ரொம்பவும் எதிர்பார்த்த கந்தசாமி படம் பார்த்தவர்களை நொந்தசாமிகளாக்கி விட்டாராம். ஆனால் நாம் தான் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோமே! இனி வரப்போகும் படங்களையும் ஒரு மாதிரி எதிர்பார்த்து வைப்போம். ஹ்ம்ம்ம்ம் எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டோமா?
1) எந்திரன்

சூப்பர் ஸ்டார் படம். எதிர்பார்ப்புக்கு கேட்கவா வேண்டும்? சங்கர் சார், சிவாஜில விட்டதை இதிலே பிடிக்கணும்! ஆனால் நான் எதிர்பார்ப்பது சுஜாதாவுக்காக. பாவம் மனிதர் ஆனந்த தாண்டவத்தில தான் மொக்கைவாங்கிட்டார். இதிலாவது அவரை கௌரவியுங்கள்!
2) உன்னைப் போல் ஒருவன்

வெட்னெஸ்டே என்ற இந்திப் படத்தின் தமிழ் வடிவம். உலக நாயகனுக்காக வெயிட்டிங்கோ வெயிட்டிங்.
3) அசோகவனம்

விக்ரம், ஐஸ்வர்யா ராய் போன்ற பழம்பெரும் நடிகர்கள் நடிக்கும் படம். ஏதோ இராமாயணக் கதையாம். எப்படியும் இந்தியில் எடுத்து தமிழில் டப் செய்யப்போகிறார். "குரு" போல! எனக்கு சுவாரஸ்யமில்லை. ஆனால் ஊரே எதிர்பார்ப்பதால் நானும் எதிர்பார்க்கிறேன்.
4) ஆயிரத்தில் ஒருவன்

வரும், ஆனால் வராது டைப் படம் இது. கொஞ்ச நாள் போனா மறந்தே போயிடும் செல்வா... சீக்கிரம் இறக்குங்க! பாவம் கார்த்தி! சோழ நாடு, தாய்தின்ற மண் என பாடல்கள் ஆவலைத் தூண்டுகின்றன. பார்த்திபன் கேரக்டருக்காகவும் காத்திருக்கிறேன்.
5) கோவா

வெங்கட் பிரபு இயக்கம். ஏதோ ஹாலிவுட் நடிகை ஒருவர் நடிக்கிறார் என்றெல்லாம் கிளப்பிவிட்டார்கள். வெங்கட் ஹாட்ரிக் அடிப்பாரா என்று பார்ப்போம்.
6) சுல்தான் தி வாரியர்

அனிமேஷன் படமாம். அதுவும் முப்பரிமாணத்தில். இந்த நுட்பத்தில் இந்தியர்கள் எந்த நிலையில் தான் இருக்கிறார்கள் என்று பார்ப்போமே!
7) சென்னையில் ஒரு மழைக்காலம்

இது வருமா வராதா என்று கௌதமுக்குத் தான் வெளிச்சம். ஸ்டில்ஸ் எல்லாம் கலர்ஃபுல்லாக இருக்கிறது. கௌதமுக்காக வெயிட்டிங்!
8) மதராஸப்பட்டினம்

ஏதோ பீரியட் படம் போல இருக்கிறது ஸ்டில்சைப் பார்த்தால். டைரக்டர் விஜய். "பொய் சொல்லப் போறோம்" எடுத்தாரே அவர் தான். எதற்காக என்று தெரியாமலேயே கன்னா பின்னாவென எதிர்பார்க்கிறேன்.
9) அங்காடித் தெரு

வெயில் படம் மூலமாக ஆனந்த அதிர்ச்சி கொடுத்தவர். இந்த படத்தில் என்ன கதைக்களம் என்று பார்ப்போம்.
10) நான் அவன் இல்லை 2

ஹி ஹி ஹி!
இந்த பத்துப் படங்கள் மட்டுமல்லாது, தளபதியின் வேட்டைக்காரன் (இதுவாவது கை கொடுக்குமா?) மற்றும் சின்னத் தளபதியின் "கண்டேன் காதலை (ஜப் வி மெட்டின் தமிழ்)" படத்தையும் வழி மேல விழி வைத்துக் காத்திருக்கிறேன்!
கழுத காசா பணமா? வெயிட் பண்ணுவோம்.
10 கருத்து:
இந்த அனைத்துப் படங்களுக்கும் விமர்சனம் இங்கே உள்ளது. சுட்டியைத்தட்டி படித்துப் பாருங்கள்
ஆதவனை,அசலை விட்டு விட்டீர்களே காசா பணமா அதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
@ நன்றி சுரேஷ் அவர்களே... அனைத்துப் படங்களுக்கும் ஒரே விமர்சனம் பொருந்தும் :)
@ நன்றி முரளி அண்ணா!
//ஆதவனை,அசலை விட்டு விட்டீர்களே காசா பணமா அதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். //
எதிர்பார்க்கலாமே!
கழுத காசா பணமா? வெயிட் பண்ணுவோம்..
ஆனா கழுத விமர்சனம் படிச்சிட்டு, படத்தை பார்ப்போம்!
ஏன்னநாஞ் ஜொள்ரது?
// கலையரசன் said...
கழுத காசா பணமா? வெயிட் பண்ணுவோம்..
ஆனா கழுத விமர்சனம் படிச்சிட்டு, படத்தை பார்ப்போம்!
ஏன்னநாஞ் ஜொள்ரது? //
சரீங்கண்ணா!
// எந்திரனும் உன்னைப் போல் ஒருவனும் //
என்னடா மாப்ள ... திரை விமர்சனமா....? கால் மேல கால் போட்டுக்கிட்டு விமர்சனம் சொல்லுறியா..... ?? இல்ல குப்பற படுத்துகிட்டு..... கையில மைக்க வெச்சுகிட்டு .... மைக் ஒன்.... மைக் டூ.... மைக் த்ரீ ... ன்னு சொல்லுறியா....?
// ரொம்பவும் எதிர்பார்த்த கந்தசாமி படம் பார்த்தவர்களை நொந்தசாமிகளாக்கி விட்டாராம். //
டிக்கிட்டு வாங்குன காச .... அந்த கந்தசாமிய வேண்டிகிட்டு உண்டியல்ல போட்ட மாதிரி நெனச்சிகிட்டு .... ஸ்ரேயாவ மட்டும் ஜொள்ளு உடாம பாத்துட்டு வரவேண்டியதுதான்.....
//ஆனால் நாம் தான் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோமே! //
அப்புடியா...
// ஹ்ம்ம்ம்ம் எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டோமா? //
அதுதான.....
// சூப்பர் ஸ்டார் படம். //
ரிபீட் தி வோர்ட்........ டே மாப்ள போனுல நா அடிக்கடி சொன்னது ஞாபகம் வருதா.....???
// சங்கர் சார், சிவாஜில விட்டதை இதிலே பிடிக்கணும்! //
ஆமாங்கோவ்.... அதுல ஸ்ரேயாவ உட்டுபோட்டு ... இதுல ஐஸ்ஸ புடுச்சுருக்காரு.... வெளங்குன மாதிரிதான்.....!! என்ன ஆறுதல்னா.... " சிக்ஸ்த் சென்ஸ் " படத்தோட டையரக்டர் " க்னைட் ஷேமலன் " இதுல எதோ கொஞ்சம் இன்வால்வ் ஆயிருக்காராம்....!! நம்ம பாண்டிச்சேரி காரரோட கைவண்ணம் எப்புடி இருக்குமின்னு பாக்கலாம்...!!
// உலக நாயகனுக்காக வெயிட்டிங்கோ வெயிட்டிங். //
இதுலையும் பிசின் நடுச்சிருக்காங்களா ....? இருந்தா படம் கஷ்ட்ட காலம்தான்..!!
// பழம்பெரும் //
நோட் திஸ் பாயின்ட்.....
// ஆனால் ஊரே எதிர்பார்ப்பதால் நானும் எதிர்பார்க்கிறேன். //
அப்போ ஊருக்குள்ள எவுனுக்கும் வேல வெட்டி எதுவும் இல்ல......!!
//பார்த்திபன் கேரக்டருக்காகவும் காத்திருக்கிறேன். //
சொல்ட்டாருயா.....
// ஏதோ ஹாலிவுட் நடிகை ஒருவர் நடிக்கிறார் என்றெல்லாம் கிளப்பிவிட்டார்கள். //
நாயுடு " ஹால் " ல்ல சன் பப்புடி வித்துகிட்டு இருந்த செம " உட் " பிகர இந்த படத்துல நடிக்க வெச்சிருக்காங்க... !! அதுனாலதான் " ஹால் + உட் " சேர்ந்து " ஹாலிவுட் " டாக மருவி ... ஹாலிவுட் நடிகைன்னு டுபாகூர் உட்டுருக்காங்க ..... !!
// கௌதமுக்குத் தான் வெளிச்சம். //
எனுங் சார்... அவுருதான் டார்ச் வெச்சுருக்காரா.....?
// ஸ்டில்ஸ் எல்லாம் கலர்ஃபுல்லாக இருக்கிறது. //
ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்...... சொல்லிகிட்டாங்க.....!!
// ஏதோ பீரியட் படம் போல இருக்கிறது //
அய்யய்யோ....... !! அப்போ 20 பாட்டு 30 பாட்டு இருக்குமா....?
// கழுத காசா பணமா? வெயிட் பண்ணுவோம். //
வாட் இஸ் யுவர் நேம் மின்னு யாராச்சும் உன்ன கேட்டாங்களா.....?
Maams... mudiyala...:)
Suuuuuuuuuuuper......!
good collection....
Thank you வழிப்போக்கன்...
//நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//
Post a Comment