட்டு இருக்கோம். அதுதான் இப்ப லேட்டெஸ்ட் ட்ரென்ட்....கேட்ட 'கோ க்ரீன்' அப்டீனு சொல்றாங்க.

//// Global Warming : என்ன செய்யலாம்? //

கோட்டரு அடுச்சுட்டு ... குப்பற படுத்துக்கலாம் ....!!
/// 2012 என்று ஒரு படம். //

ஓஓ..... நா ரெண்டு படமின்னு நெனச்சிட்டேன்...!!
// 2012ம் வருடத்துடன் மயன் காலண்டர் முடிந்துவிடுகிறது, //

பேப்பரு தீந்திருக்கும்....!!
// பைபிளிலும் 2012ல் உலகம் அழிந்துவிடும் என்று சொல்லப்பட்டுள்ளது //

அடங்கொன்னியா...!! பைபிள்ல 2000 த்துலையே ஒலகம் அழுஞ்சு போயிருமின்னுள்ள சொல்லீருக்கு...!! இப்போ மாத்தீட்டாங்களா.....? இல்ல நீ மாத்தீட்டியா.....??
//அதனால் 2012ல் நிச்சயமாக உலகம் அழிந்துவிடும் என்று மிரட்டியிருப்பார்கள். //

கத்திய காட்டியா... இல்ல துப்பாக்கிய காட்டியா.....?/
// நெருப்பு மழை பொழிவதாகவும், கடல் ஊருக்குள் நுழைவதாகவும் காட்டியிருப்பார்கள். //

பீரு மழ... ரம்மு மழ... பேஞ்சாக்கோட ... அண்டா..அண்டாவா ... புடுச்சு குடிக்கலாம்...!!
// இது 2012ல் நடக்கிறதோ இல்லையோ, சீக்கிரமாகவே நடந்துவிடும் அபாயம் இருக்கிறது. //

ஏன்... நடக்காம ... தவுந்து .... பரந்தெல்லாம் போகாதா.....?

// காரணம் Global Warming என்று சொல்லப்படுகிற உலக வெப்பமாதல் பிரச்சனை. //

ஜுஜூபி....!! பிரச்சனைய போர்வையா போத்தி தூங்குரவந்தேன் மனுஷன்...!!
// 1) காகிதப் பயன்பாட்டைக் குறைத்தல். //

அப்போ உம்பட பதிவையெல்லாம் கல்வெட்டுல செதுக்கி வெச்சுபோட்டு.... பக்கத்துலையே கோந்துக்கோ.... !! நாங்க சாவுகாசமா அந்த பக்கம் வரும்போது படுச்சு தெருஞ்சுக்குரொம் ...!!!
// இதன் மூலம் காகிதத் தயாரிப்பில் மூலப் பொருளான மரங்களைக் காக்க முடியும். //

காக்கவும் முடியாது... காக்காவும் முடியாது..... !! வேற எதுக்குமே மரத்த வெட்டறது இல்லியா ....!!
// கார் அல்லது பைக் வைத்திருப்பவர்களா? //

பாதி வெலைக்கு வித்தரலாமுங்கிரியா.....??
// நண்பர்களாக்ச் சேர்ந்து (CarPooling) வருவதன் மூலம் எரிபொருள்பயன்பாட்டைக் குறைக்கலாம். //

ஓசியல எவன் கெடைப்பான்...... அவங்கோட தொத்திகிலாமுங்கிரதுலையே குறியா இரு....!! இதுக்கு இப்புடி ஒரு பிட்டு....!!

கவுண்ட மணி டயலாக்குதேன் ஞாபகத்துக்கு வருது....

" சுக்கு காப்பி குடிக்கிற நாயிங்குளுக்கு ... நெஸ் காப்பி கேக்குதோ....... "

//20 வினாடிகளுக்கு மேல் சிக்னலில் காத்திருக்க வேண்டியிருந்தால் வாகனத்தை ஆஃப் செய்யலாம். //

ஆமாங்கோவ் . .. திரும்பி வண்டி ஆன் ஆகுலைனா.... மகேசுக்கு போன் போட்டு கூப்புடுங்க... தலைவரு வந்து வண்டிய தள்ளி உடுவாரு...!!// குப்பைகள் //

ஏனுங் மாப்ள... உங்க பேரு என்னன்னு யாராச்சும் கேட்டாங்களா ..?
// ஷாப்பிங் லோக்கலாக வீட்டுக்கு அருகிலேயே இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம். வண்டியை எடுக்கவேண்டாமல்லவா? //

எதுக்கு... வண்டிய ஆட்டைய போடுரதுக்கா....?
// பொருட்களை வாங்கிவிட்டு கேரிபேக் கேட்டுக்கொண்டிருக்காதீர்கள். துணிப்பையை உபயோகிக்கலாம். //

பட்டிகாட்டு கண்ட்ரி ப்ரூட் 'ன்னு நிருபிச்சுட்ட பாத்தியா ......!! இதேன்னோ உங்கூரா...?? எட்டனா தீப்பெட்டி வாங்க மஞ்ச வலப்பைய்ய தூக்கீட்டு கடைக்கு போறதுக்கு...!!

ஹே .... வீ ... ஆர் .. இன்... மெட்ரோ சிட்டி மேன் ......!! யூ ... வில்லேஜ் .... ப்ரூட் ....... !!/// முடிந்தால் மரம் நடுங்கள். :) //

எங்க ... கடல்லையா .....??
// இன்னும் எத்தனையோ வழிகள் இருக்கின்றன. உங்களுக்குத் தெரிந்தவற்றைப் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். //

தெரிவிச்சுட்டா போச்சு....!!
// இது நடக்க வேண்டுமா? //

ஏண்டா மாப்ள... நீயென்னோ வெட்னரி டாக்டரா.....? கரடிய நடக்க வெக்கறதுக்கு....?
// A race begins in a single step! //

ஆபீசுல எவளாச்சும் இங்குலீசுல பேசுனா... அத மனப்பாடம் பண்ணி வெச்சுபோட்டு .. பத்து தடவ... வெள்ள பேப்பருல எழுதி பாத்து போட்டு... இங்க வந்து அதையவே பீட்டரு உடவேண்டியது...!!


இந்த பொழப்புக்கு............
......
.... அந்த புள்ளகிட்டயே நீ டூசனு போலாம்...!!

// இது நாம் அனைவரும் ஒன்றாக ஓடியாக வேண்டிய ரேஸ். //

ஆமாங்கோவ்..... எல்லாரும் ஓடுங்கோவ்.....


மொதோ பிரைசு.... : நமீதா யூஸ் பண்ணுன சோப்பு டப்ப்பா......

ரெண்டாவது பிரைசு ... : நயன்தாரா யூஸ் பண்ணுன பழைய செருப்பு.....

மூணாவது பிரைசு ... : அட்டு பிகரு அம்சா யூஸ் பண்ணுன பழைய

பேன் சீப்பு ...// முதலடியை எடுத்துவைப்போம் வாருங்கள்! //

வழிக்கி உட்டு குப்பற உளுந்துராதடியோவ் மாப்ள ........!! போயிட்டு வாரமுங் மாப்ளைங்கோவ்....!!

நன்றி கலை.

புலம்பி என்ன பயன் என்று கேட்பதை விட, பேரழிவைத் தள்ளிப்போட என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம்.

வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி பரணி அண்ணா.

Dear Mr.No,


எனக்குத் தெரிந்தவற்றை பகிர்ந்துகொள்ளலாமே என்று எழுதியது தான் இந்தப் பதிவு. அதனால் தான் மிகவும் சாதாரணமாக வந்திருக்கிறது என நினைக்கிறேன். விரைவில் விவரமாகப் பதிவிட முயல்கிறேன். தவிர, நானும் இயற்கையைப் பற்றி எழுதினேன் என்று சொல்லிக்கொள்வதற்காக இல்லை இந்தப் பதிவு.

நன்றி!

வருகைக்கு நன்றி அனானி நண்பரே.

லவ்டேல் மாம்ஸ்,

நெம்ப நன்றி.

//2012 என்று ஒரு படம். ட்ரெய்லர் பார்த்திருப்பீர்கள். 2012ம் வருடத்துடன் மயன் காலண்டர் முடிந்துவிடுகிறது, பைபிளிலும் 2012ல் உலகம் அழிந்துவிடும் என்று சொல்லப்பட்டுள்ளது//

என்ன மகேஷ் பயமுடுத்தறீங்க?:'(

நல்ல ஐடியா கொடுத்திருக்கீங்க..வாழ்த்துக்கள்..

அன்புடன்,
அம்மு.

உங்களின் இந்த பதிவு சமூதாய அக்கறையுள்ள‌ப் பதிவு. கூடி தேர் இழுப்போம் ...வாழ்த்துக்கள்.

@ நன்றி Ammu

@ நன்றி கருணாகரசு

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More