September 03, 2009

12ம் வகுப்பு படிக்க ஒரு கோடி ரூபாய்!

அபியும் நானும் படத்தில் ஒரு காட்சி வரும். பிரகாஷ்ராஜ் தன் குழந்தையை பள்ளியில் சேர்க்கச் சென்றிருப்பார். அப்பொழுது பள்ளி முதல்வர் "நீங்க Non Refundable Caution Deposit ஒரு பத்தாயிரம் கட்டிடுங்க. அதுக்கப்புறம் ஒரு டெர்முக்கு ஆயிரத்து அறுனூறு ருபாய்" என ஆரம்பித்து அடுக்கிக்கொண்டே போவார். இன்று அனேகமாக எல்லா தனியார் பள்ளிகளும் இந்த ரீதியில் தான் வசூலித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், அது எல்லாம் சும்மா என்று சொல்லும் அளவுக்கெல்லாம் இந்தியாவில் பள்ளிகள் இருக்கின்றன தெரியுமா?

உதாரணத்துக்கு ஊட்டியில் உள்ள பிரபல பள்ளி ஒன்றின் கட்டண விவரங்கள்! (எல்லாம் ரூபாயில்)

பதிவுக்கட்டணம் - 10,000
அனுமதிக்கட்டணம் - 20,000
கேபிடல் மற்றும் வளர்ச்சிக்கட்டணம் - 30,000

இவை மூன்றும் ஒரு முறை செலுத்த வேண்டியது. திருப்பித்தரப்பட மாட்டாது! இனி பள்ளிக் கட்டணங்கள்

வகுப்பு ஒரு டெர்ம் வருடத்துக்கு( x 2) மொத்தமாக
1 முதல் 6 1,51,000 3,02,000 18,12,000
7 முதல் 10 2,33,500 4,67,000 18,68,000
11 & 12 3,50,000 7,00,000 14,00,000

மொத்தம் 50,80,000 ரூபாய். அரை கோடி!
இது தவிர, விடுதிக் கட்டணம், சாப்பாடு, போக்குவரத்து, பிறந்தநாள் கொண்டாட்ட செலவு, புத்தகம், சீருடை, நீச்சல், கராத்தே என டவுசர் கிழியும் அளவுக்கு செலவு! இதெல்லாம் சேர்த்து வருசம் ஒரு ரெண்டு லட்சமாவது செய்துவிடமாட்டார்கள்? ஆக பன்னிரெண்டுக்கும் 24 லட்சங்கள்! Caution Deposit ஒரு இரண்டு லட்சம். மொத்தமாக கிட்டத்தட்ட 75 லட்சம். பன்னிரென்டு வருடமும் கட்டண உயர்வு இல்லாமல் இருந்தால்! 10% வரை கட்டண உயர்வு இருக்கக்கூடும் என்று தெளிவாக சொல்லிவிடுகிறார்கள். இது இந்திய மாணவர்களுக்கு. வெளிநாடு வாழ் இந்தியக் குழந்தைகளுக்கு கட்டணம் இன்னும் அதிகமாக இருக்கும். கிட்டத்தட்ட இரண்டு மடங்கு. ஒரு கோடி ரூபாய்.

மலைப்பாக இருக்கிறது. பள்ளிப் படிப்பை முடிக்க ஒரு கோடி ரூபாயா ? அதுவும் நமது இந்தியாவிலா? நானறிய அரசுப்பள்ளியில் பன்னிரெண்டு வகுப்பு வரை படித்து முடிக்க பத்தாயிரத்துக்கு மேல் ஆகாது. அதுவே அதிகம். அது இல்லாமல் பள்ளிப்படிப்பைத் தொடர முடியாத குழந்தைகள் ஏராளம். ஆனால், இந்த பள்ளியில், முதல் வகுப்பைத் தாண்ட மூன்று லட்சம் ரூபாய்கள். (எனது பொறியியல் படிப்பின் முழுக் கட்டணத்தைப் போல் ஆறு மடங்கு). ஒரு புறம் ஆரம்பக்கல்வியைக் கூடத் தாண்ட முடியாத ஏழைக்குழந்தைகள். மறுபுறம் பள்ளிக்கல்விக்கே அரை கோடி செலவழிக்கும் ராஜா வீட்டுக்கன்னுக்குட்டிகள். இந்த ஏற்றத்தாழ்வு உண்மையிலேயே மலைக்க வைக்கிறது.

என்ன சொல்ல? பல் இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்!

12 கருத்து:

//என்ன சொல்ல? பல் இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்! //
இது நச்...
இதெல்லாம் நினைச்சா எனக்கு இப்பவே வயிறு கலங்குது...
அரசுப் பள்ளியில சேர்த்து விட்டுற வேண்டியதுதான்.இன்னும் ஏகப்பட்ட ப்ளான் இருக்கு...தனியாச் சொல்றேன்...

பேராசை பெறு நஷ்டம் தான்.. அப்படி படித்து என்ன சாதிக்க போரோம்...

பேசாம நம்மளே பத்தாவது வரை சொல்லிக் கொடுத்துடலாமா ?

நன்றி பரணி அண்ணா!

ஏஞ்சாமி? ஏன்?
அப்ப என் குழந்தையை ஊட்டி காண்வென்ட்டில் படிக்க வைக்க முடியாதா?
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...........

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

//ஒரு புறம் ஆரம்பக்கல்வியைக் கூடத் தாண்ட முடியாத ஏழைக்குழந்தைகள். மறுபுறம் பள்ளிக்கல்விக்கே அரை கோடி செலவழிக்கும் ராஜா வீட்டுக்கன்னுக்குட்டிகள். இந்த ஏற்றத்தாழ்வு உண்மையிலேயே மலைக்க வைக்கிறது.//

உண்மைதான்.இதற்க்கெல்லாம் எப்போது விடிவு காலம் வருமோ...?

பல்லிருக்கிறவன புடிச்சி நீ பக்கோடா சாப்பிடு. வேணாங்கலை. இந்த பத்து பேருக்கு பழைய சோத்துக்கு காச கக்குன்னு கறந்தாலாவது பரவால்ல. எவன் செய்யப் போறான். செய்ய முடியிறவன் பேரனோ பேத்தியோ அங்க படிக்கும்ல.

The quality will be good. spending on children education is an investment. These students have good attitude, English fluency and this education will help them to get highly paid job later in their life.

ஊட்டி குளுருக்கு கில்மாவோட படிக்கிரதுகுத்தேன் இவ்ளோ காசு கட்டுறது...!!
சும்மா அண்ணாச்சி கட மலிக சாமானம் லிஸ்ட்டு மாதிரி பதிவ போட்டா பத்தாது...!! ஊடியில படுச்ச்சவிங்களுக்குத்தேன் அந்த அருமை தெரியும்....!!


கடும் கண்டனங்களுடன்....




லவ்டேல் மேடி ,
துணை செயலாளர் ,
த.ஷ.கி.மு.பே ( தலைவி . ஷகிலா . கில்மா. முன்னேற்ற . பேரவை )
ஈரோடு மற்றும் ஊட்டி ( கேத்தி ) கிளை.

@ நன்றி சுரேஷ்குமார்.

@ நன்றி வானம்பாடி. நன்றாகச் சொன்னீர்கள்.

@ நன்றி ராம்ஜி

@ நன்றி மாமா. ஷகிலா முன்னேற்றமா? தமிழ் அக்கா நம்பெர் கொடுங்க, கொஞ்சம் பேசனும்.

// கலையரசன் said...
ஏஞ்சாமி? ஏன்?
அப்ப என் குழந்தையை ஊட்டி காண்வென்ட்டில் படிக்க வைக்க முடியாதா?
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........... //

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... :)))))))) விடுங்க விடுங்க....

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More